*வாழ்க வளமுடன் என்பது எதைக் குறிக்கிறது*
வாழ்க என்பது வாழ்த்துச் சொல்.
வளமுடன் என்பது ஒரு நிறைவுத் தன்மையைக் குறிக்கும்.
வாழ்க வளமுடன் என்று ஒருவர் வாழ்த்தினால் நிறைவுத் தன்மையுடன் வாழ்க என்று ஒருவர் வாழ்த்துகிறார் என்று அர்த்தம்.
ஒருவன் எப்போது நிறைவுத் தன்மை அடைய முடியும்?
தேவைகள் பூர்த்தியடையும் போது நிறைவுத் தன்மை ஏற்படும்.
தேவைகளை எப்படி பட்டியலிடுவது.
மனிதனின் பொதுவானத் தேவையை எளிதாக பட்டியலிட்டு விடலாம்.
ஒருவன் மகிழ்ச்சியாக வாழ ஐந்து தேவைகள் முக்கியம்.
1.உடல் நலம்
2.நீளாயுள்
3.நிறைச்செல்வம்
4.உயர்புகழ்
5.மெய்ஞானம்.
இந்த ஐந்தையும் உணர்ந்து அனுபவித்து கடந்து வாழும் வாழ்க்கைதான் முழுமையான வாழ்க்கை.
உலகின் எல்லா இன்பங்களும் இந்த ஐந்தில் அடங்கிவிடும்.
வாழ்க வளமுடன் என்று ஒருவர் உச்சரித்து வாழ்த்தும் போது, நீங்கள் இந்த ஐந்து செல்வங்களையும் பெற்று வாழுங்கள் என்று வாழ்த்துகிறார்.
இது வெறும் வார்த்தை ஜாலமல்ல ! இதுனூடே ஒரு ஆழமான உளவியல் தன்மை ஒளிந்து இருக்கிறது. அடுத்து இதன் பின் ஒரு அறிவியல் தன்மாற்றமும் இருக்கிறது.
அது என்ன ?
வாழ்க வளமுடன் என்று இன்னொரு முறை உச்சரித்து பாருங்கள். உங்களின் உள் நாக்கு அதாவது தொண்டையின் உள் மேல் பகுதியில் “ழ்” எனும்போது ஒரு அழுத்தம் நிகழ்வதை உங்களால் உணர முடியும்.
உள்நாக்கின் உச்சியில் அதாவது நெற்றிக்கும், பின் மண்டையில் பிடறிக் கண்ணுக்கும் நேர் கோட்டில் ஒரு சூட்சுமம் ஒளிந்துள்ளது.
அந்த சூட்சுமம் இந்த பிரபஞ்சத்தோடு நேரடியாக தொடர்புகொண்டிருக்கும் சக்தி.
உங்களின் எண்ணங்களில் எழும் தேவைகளை பிரபஞ்சத்தில் கட்டளையாக மாற்றி அதனை பெற்றுத் தரும் சூட்சுமம் அது.
உங்கள் எண்ணம் வலிமைமிக்கது என்றால், அது உங்கள் மூலமாகவே செயலுக்கு வந்துவிடும். கொஞ்சம் பலகீனமான எண்ணம் என்றாலும் நீங்கள் கவலைப்படத்தேவையில்லை...
நீங்கள் பேரப்பிள்ளைகளை எடுப்பதற்குள்ளாவாவது செயலுக்கு வந்துவிடும். எண்ணம் எப்போது வீணாவது இல்லை.
எண்ணமும் வீணாவது இல்லை. அதனால் எண்ணுவதை வலிமையாக எண்ணுவது சாலச்சிறந்தது.
அந்த சூட்சுமப் பகுதியை அறிவியலில் பீனியல் சுரப்பி என்பார்கள். ஆன்மிகத்தில் துரியம் என்பார்கள்.
வாழ்க வளமுடன் உச்சரிக்கும் போதும் உங்களின் துரியமையம் கட்டளைகள பிரபஞ்சத்திற்கு அனுப்பிக்கொண்டே இருக்கும்.
ஒருவர் உங்களை வாழ்த்தும் போது நீங்கள் வளமுடன் வாழ கட்டளைகளை அவர் பிரபஞ்சத்திற்கு அனுப்பிக் கொண்டே இருக்கிறார் என்று அர்த்தம்.
வாழ்க வளமுடன் வெறும் வாழ்த்துச் சொல் அல்ல...
அது ஒரு மந்திரச் சொல்.
அது ஒரு மந்திரச் சொல்.
Gudmrng friends, brothers and sisters.. Have a blessed day ahead..
ReplyDeleteGood morning ano sis and friends Ithu vethathiri maharishi aruliyathu. Simple yoga but very effective.
ReplyDeleteGudevng Revathi sis.. :)
Delete