Skip to main content

கருணையின் தேவதை..

அவள் பெயர் ஐடா ஸ்கேடர்(Dr. Ida Sophia Scudder): அமெரிக்க பெண்மணி. அவளின் அப்பாவும் அம்மாவும் மருத்துவர்கள் ஆனால் மிஷனரிகள்
அக்காலத்தில் இந்தியர்களின் அடிதட்டு மக்களுக்கு சேவை செய்ய வந்த பலரில் இவர்களும் அடங்குவர். அப்படித்தான் 14 வயது நிரம்பிய ஐடாவும் இந்தியா வந்தாள், வந்த  இருமாதங்களில் அவளின் அன்னை அமெரிக்கா திரும்பிவிட்டார்
தந்தையுடன் வேலூரில் விடுமுறை கழித்துகொண்டிருந்தாள் அந்த சிறுமி. அந்த இரு சம்பவங்களும் அவளை புரட்டிப் போட்டன‌
என்ன சம்பவம்?
அந்த நள்ளிரவில் அவர் வீட்டு கதவினை தட்டுகின்றான் ஒரு பிராமணன், அவனின் கண்கள் டாக்டரம்மாவினை தேடுகின்றன. ஐடாவின் தகப்பனார் என்ன என்கின்றார்? என் மனைவிக்கு பிரசவம் டாக்டரம்மாவினை அனுப்ப முடியுமா?
இல்லை அவள் அமெரிக்கா சென்றுவிட்டாள் நான் வரட்டுமா என்கின்றார் அவர்
இல்லை அய்யா, எங்கள் சமூகத்தில் பெண்ணுக்கு பெண்ணே பிரசவம் பார்க்க வேண்டும் , கட்டுப்பாடு அது என்னால் மீறமுடியாது என கண்களை துடைத்துகொண்டே செல்கின்றார்
மறுநாள் அந்த கர்பிணியின் இறந்த உடலை அந்த ஐடாவின் வீட்டு முன்னால் எடுத்து செல்கின்றார்கள். குற்ற உணர்வினால் அத்தந்தை அழ, தன்னையறியாமல் ஐடாவும் அழுகின்றாள்
இருநாள் கழித்து ஒரு இஸ்லாமியருக்கு அதே தேவை. ஆனால் அதே கட்டுப்பாடு. டாக்டரம்மா இல்லாததால் கண்களை துடைத்துவிட்டு செல்கின்றார் அந்த இஸ்லாமிய கணவன்
மறுநாள் அதே ஊர்வலம்
மனதால் வெடித்து அழுதாள் ஐடா, என்ன தேசமிது? பெண்களை படிக்க வைக்கவும் மாட்டார்களாம், ஆனால் பெண்ணுக்குப் பெண்தான் பிரசவம் பார்க்க வேண்டுமாம்
அவளுக்கு ஏதாவது அம்மக்களுக்கு செய்ய தோன்றிற்று, நிச்சயம் இங்கு மகளிரை படிக்க வைக்க முடியாது, நாமே டாக்டராகி இவர்களோடு தங்கிவிட்டால்?
அந்த வைராக்கியம் அன்றே வந்தது, அமெரிக்கா சென்று படித்து டாக்டரனாள், பெரும் வேலைவாய்ப்பு வந்தாலும் அவள் கண்களில் அந்த இரு ஊர்வலங்களும் வந்து அவள் வைராக்கியத்தை அதிகரித்துகொண்டே இருந்தன‌
திரும்பி அதே வேலூருக்கு வந்தாள், இனி ஒரு கர்பிணியினைச் சாகவிடமாட்டேன் என சொல்லி அந்த மருத்துவனையினைத் தொடங்கினாள்
இந்தியாவில் மகளிருக்கான முதல் மருத்துமனையாக அதுதான் உதித்தது. 
பெண்கள் தயக்கமின்றி அவளிடம் சிகிச்சைகு வந்தனர். எந்த மத கட்டுப்பாடுகளும் அதற்குத் தடையாக இல்லை
இந்நாட்டு பெண்களை படிக்கவிடவில்லை என்றால் என்ன, நான் படித்து வந்து இப்பெண்களைக் காப்பாற்றுவேன் எனச் சூளுரைத்து அதை செய்தும் காட்டினாள் அவள்.
அவள் பெண்ணுரிமை பேசவில்லை, கொடி பிடிக்கவில்லை, புரட்சி செய்யவில்லை மாறாக தன்னால் அந்தகால யதார்த்த வாழ்விற்கு எதை செய்ய முடியுமோ அதைச் செய்தாள்
அதற்கு அவள் கொடுத்த விலை அவளின் வாழ்வு.
நிச்சயம் தனி ஆளாகத்தான் போராடினாள், பின்பே பல சேவை மருத்துவர்கள் அவரோடு இணைந்தனர்.
அவள் தனியே ஏற்றிய மெழுகுவர்த்திதான் இன்று மிக பிரகாசமாக ஒளிகொடுத்துகொண்டிருக்கின்றது
அதுதான் வேலூர் கிறிஸ்தவ மருத்துவகல்லூரியாக இன்று வளர்ந்து நிற்கின்றது, உலகின் மிகத் தரமான மருத்துவமனை என அதற்கு இன்றும் பெயர்
அப்பல்லோ, குளோபல், ராமசந்திரா என பல வந்தாலும் இன்று மிக பெரியதும், மிக மிக தரமான சிகிச்சை கொடுப்பதும் அந்த வேலூரில் சிஎம்சி மருத்துவமனையே
அவள் யார்? அவளுக்கும் இம்மக்களுக்கும் என்ன சம்பந்தம்?
ஆனால் நம் மக்களுக்காக அழுதிருக்கின்றாள், நம் மக்களின் சாவினை தடுக்க டாக்டராகி திரும்பி வந்து இங்கு தன் வாழ்வினை அர்பணித்திருக்கின்றாள்
அன்னை தெரசாவிற்கு அவள்தான் வழிகாட்டி
அந்த வணங்கதக்க பெண்மணியின் உழைப்பில் உருவான அந்த மருத்துவமனைதான் இன்று 100ம் ஆண்டுவிழாவினை கொண்டாடுகின்றது
ஜனாதிபதி அதற்குத்தான் வந்திருந்தார்
அந்த வெளிநாட்டு தெய்வத்தை பற்றி ஒருவார்த்தை அவர் சொல்வார் என்றோ, இல்லை இந்த பத்திரிகைகள்தான் அந்த பெண்ணை சொல்லுமா என தேடிபார்த்தால் ஒன்றுமே இல்லை
அவளின் மகத்தான தொண்டிற்கு இத்தேசம் கொடுக்கும் அஞ்சலி இதுதானா?
அவளின் கல்லறை அதே வளாகத்தில்தான் இருக்கின்றது, நிச்சயம் இந்த நூற்றாண்டு விழாவில் அவள் கல்லறைக்கு அரசு மரியாதை செலுத்தபட்டிருக்க வேண்டும்
இங்கு நாட்டினை சுருட்டி தனக்கு எஸ்டேட் கட்டிய நடிகைக்கு மணிமண்டபம் கட்டுபவர்களுக்கு தியாகத்தின் மகத்துவம் எப்படி தெரியும்?
ஒரு குற்றவாளிக்கு மணிமண்டபமாம், எங்கிருந்தோ வந்து இங்கு வந்து உழைத்து இன்றுவரை மக்கள் நலம்பெற பெரும் தொண்டு அற்றியிருக்கும் அவருக்கு ஓன்றுமில்லையாம்
இந்த தேசம் மிக மிக நன்றிகெட்ட தேசமாக சென்றுகொண்டிருக்கின்றது
நன்றி கெட்டவர்கள் செல்லட்டும்
அந்த வேலூர் மருத்துவமனை ஐடா ஸ்கேடரின் கனவு, கடந்த 100 ஆண்டுகளாக எத்தனையோ லட்சம் மக்களை அது காப்பாற்றிகொண்டிருக்கின்றது, இன்றுவரை இந்த நொடிவரை எத்தனையோ பேர் நலம்பெற்று கொண்டிருக்கின்றனர்
அந்த பலன் பெற்றவர்கள் நிச்சயம் மனதில் வாழ்த்துவார்கள், அவர் தொண்டையும் அந்த மருத்துவமனை பற்றி அறிந்தவர்களும் இந்த 100ம் நினைவு ஆண்டில் அவளுக்கு மாபெரும் அஞ்சலியினை செலுத்தலாம்
இங்கு வந்தவர்கள் எல்லாம் மதம் பரப்ப வந்தவர் அல்ல, உண்மையிலே இம்மக்களுக்கு ஏதும் செய்ய வாழ்வினை அர்பணித்தவர்கள்
அதில் பென்னி குயிக்கும், ஐடா ஸ்கேடரும் எந்நாளும் நினைவில் நிற்பார்கள்
ஆனாலும் ஜனாதிபதி ஒருவார்த்தை அவரை குறிப்பிட்டிருக்கலாம், தமிழ அரசு பிரநிதிகளும் அவள் பெயரை சொல்லவில்லை. அப்படி அவள் இந்நாட்டு மக்களுக்கு என்ன துரோகம் செய்தாள்??
அவள் வெளிநாட்டுகாரியாகவும், கிறிஸ்தவராகவும் இருந்ததுதான் அவளின் தவறு/
இவர்கள் சொல்லித்தான் அவள் புகழ் தெரிய வேண்டுமா? நிச்சயம் இல்லை. தொண்டு என்பதும் சேவை என்பதும் அரசியலுக்கு அப்பாற்பட்டது
100 ஆண்டுகளை கடந்து இந்திய மக்களுக்கு பணிசெய்யும் அந்த மருத்துவமனை நிற்கும் வரை ஐடா ஸ்கேடர் வாழ்வார்
வாழ்வில் நாம் கண்டு கண்ணீர் வீடும் அதிசய கிறிஸ்தவர்களில் அந்த ஐடாவும் ஒருவர்.
அந்த மருத்துவமனை 100 அல்ல, 1000 ஆண்டுகள் இம்மக்களுக்கு தொண்டு செய்யும், காரணம் அதன் அடித்தளம் மிக மிக உன்னதமான மானிட நேயம் எனும் அஸ்திவாரத்தால் அமைக்கபட்டிருக்கின்றது.
ஜனாதிபதியும் பிரதமரும் முதல்வரும் 100ம் ஆண்டில் ஐடா ஸ்கேடரை நினைவு கூறாதது அவளுக்கு பெருமையே,
அந்த கருணையின் தேவதையினை நினைத்து பார்க்காதது இவர்களுத்தான் அவமானம்.

Comments

  1. Gudmrng friends, brothers and sisters.. Have a blessed day ahead..

    ReplyDelete
  2. Good morning rev mam and frnds...☺️������

    ReplyDelete
  3. Good evg ano mam My husband passed away on 20th may.I need govt job in my family situation.How to apply the CM cell.please reply me.

    ReplyDelete
  4. Good evegood ano mam.My husband passed away in last week. l need job in my family situation.so please contact me and how to apply cm cell petition please reply me.

    ReplyDelete
    Replies
    1. Sry mam my deep condolences to you and your family.Be bold mam and lead your children to attain better future.

      Delete
    2. Hi shanthi mam..

      My heartfelt condolences to u and ur family. Please mail me to jeeziman@gmail.com. Will give u my number and will contact u..

      Delete
  5. I send you my no mail.mam pls reply me.

    ReplyDelete
  6. I send you my no mail.mam pls reply me.

    ReplyDelete
  7. I send you my no mail.mam pls reply me.

    ReplyDelete
  8. mam I send mail to you please reply me

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

COMPETITIVE EXAM FOR TET PASSED CANDIDATES - 2024

UGTRB - Teachers Recruitment Notification -pdf தமிழ்நாடு அரசு பள்ளிகளில் மற்றும் வட்டாரவளமையங்களில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் BRTE பணியிடங்களுக்கான UGTRB தேர்வு அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. 👉தமிழ்வழி இட ஒதுக்கீடு 20%  👉பணியில் இருக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 10% ஒதுக்கீடு  (NOC compulsory)  👉மாற்றுத்திறனாளிகள்  👉மூன்றாம் பாலினத்தவர் 👉69% Reservation  என அனைத்து ஒதுக்கீடு நடைமுறைகளும் முறையாக பின்பற்றப்படும்.  👉 காலிப்பணியிடங்கள் -2222 👉கல்வித்தகுதி -       BED + TNTET PAPER -2 Pass   👉விண்ணப்பம் - Online 01.11.2023 முதல் 30.11.2023 வரை  👉தேர்வு - Offline - OMR BASED  👉weightage Mark - உண்டு TET தேர்ச்சி பெற்ற ஆண்டின் அடிப்படையில் மதிப்பெண்.  ( விவரம் Notification)   As per G.O- 147 👉 கட்டாயத்தமிழ் தகுதித்தேர்வு - உண்டு  👉பாடவாரியாக தேர்வு உண்டு  👉150 கேள்வி - 150 மதிப்பெண்  👉 OC - 60 Mark தேர்ச்சி  👉BC/MBC/ DNC/ SC/ST - 40 MARK தேர்ச்சி  👉சா...

சும்மா கிடைக்கவில்லை சுதந்திரம்!!!

எத்தனை ஆண்டுகள் வாழ்கிறோம் என்பதைவிட எப்படி வாழ்கிறோம் என்பதே முக்கியம். 81 ஆண்டுகள் வாழ்ந்த எவ்வளவோ பேரைக் காலம் மறந்துவிட்டது. ஆனால் 18 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த ஒரு சுதந்திரப் போராட்ட வீரரை நினைவில் வைத்துள்ளது. குதிராம் போஸ் வங்காளப் புரட்சியாளர். இந்திய விடுதலை இயக்கத்தில் மிக இளம் வயதிலேயே புரட்சியில் ஈடுபட்டவர். ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக மாஜிஸ்திரேட் கிங்க்ஸ்போர்ட் என்பவர் மீது வெடிகுண்டு வீசி, தனது 18 ஆம் வயதில் தூக்குமேடை ஏறியவர். குதிராம் போஸ்க்கு முன் மூன்று பெண் குழந்தைகள் வீட்டில் ; ஆனால் வீட்டில் அதற்கு முன் பிறந்த இரண்டு ஆண்பிள்ளைகள் இறந்து போக இவரை தானியத்திற்கு தத்து கொடுத்தால் காப்பாற்றலாம் என்கிற நம்பிக்கையில் அம்மா தானம் கொடுத்து விட்டார் .தானியம் (குதி -வங்க மொழி ) மூலம் பெறப்பட்ட பிள்ளை என்பதால் குதிராம் ஆனார். இளவயதிலேயே அரவிந்தர்,நிவேதிதை ஆகியோரின் ஆவேசம் மிகுந்த பேச்சுகளை ரொம்ப இளம் வயதில் கேட்டு விடுதலைக்கனல் மூண்டது. யுகாந்தார் எனும் புரட்சி அமைப்பில் சேர்ந்து கிங்க்ஸ்போர்ட் எனும் ஆங்கிலேய அதிகாரிக்கு குறி வைத்தார் ;உடன் பிரபுல்லா சக்கி எனும் இன்னொருவர...

TNTET PAPER2 TAMIL QUESTIONS

This post is for Tamil questions which will include Cheyyul, Urainadai, Ilakkanam and also book back informations.. Anybody willing to post tamil questions can post here and candidates preparing for upcoming tet can make use of this, All the best..