Skip to main content

இன்றைய சிந்தனை..

தவறுவது, தவறில்லை...


தவறுகளில் இருந்து கற்று கொள்ள தவறுவதே தவறு...


எல்லா சூழ்நிலைக்கும் பொருந்தக்கூடிய ஒன்று அமைதி....


எந்த சூழ்நிலைக்கும் பொருந்தாத ஒன்று கோபம்..


எனவே, நாம் அனைத்து உயிர்களிடத்தும் அன்பாய் 

இருப்போம்...


எதையுமே யோசிக்காமல் சில நேரங்களில் சிலர் கோபப்படுவது... 


உரிமையின் வெளிப்பாடு...


எல்லாமே யோசித்து எதுவுமே பேசாமல் மெளனமாய் இருப்பது... 


உறவு நிலைக்க வேண்டும் என்ற நிலைப்பாடு...


மனசு சரியில்லை என்ற எண்ணம் தோன்றும் போது, மனம் சரியாக இருக்கிறது என்றே அர்த்தம்...


ஏனென்றால் எப்போதும் மனது தன் தவறை மறைத்து, யார் மீதாவது குற்றம் சாட்டுவதில் மிகவும் வல்லமை படைத்தது...


முள்ளை மிதித்து விட்டேன் என்ற உண்மையை மறைத்து, முள் தேடி வந்து குத்தியதுபோல முள்ளு குத்திவிட்டது என்றே சொல்லும்...


அதே போல தன்னிடம் இருக்கும் குறை, புரிதலில் வேறுபாடு போன்றவற்றைக்  கூட  ஒத்துக் கொள்ளாது...


யார் கிடைப்பார்கள் அவர்கள் மீது பழியைத் தூக்கிப் போட்டு விடலாம் என்று இருந்து, உன்னிடம் இருக்கும் குறையை உனக்கே மறைப்பதில் மனத்தின் வல்லமை அதிகம்...


ஆனால்... தான்தான் சரியில்லை  என்று மனம் எப்போதாவது ஒத்துக் கொள்ளும்...


எப்போதெல்லாம் மனசு சரியில்லை என்கிற எண்ணம் தோன்றுகிறதோ, அப்போதெல்லாம் மனசு சரியாக இருக்கிறது...


எனவே, அனைவரிடமும் அன்பாய் அனுசரணையாய் பழகுவோம்...


*வாழ்க்கை வளமாகும்...*



Comments

  1. Wishing everyone a blessed Sunday..

    ReplyDelete
  2. கடைசில டெட் கதை முடிஞ்சுது

    ReplyDelete
    Replies
    1. Tet கதை முடிந்தது என்பதற்கு சான்றுள்ளதா...போகிற போக்கில் ஏதாவது பதிவிட்டுட்டுப் போவீர்களா.....அரசு பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணியில்லை என்று தற்போது கூறியுள்ளதா...சட்டமன்ற மானியக்கோரிக்கையில் சொல்லித்தான் ஒவ்வொரு ஆண்டும் பணிநியமம் வழங்கப்பட்டு வந்ததா
      ஆகஸ்ட் ஒன்றம் தேதி தான் பள்ளிகளுக்கு காவிப்பணியிட விவரம் கேட்டு கடிதம் வந்துள்ளது..கலந்தாய்வு நடந் பின்பு தானே உண்மையான Vacancy தெரியவந்து G.o போடுவார்கள்..

      Delete
    2. அடுத்த டெட் வரது ஏற்கனவே டெட் முடிச்சவங்களுக்குக்கு போஸ்டிங் இல்லனு சொல்ல சான்று தான

      Delete
    3. இதை விட வேற என்ன சான்று வேணும்

      Delete
  3. பொய்யாமொழியும் பொய்த்து விட்டார்

    ReplyDelete
  4. Tet pass pannathu waste..

    ReplyDelete
    Replies
    1. No frnd . 2023 வரை காத்திருப்போம்

      Delete
    2. வாழ்க்கையே காத்திருப்புல தான் போய்ட்டு இருக்கு

      Delete
    3. செங்கோட்டை = பொய்யாமொழி

      Delete
  5. Tet ku oru mudivu nichayama varum but mean time pg ku padinga..

    ReplyDelete
  6. பீஜி தேர்வாச்சும் வருமா மேடம்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

TNTET PAPER2 ENGLISH QUESTIONS..

English Previously discussed question... Identify the pattern of the following sentence. The boy pushed the door open. A)SVOC B)SVOA C)SVO D)SVC Ans:SVOC      The boy-subject,pushed-verb,the door-object,open-complement ('open' is an action by the verb 'pushed') Today's Questions 7th 1st term book. 1.Match the following collective nouns. 1)A cloud of.   -  a)bells 2)A bench of.  -  b)bats 3)A carillion of. -   c)crocodiles 4)A float of.    -d)bishops. A)1-a,2-b,3-c,4-d B)1-d,2-c,3-b,4-a C)1-b,2-d,3-a,4-c D)1-b,2-a,3-d,4-c 2.Form abstract noun for the following words. Clever,Heavy A)cleverly,heavily B)cleverish,heaviness C)cleverer,heavyish D)cleverness,heaviness 3.Fill in the blanks with suitable verb. Saina and Mary _______(go) to bed at 9.00p.m. A)go B)goes C)went D)will go 4.A phrasal verb is a combination of_______ A)A verb & a preposition B)A verb & A ad...

TODAY'S THOUGHT..

"தெருவிலே சுற்றிக் கொண்டிருந்த நாய் ஒன்று"......, தவறிப் போய் அரண்மனைக்குள் நுழைந்தது"....!! "அந்த அறைக்குள் நுழைந்த நாய்க்கு அதிர்ச்சி ".......!!   "அங்கே சுற்றியும் நூற்றுக் கணக்கான நாய்கள் இருந்தன"....!! "சற்று எரிச்சலடைந்து "உர்ர்.. உர்ர்.." என்றது"....!! "அந்த நூறு நாய்களும் பதிலுக்கு".... "உர்ர்.. உர்ர்.." என்றது. "அந்த நாய் கொஞ்சம் பயந்து விட்டது"...!! இருந்தும் கோபம் தாளாமல்.....,   "லொள் லொள்" என குரைக்க ஆரம்பித்தது. "எல்லா நாய்களும் சேர்ந்து குரைத்தது"......!! "அந்த நாய் குரைப்பதை நிறுத்தியவுடன்"...., "மற்ற எல்லா நாய்களும் குரைப்பதை நிறுத்திகொண்டது".....!! அந்த தெரு நாய்க்கு கோபமும் பயமும் அதிகமானது. உடனே...,   " வெறி பிடித்ததை போல் தொடர்ந்து குரைக்க ஆரம்பித்தது".....,   " பதிலுக்கு அந்த நாய்களும் குரைத்தன"....!! மற்ற நாய்களும் குமயங்கியது " இந்த நாய் பயத்தின் உச்சத்தில்...., " வெறி பிடி...

WARM WELCOME..

Welcome to Puthagasalai.. This is to thank respected admin sir, for his wonderful support inspite of so many hindrances.. Hope we will do our best to make this new website a successful one.. I have taken this big responsibility thinking all my lovable friends will support me as how they were so far..