Skip to main content

எங்களின் செல்லமான மெல்லக்கற்போனே!

உன் முகவரியை
வெளிக்கொணர
படு பிரயத்தனம்
செய்ததில் தொலைந்து
போன எம் முகவரிதான் என்ன?
பாடப்பகுதிகளை
இலகுவாக்கி
உன் பாணியில்
போதிப்பதே
எம் பணியானதென்ன?
பள்ளிக்கு நீ
வாரா பொழுதுகளில்
உன் இல்லம் வந்து
கட்டியிழுத்து கொணர்ந்தாலும்
பல நேரங்களில்
பூட்டிய உன் வீட்டின்
கதவுகளும் எமை
பரிகசிப்பதுதான் என்ன?
ஆடி மாதம்!
குல தெய்வ வழிபாடு
கூழ் வார்த்தல்
பொங்கல் வைத்தல்
அத்தனைக்கும்
முன்னிலை வகிக்கும்
உன் பெருந்தன்மைதான் என்ன?
எதிர் வீட்டுப் பாட்டி
இறப்பு!
பக்கத்து வீட்டு அக்கா
வளைகாப்பு!
உறவுமுறை சொல்ல
தெரியாத வீட்டில்
காதுகுத்து!
எல்லா சுக துக்கங்களிலும்
உன் பங்கேற்றலை
பெருமிதப்படுத்துவதுதான் என்ன?
இதையெல்லாம்
தாண்டி நீ பள்ளிக்கு
வருங்கால் உன்னுடனே
ஒட்டிவரும்
தலைவலி, வயிற்றுவலி
அதிகமாய் கொஞ்சம்
நெஞ்சுவலி,
உன் விடுப்பு  இன்னும்
முடியவில்லை என்று
எம்மை உணரவைதததுதான் என்ன?
எம்மை பாவம் என்று
நினைத்து நீ பள்ளிக்கு
வரும் தருணங்களில்
எதை புரியவைப்பது
எப்படி படிக்க வைப்பது
என்கிற அறப்போராட்டத்தில்
எம்பெயர் கூட
எம் நினைவினின்று
மறந்து போவதுதான் என்ன?
எழுத குறிப்பேடு
வேண்டாம்
எழுதுகோல்
வேண்டாம்
நீங்க வந்தா மட்டும்
போதும்!
இது இக்கால
வாத்தியாரின்
உபதேசமாகிப்
போனதுதான் என்ன?
எல்லாம் முடிந்து
தேர்வுக்கு தயாராகையில்
மழையில் கரைந்த
மணப்பெண்
அலங்காரம் போல்
கிரியேட்டிவ் வினா
வந்து எம்மை
கதிகலக்குவதுதான்
என்ன?
எல்லா ஆசிரிபருக்கும்
நடக்கும் நிகழ்வு ஒன்று
உண்டு!
அது,
வகுப்பறையில்
நுழைந்த எந்த ஒரு
அதிகாரியும்  உன்னை
மோப்பம் பிடித்து விடுவதின் மர்மம் தான் என்ன?
அவரின் தூண்டித்
துருவல்  வினாக்களுக்கும்
எந்த ஒரு சலனமும்
இன்றி
இறுகிப் போன உன்
முகபாவம்தான் என்ன!
மெல்லக் கற்போனிடத்தில்
ஆசிரியரின் தனிக்கவனம் தேவை!!!
அதிகாரியின்
அறிக்கையானதில்
தொலைந்துபோன
எம் முகவரியை தேடிக்
கொண்டிருக்கிறோம்!!!!

Comments

 1. Happy teachers day ano sis

  ReplyDelete
 2. மதிப்பிற்குரிய ஆசிரிய சொந்தங்களுக்கு மனமார்ந்த ஆசிரியர் தின வாழ்த்துக்கள்

  ReplyDelete
 3. Thank u sir wish u d same to all

  ReplyDelete
 4. Good evening Ano Mam and happy teachers day

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

சிந்தனைச் சிதறல்..

மனம் ஒருமுகப்பட.. *காற்று ஒருமுகப்பட புயலாகிறது! மேகம் ஒருமுகப்பட மழையாகிறது.!  நீர் ஒருமுகப்பட நதியாகிறது!  நதி ஒருமுகப்பட கடலாகிறது!  மனம் ஒருமுகப்பட வெற்றி உருவாகிறது!  உங்களைக் கையாள மூளையைப் பயன்படுத்துங்கள்! மற்றவரைக் கையாள இதயத்தைப் பயன்படுத்துங்கள்!  இதயத்தைக் கவர்ந்துவிட்டு, எதைச் செய்தாலும், அது இணக்கமாகவே இருக்கும்.  வாயில் உதிரும் வார்த்தைகளை விட இதயத்திலிருந்து உதிரும் வார்த்தைகளால் அன்பு மலரும்! அன்பே ஆனந்தம் தரும்.*_ கோபம் ஒரு சுயதண்டனை, அடுத்தவர் செய்த தவறுக்கோ அல்லது அடுத்தவர் தவறு செய்திருக்கலாம் என்ற நிலையிலோ நமக்கு நாமே கொடுத்துக் கொள்கிற தண்டனைதான் கோபம்!  கோபத்தில் நடிப்பிருக்கலாம்! துடிப்பிருக்கக்கூடாது!*_  *உறவுகள் கூட நிலவைப் போன்று தான்..!* *"தூரத்தில்" இருக்கும் வரை* *ரசித்துக் கொண்டாடப்படும்..!!* *எதிர்பார்ப்பை* *குறைத்துக் கொள்ளுங்கள்..!* *ஏமாற்றத்தால் சோர்வடையத்* *தேவையில்லை..!!* *அன்று "வயதைப்"* *பார்த்து வந்தது..* *இன்று "வசதியைப்"* *பார்த்து தான் வருகிறது..!!* *"மரியாதை"* *செல்லும் பாதை*  *சரியானதாக இல்லாத போது..*

அமைதி..

நாட்டில் அவ்வப்போது ஏதாவது போட்டிகள் நடத்தி வெற்றி பெறுபவர்களுக்கு சன்மானம் அளிப்பது அந்த மன்னனின் வழக்கம். ஒரு முறை அமைதி என்றால் என்ன என்பது குறித்து தத்ரூபமான ஓவியம் வரைபவர்களுக்கு மிகச் சிறந்த பரிசு வழங்கப்படும் என்று அறிவித்தான். இதையடுத்து நாட்டின் முன்னணி ஓவியர்கள் அமைதியை பிரதிபலிக்கும் வண்ணம் தத்ரூபமான பல ஓவியங்களை வரைந்து அரண்மனைக்கு எடுத்து வந்தார்கள். மன்னன் ஒவ்வொரு ஓவியமாக பார்வையிட்டுக் கொண்டே வந்தான். அமைதியை ஒவ்வொரு ஓவியரும் ஒரு மாதிரி பிரதிபலித்து இருந்தார்கள். ஒருவர் அழகான ஏரியை வரைந்திருந்தார். ஒரு அழகிய மலையின் அடிவாரத்தில் அந்த ஏரி காணப்பட்டது. மலையின் பிம்பம் ஏரியில் பிரதிபலித்து பார்க்கவே ரம்மியமாக இருந்தது. மற்றொருவர் மலர்களை வரைந்திருந்தார். பார்த்தவுடனே பறிக்கத் தூண்டும் வகையில் அம்மலர்கள் தத்ரூபமாக இருந்தது. இப்படி ஒவ்வொருவரும் அமைதியை தங்களுக்கு தோன்றியவாறு ஓவியத்தில் பிரதிபலித்திருந்தனர். ஒரு ஓவியத்தில் ஒரு மலையின் மீதிருந்து ஆக்ரோஷமாக கொட்டும் நீர்வீழ்ச்சியின் படம் வரையப்பட்டிருந்தது. அதுமட்டுமா இடியுடன் மழை வேறு பொழிந்து கொண்டிருந்தது. இது அமைதியே அல்ல.

படித்ததில் பிடித்தது..

 கடவுளிடம் ஒரு விவசாயி கடுமையாகச் சண்டைக்குப் போனான். ”உனக்குப் பயிர்களைப் பற்றி என்ன தெரியும்? நீ  நினைத்தபோது மழையை அனுப்புகிறாய். தப்பான சமயத்தில் காற்றை வீசுகிறாய். உன்னால் பெரிய தொந்தரவாக இருக்கிறது. பேசாமல், இந்த வேலைகளை விவசாயி ஒருத்தனிடம் ஒப்படைத்துவிடேன்!” என்றான். கடவுள் உடனே,  “ அப்படியா? சரி.  இனிமேல் வெளிச்சம், மழை, காற்று எல்லாம் உன் கட்டுப்பாட்டிலேயே இருக்கட்டும்” என்று வரம் அருளிவிட்டுப் போய்விட்டார். விவசாயிக்கு சந்தோஷம் பிடிபடவில்லை. அடுத்த விதைப்பிற்கான பருவம் வந்தது. ”மழையே பெய்” என்றான். பெய்தது. நிறுத்தச் சொன்னபோது,  மழை நின்றது. ஈரமான நிலத்தை உழுதான். தேவையான வேகத்தில் காற்றை வீசச் செய்து,  விதையை தூவினான். மழை, வெயில், காற்று எல்லாமே அவன் சொன்ன பேச்சைக் கேட்டன. பயிர் பச்சைப்பசேல் என வளர்ந்தது. வயல்வெளியைப் பார்க்கவே மிகவும் ரம்மியமாக இருந்தது. அறுவடைக் காலமும் வந்தது. விவசாயி ஒரு கதிரை அறுத்தான். அதனை உதிர்த்து, திறந்து பார்த்தான். அதிர்ந்தான்.. உள்ளே தானியத்தைக் காணவில்லை, மிகச் சிறிய பதர்தான் இருந்தது. அடுத்தது, அதற்கடுத்தது என்று ஒவ்வொரு தானியக்கதிராக வெட்டி