ஆசிரியர் தகுதித் தேர்வை ஜூலை இறுதி வாரத்தில் நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது.
மத்திய அரசின் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, ஒன்று முதல் 8-ம் வகுப்பு வரை பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வு (டெட்) தேர்ச்சி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தேசிய ஆசிரியர் பயிற்சி கவுன்சில் (என்சிடிஇ) விதிமுறையின்படி, ஆண்டுதோறும் டெட் தேர்வு நடத்தப்பட வேண்டும். தமிழகத்தில் கரோனா பெருந்தொற்று காரணமாக 2020, 2021-ம் ஆண்டுகளில் டெட் தேர்வு நடத்தப்படவில்லை.
கரோனா பாதிப்பு குறைந்ததைத் தொடர்ந்து, இந்த ஆண்டு டெட் தேர்வு நடத்தப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்தது. அதைத்தொடர்ந்து, தேர்வுக்கான அறிவிக்கை கடந்த மார்ச் 7-ம் தேதி வெளியிடப்பட்டு ஆன்லைன் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
6.33 லட்சம் பேர் விண்ணப்பம்
இடைநிலை ஆசிரியர்களுக்கான தாள்-1, பட்டதாரி ஆசிரியர்களுக்கான தாள்-2 இரண்டையும் சேர்த்து டெட் தேர்வுக்கு 6 லட்சத்து 33 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். தேர்வுக்கான அறிவிக்கையில் தேர்வு எப்போது நடத்தப்படும் எந்த முறையில் (ஆன்லைன் அல்லது ஆஃப்லைன்) நடத்தப்படும்என்பது குறித்து குறிப்பிடப்படவில்லை.
டெட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் தனியார் பயிற்சி மையங்கள் வாயிலாகவும், சுயமாகவும் படித்து வருகிறார்கள். ஆனால் தேர்வு தேதி குறித்து எவ்வித அறிவிப்பும் ஆசிரியர் தேர்வு வாரியம் இதுவரை வெளியிடாததால் தேர்வர்கள் சோர்வடைந்துள்ளனர்.
அதிகாரி தகவல்
இந்நிலையில், டெட் தேர்வு நாள் குறித்து ஆசிரியர் தேர்வு வாரிய உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘டெட் தேர்வை ஜூலை இறுதி வாரத்தில் அல்லது ஆகஸ்ட் முதல் வாரத்தில் நடத்த திட்டமிட்டுள்ளோம்’’ என்றார். டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அடுத்தகட்டமாக இடை நிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கான போட்டித்தேர்வு நடத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டு அரசுப் பள்ளி ஆசிரியர்கள் அதிக எண்ணிக்கையில் பணி ஓய்வுபெற்று வரும் நிலையில், ஆசிரியர் பணியிடங்கள் அதிக அளவில் நிரப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
*அதிமுக்கிய அவசரச்செய்தி* அன்பார்ந்த ஆசிரிய உறவுகளுக்கு வணக்கம். நாம் சென்னையில் வள்ளுவர் கோட்டத்தில் 9.6. 2022 போராட்டமானது தொடர் போராட்டமாக வடிவம் பெற இருக்கிறது. ஆகையால் பங்கெடுத்துக் கொள்ளும் அனைத்து ஆசிரியர்களும் தொடர் போராட்டத்திற்கு குறைந்தது 3 நாட்கள் அவரவருக்குண்டான உடைமைகளுடன் தயாராகி வரும்படி பணிவோடு கேட்டுக் கொள்கிறோம். இந்த தொடர் போராட்டத்திற்கு உண்டான அனுமதி நேற்றைய தினத்தில் 2.6.22 அன்று சென்னை சென்று வலியுறுத்தி தலைமைகள் காவல்துறையிடம் கேட்டுள்ளார்கள். அதற்கு காவல்துறை உடன் பட்டிருக்கிறது. ஆனாலும் நமக்கு ஒரு நாள் போராட்டம் விடியலைத் தரும் அவ்வாறு இல்லாத பட்சத்தில் நாங்கள் தொடர் போராட்டமாக முன்னெடுப்போம் என்பதை காவல்துறை ஏற்றுக்கொண்டுள்ளனர். ஆகையால் அனைவரும் தங்களுடைய சுய தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளும் வகையிலும் அதற்கான ஆயத்தமாக வள்ளுவர் கோட்டம் நோக்கி படை எடுத்து அனைத்து தலைமைகள் தங்களை அன்போடு அழைக்கிறோம் வாரீர் வாரீர். *குறிப்பு* நம் போராட்டம் நிச்சயம் 3 நாள் போராட்டம் என்பதில் *மாற்றமில்லை. மாற்றமில்லை*. நன்றி.பா.செந்தில். திண்டிவனம்.
ReplyDeleteமுதலில் 2013 க்கு மட்டுமே பணிநியமனம் செய்ய வேண்டும் என்று கேட்டால் கண்டிப்பாக 2017 2019 ஆம் ஆண்டில் தேர்ச்சி பெற்ற ஒருவர் கூட போராட்டக் களத்திற்கு வர மாட்டார்கள்... ஒருவேளை பணிநியமனம் மேற்கொண்டால் மூன்று குழுக்களையும் கலந்து தான் பணி நியமனம் செய்ய வேண்டும்... இதில் 2013 க்கு மட்டும் முன்னுரிமை கேட்டால் நாங்கள் நீதிமன்றத்தை நாட வேண்டி இருக்கும்...
Deleteஅனைத்து சங்கமும் இணைந்து விட்டது ,உங்களது சந்தேகத்திற்கு இடமின்றி கலந்து கொள்ள போகிறார்கள்
ReplyDeleteமேலும் சந்தேகம் இருக்கிறது என்றால்
Watch this channel
https://youtu.be/7djjoJjLK-E