பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வரும் ஜூன் 23ம் தேதி வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத்தேர்வு நேற்று (மே 5) துவங்கியது.
தமிழகத்தில் மட்டும் இந்த தேர்வை 3,119 மையங்களில் 8 லட்சத்து 37 ஆயிரத்து 317 மாணவ-மாணவிகள் எழுதுகின்றனர். இதில் 3 லட்சத்து 98 ஆயிரத்து 321 மாணவர்களும், 4 லட்சத்து 38 ஆயிரத்து 996 மாணவிகளும் இதில் அடங்குவர். பிளஸ் 2 தேர்வுகள் மே 28ம் தேதியுடன் முடிவடைகிறது.
இந்த நிலையில் தேர்வு முடிவுகள் தொடர்பாக தமிழக பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், 'வரும் ஜூன் 23ம் தேதி பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்.
1 முதல் 9ம் வகுப்புகளுக்கு மே 14 முதல் ஜூன் 12ம் தேதி வரை கோடை விடுமுறை விடப்படுகிறது. அதன் பின்னர், ஜூன் 13ல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Get link
- X
- Other Apps
- Get link
- X
- Other Apps
அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வுதிய திட்டம் மூலம் பென்சன் வழங்குவது சாத்தியமில்லை -
ReplyDeleteசட்டபேரவையில் நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்
Thanks for instant info selva sir..
Delete