ஒரு சன்னியாசி.. அவர் ஒரு நாள் கனவு கண்டார். அந்தக் கனவில் அவர் சொர்க்கத்துக்குப் போகிறார். அங்கே ஒரு பெரிய திருவிழா நடந்து கொண்டிருந்தது. எங்கே பார்த்தாலும் அலங்கார வளைவுகள். வண்ணமயமான விளக்குகள். பாதைகள் பூராவும் மலர்கள். எல்லா கட்டடங்களும் ஒளிமயமாக இருந்து. இவ்வளவு கோலாகலமாக பிரம்மாண்டமாக அந்த திருவிழா நடந்து கொண்டிருந்தது. அது என்ன திருவிழா என்பது இந்த சந்நியாசிக்கு புரியவில்லை.
அங்கு எதிரில் வந்து கொண்டிருந்த ஒருவரிடம் இது என்ன விசேஷம் என்று விசாரித்தார்.
உங்களுக்கு தெரியாதா விஷயம் இன்றைக்கு கடவுளின் பிறந்தநாள். அதைத்தான் எல்லோரும் சேர்ந்து கொண்டாடுகிறோம். இதற்காக பிரம்மாண்டமான ஊர்வலம் ஒன்று வரப்போகிறது. இறைவனே அந்த ஊர்வலத்தில் கலந்து கொள்கிறார் என்றார்.
உடனே அந்த சந்நியாசி ஒரு மரத்தின் நிழலில் ஒதுங்கி நின்று கொண்டார். ஊர்வலம் வந்து கொண்டிருந்தது. முதலில் ஒரு குதிரை வந்து கொண்டிருந்தது. அதன் மேலே ஒருவர் உட்கார்ந்திருந்தார். அவருக்குப் பின்னால் நிறைய பேர் கூட்டமாக வந்து கொண்டிருந்தார்கள்.
இவ்வளவு கூட்டம் இவர் பின்னாடி வருகிறது யார் இவர் என்று கேட்டார் சந்நியாசி.
ஒரு மதத்தின் பெயரைச் சொல்லி அவர் அந்த மதத்தின் தலைவர். அவரை பின்பற்றுகின்ற மக்கள் கூட்டம் பின்னால் வந்து கொண்டிருக்கிறார்கள் என்று விவரம் சொன்னார்கள்.
இவர்களுக்கு அடுத்தபடியாக இன்னொரு குதிரையிலே ஒருவர் வந்து கொண்டிருந்தார். அவருக்குப் பின்னால் ஏகப்பட்ட கூட்டம்.
இவர் யார் என்று கேட்டார் சந்நியாசி. இன்னொரு மதத்தின் பெயரைச் சொல்லி இவர் அந்த மதத்தின் தலைவர். அவர் வழியை பின்பற்றுகிறவர்கள் அவர் பின்னால் கூட்டமாக வந்து கொண்டிருக்கிறார்கள்.
இப்படி ஒவ்வொருவராக குதிரை மீது வந்து கொண்டிருந்தார்கள். அவர்களைப் பின்பற்றியும் ஒவ்வொரு கூட்டம் வந்து கொண்டிருந்தது. அந்த பெரிய ஊர்வலம் போய்க்கொண்டே இருந்தது. கடைசியாக அது முடிந்து விட்டது .அதன் பிறகு கொஞ்ச நேரம் கழித்து ஒரு வயதான ஆள் குதிரைமேல் வந்து கொண்டிருந்தார். ஆனால் அவருக்குப் பின்னால் யாருமே இல்லை. அவர் தனியாக வந்து கொண்டிருந்தார். அவர் அந்த ஊர்வலத்தை சேர்ந்தவரா என்றே தெரியவில்லை.
இவர் யார் இவர் ஏன் இப்படி தனியாக போய்க்கொண்டு இருக்கிறார் என்று கேட்டார் அந்த சன்னியாசி.
என்ன இப்படி கேட்கிறீர்கள்? இவர்தான் கடவுள். இவருக்குத்தான் இன்று பிறந்தநாள். முன்னால் போகிற ஊர்வலம் எல்லாம் அவருடைய பிறந்தநாளை கொண்டாடுவதற்காகதான் அப்படி என்றார்.
இதை கேட்டதும் அந்த சந்நியாசிக்கு தூக்கி வாரிப்போட்டது . இதுவரைக்கும் கனவு கண்டு கொண்டிருந்தவர் முழித்துக் கொண்டார். அதன் பிறகு யோசித்துப் பார்த்தார்.
உண்மைதான் மக்கள் எல்லோரும் பக்தி மார்க்கத்திலே போவதாக நினைத்துக் கொண்டு பாதை மாறிப் போய்க் கொண்டிருக்கிறார்கள். கடவுளை பின்பற்றுவதாக நினைக்கிறார்கள் ஆனால் கடவுளுக்கு பின்னால் யாருமே இல்லை.
இன்னும் இயல்பாக இதைப்பற்றி யோசித்துப்பார்த்தால் உண்மைக்குப் பின்னால்தான் நான் போய்க் கொண்டிருக்கிறேன் என்று நிறைய பேர் சொல்கிறார்கள். ஆனால் அந்த உண்மை அனாதையாய் போய்க் கொண்டிருக்கிறது. அந்த அளவுக்கு ஆகிவிட்டது இந்த உலகம்..
Wishing everyone a blessed morning ahead..
ReplyDeleteShajitha Mam..
ReplyDeleteRendu admit card nu theriyum, but neriya perukku first admit card kuda download agave illa.. Namma revathi sis kuda solitu irundhanga, nethu nyt dhan district admit card ae download acham..
Sariyana kolarpadi indha trb..
Hmm yes mam
ReplyDeletePg English ku admit card vanthurucha???
ReplyDeleteTamilku admit card 2 vanthuducha
ReplyDeleteDay before night and yesterday mrng vanthuruchu mam
DeleteSs mam surver problem today morning tha vanthuchi.
ReplyDelete