ஒவ்வொரு மனிதனுக்கும் தனித்ததோர் ஆற்றல் உண்டு. அதை வாழ்க்கையின் சரியான முன்னேற்றப் பாதையில் பயன்படுத்திப் பயணித்தால் ,
அது நல்ல விளைவைத் தருகின்ற நிலைக்கு அம்மனிதனைக் கொண்டு போய் சேர்க்கும் என்பது நிதர்சனம்.
உங்களிடம் உள்ள ஆற்றலை நீங்கள் குறைத்து மதிப்பு இடாதீர்கள்.
என்னால் இது முடியுமா? என்று எடுத்த எடுப்பிலேயே எதைக் கண்டும் அச்சம் கொள்ளாதீர்கள்.
தோல்விக்கு அஞ்சி முடங்கிக் கிடப்பதோ, மடங்கிக் கிடப்பதோ நல்ல வாழ்க்கை ஆகாது. போட்டியில் தோற்றாலும் ஓட்டப் பந்தயத்தில் ஓடுபவன் தான் வெளியில் நின்று விமர்சிப்பவனை விட மேலானவன்.
சிறிய தவளைகள் சேர்ந்து தங்களுக்கு உள்ளே ஒரு ஓட்டப் பந்தயத்தை வைத்துக் கொள்ள ஏற்பாடு செய்து கொண்டன. ஓட்டப் பந்தயத்திற்கான நாளும் நெருங்கி வந்தது.
தவளைகளின் ஓட்டப்பந்தயத்தை காணப் பலரும் கூடி இருந்தார்கள். ஓட்டப்பந்தயத்தில் தவளைகள் ஓடி, அருகில உள்ள ஒரு உயரமான கோபுரத்தைத் தொட வேண்டும். அது தான் போட்டி விதி.
முதலில் தொடுபவர் வெற்றியாளர். போட்டியும் ஆரம்பமானது. கூட்டமாய் கூடி இருந்தோர்கள் பலரும் இது சுலபமான போட்டி இல்லை.
உங்களால் அந்தக் கோபுரத்தை அடைய முடியாது என்று தவளைகளை நோக்கி கத்திக் கொண்டு இருந்தனர்.
ஒரு சிலர், “இந்தத் தவளைகளால் இந்தக் கோபுரத்தில் உச்சியை தொடவே முடியாது! சாத்தியமே கிடையாது!” எனக் கூறினர்.
கூட்டத்திலிருந்து இப்படியாக கோசங்கள் வந்த வண்ணமே இருந்தன. மெல்ல ஒவ்வொரு தவளைகளாக, தங்களால் முடியாது என்ற வகையில் சோர்ந்து போட்டியில் இருந்து நீங்கிக் கொண்டன.
“இதில எந்தத் தவளையும் அந்த உச்சியைத் தொடப் போவதில்லை . அது ரொம்பக் கடினமானது” கூடியிருந்தோர் தங்கள் கோசங்களைத் தொடர்ந்து கொண்டே இருந்தனர்.
எல்லாத் தவளைகளும் கோபுர உச்சியைத் தொடுவது சாத்தியம் அற்றது என எண்ணி இடையிலேயே போட்டியிலிருந்து விலகிக் கொள்ள, ஒரு சின்னஞ் சிறிய தவளை மட்டும் உச்சியை நோக்கி முன்னேறிக் கொண்டு இருந்தது.
சில வினாடிகளில் உச்சியைத் தொட்டு வெற்றியும் கண்டது.. அனைவரும் வியந்து எப்படி அந்த சிறிய தவளையினால் மட்டும் முடிந்தது என வினாவினர்.
அப்போது தான் தெரிந்தது, கோபுர உச்சியைத் தொட்ட அந்தத் தவளைக்கு காது கேட்காது என்று.
*ஒரு செயலைச் செய்ய முடியாதவர்கள், அவர்களால் முடியாததை உங்களாலும் செய்ய முடியாது என்று சொல்லுவார்கள். சொல்லுபவர்கள் சொல்லட்டும்.*
அவர்களிடம் நீங்கள், காது கேட்காதவராக இருப்பதே சில நேரங்களில் பொருத்தமானது, உங்கள் வழியில் செல்லுங்கள்..வெற்றி உங்களுக்கே..
Wishing everyone a blessed morning ahead..
ReplyDeleteMadam, if u come to know any information regarding ugtrb syllabus, pls tell us.
ReplyDeleteSure sir..
DeleteTet competitive exam syllabus eppo viduvanga mam
ReplyDeleteAs per annual planner, notification ku munadi varum or along with notification varum..
Delete