கிராமம் ஒன்றை அடுத்து உயரமான மலை இருந்தது. அதில் மரங்கள் வளர்ந்து இருண்ட காடாக இருந்தது. நகரவாசி ஒருவர் தன் ஆராய்ச்சிக்காக மலை உச்சிக்குச் செல்ல வேண்டியதாக இருந்தது.
பகல் வேளையில் இந்த மலையில் ஏறுவது மிக சிரமம். இதனால் அந்த நகரவாசி இரவு வேளையிலேயே கையில் விளக்கு ஒன்றை எடுத்துக் கொண்டு புறப்பட்டார்.. கிராமத்தின் எல்லையில் அவர் நின்று விட்டார்.
அவன் கையில் உள்ள விளக்கின் வெளிச்சம் பத்தடி தூரத்திற்கு தான் தெரிந்தது. அதற்கு பின்னால் எல்லாம் இருட்டாகத் தெரிந்தது. அவனுக்கு ஒரு சந்தேகம்.
இந்த பத்தடி தூரத்திற்குத் தானே விளக்கின் வெளிச்சம் தெரிகிறது ? இதை வைத்துக் கொண்டு பல கிலோ மீட்டர் தூரம் எப்படி மலையேற முடியும் ? என்று யோசித்தார்
அப்போது அங்கு ஒரு பெரியவர் அதை விட சிறிய விளக்குடன் அங்கு வந்தார். அவரும் மலையேற வந்துள்ளதாக கூறினார்.
நகரவாசி அந்த பெரியவரிடம் தன் சந்தேகத்தை
கேட்டப் போது,
பெரியவர் சிரித்தப்படி,"விளக்கு தரும் வெளிச்சத்தில் நீ பத்தடி தூரம் முதலில் முன்னேறு, பின் அவ்வாறு முன்னேறிய நிலையில், இதே விளக்கின் வெளிச்சம் மேலும் பத்தடி தூரத்திற்கு தெரியும்.
அவ்வாறே எத்தனை கிலோ மீட்டர் வேண்டுமானாலும் நீ மலையேறிச் செல்லலாம்." என்றார்...
ஆம்.,நண்பர்களே..,
*நீண்ட காலத் திட்டம் போடும் போது, நமக்கு முன் உள்ள சின்ன, சின்ன தடங்களைப் பொருட்படுத்தக் கூடாது.*
அவைகளை மறந்து விடவேண்டும்.எல்லாவற்றையும் போட்டு குழப்பினால் நாம் எண்ணிய செயலை முடிக்க இயலாமல் போகும்...
Wishing everyone a blessed day ahead..
ReplyDeleteDear admin mam, pg trb feb 12 irukuma, ila podtpone aguma mam reply
ReplyDeleteIpo iruka situation la conduct panradhu kastam.. So 31st kulla corona number of cases innum increase agita nichayama postpone dhan agum..
Delete