Skip to main content

TODAY'S THOUGHT..

ஒரு தோட்டத்தில் புதிதாக வாழைக் கன்று ஒன்று  நடப்பட்டது.

ஏற்கனவே, அதற்கு அருகில் ஒரு தென்னங்கன்றும் இருந்தது.
வாழைக்கன்று தென்னங்கன்றிடம் கேட்டது, *" நீ  இங்கே எத்தனை வருஷமா இருக்கே? "*
தென்னங்கன்று சொன்னது,
*" ஒரு வருஷம் ".*
"ஒரு வருஷம்னு சொல்றே ,  ஆனா என்னைவிடக் கொஞ்சம் தான் உயரமா இருக்கே? *எதாச்சும் வியாதியா ?"* கேட்டுவிட்டு  ஏதோ பெரிய நகைச்சுவையை சொல்லி விட்டது போல  சிரித்தது.
 
தென்னங்கன்றோ அதைக்  காதில் வாங்காதது போலப் புன்னகைத்தது.
ஒவ்வொரு நாளிலும் வாழைக்கன்றின் வளர்ச்சி பெரிதாக  இருந்தது. இரண்டு மாதத்திற்குள் தென்னங்கன்றை விட உயரமாக வளர்ந்துவிட்டது.
வாழைக்கன்றின் கேலியும், கிண்டலும் அதிகமானது.  தென்னங்கன்றோ எப்போதும் போல சலனமில்லாமல் புன்னகைத்தது.
வாழைக்கன்றை நட்டு  ஒரு வருடம்  ஆவதற்குள் தென்னங்கன்றைவிட  இருமடங்கு உயரமாகி விட்டது.

தினமும் தென்னங்கற்றைப் பார்த்து கேலி செய்து சிரிப்பது மட்டும் குறையவேயில்லை.
*"கடவுளுக்கு  உன்னை மட்டும் பிடிக்காதோ ? ஒரு லெவலுக்கு மேல வளரவிடாம தட்டியே வச்சிருக்காரே!*
"நீ  இருக்குற மண்ணில் தான்  நானும் இருக்கேன். உனக்கு கிடைக்கிற தண்ணிதான்  எனக்கும் கிடைக்குது.  ஆனா பாரு, நான் மட்டும்  எப்படி வளந்துட்டேன். உனக்கு விதிச்சது அவ்வளவுதான் போல" என்று வார்த்தைகளாலேயே குத்திக் காயப்படுத்தியது.

தென்னங்கன்றிடம் புன்னகையைத் தவிர வேறெந்த பதிலும் வரவில்லை.
இன்னும் சிறிது காலம் சென்றது.  அதிலிருந்து  அழகான குலை வெளிப்பட்டது.  அது பூவும், காய்களுமாக  அழகாக மாறியது.
அதனுடைய பெருமை இன்னும்  அதிகமானது. 

இரவும், பகலும் தென்னங்கன்றைக் கேலி செய்து சிரித்தபடியே பொழுதைக்  கழித்தது.
நல்ல  உயரம், பிளவுபடாத அழகிய இலைகள்,  கம்பீரமான குலை.  வாழை மரத்தின் பெருமைக்கு அளவே இல்லாமல் போனது.  இப்போது காய்கள் முற்றின .

ஒரு மனிதன்  தோட்டத்துக்கு வந்தான்.  வாழை மரத்தை சந்தோஷமாய் சுற்றி வந்தான்.  வாழைக்காய்களைத் தட்டிப் பார்த்தான்.  தென்னை மரத்தைத்  திரும்பிக்கூடப் பார்க்கவில்லை .

இதை விட வேறென்ன  பெருமை வேண்டும்?  வாழை மரத்தின் பெருமை அடங்குவதற்குள், திடீரென ஒரு புதிய மனிதன் கத்தியுடன் வந்தான்.  முதலாவது மனிதன் பிடித்துக்கொள்ள  அதன் குலைகளை வெட்டி எடுத்தான்.

வாழை மரம் கதறியது.  அதன் பெருமையெல்லாம் காணாமல் போனது.  மரண பயம் வந்துவிட்டது.  அது பயந்தபடியே  அடுத்த காரியம் நடந்தது.

ஆம்.   வாழைமரம் வெட்டி சாய்க்கப்பட்டது. 
ஒரு வருட காலத்து ஆட்டம் முடிவுக்கு வந்தது. துண்டு துண்டாக வெட்டப்பட்டுத்  தோலுறிக்கப் பட்டது.

தென்னை மரம்  இன்னும் பழையபடியே புன்னகைத்துக் கொண்டிருந்தது.  அதன் புன்னகைக்கு  என்ன  அர்த்தம்  என்பது இப்போது வாழைமரத்துக்குப் புரிந்தது.
*ஒவ்வொரு நாளும் நமக்கும்  எத்தனை கேலிகள் இது போல?

*கவலைப்பட வேண்டாம்*.
*வேகமாக வளர்வதெல்லாம்*
*வேகமாகவே காணாமலும் போகலாம்.*
*ஒரு காரியத்தின் துவக்கத்தைவிடவும், அதன் தொடர்ச்சி நல்லதாக இருப்பதுதான் முக்கியம்.*
*பெருமையுள்ளவனைவிடவும், பொறுமையுள்ளவன் உத்தமன்...*
வேகமாகச் செல்பவனைக்கண்டு ஆதங்கப்படவும் வேண்டாம்.
பொருமையாகச் செல்வதற்க்காக வருந்தவும் வேண்டாம்.
எல்லாம் நன்மைக்கே,

Comments

  1. Wishing everyone a blessed morning ahead..

    ReplyDelete
  2. Transfer councling extend panna postings poduvangala mam

    ReplyDelete
  3. 2013 lusunga irukura varaikum yaarukume posting kedaikaathuuu....

    ReplyDelete
    Replies
    1. Unknown sir mind your words

      Delete
    2. Unknown அருமை சொன்னீங்க உங்களை போன்றோர் ஏளனம் செய்யும் அளவுக்கு 2013 நிலமை இருக்கே அதனால் உங்களை போன்னோர் இப்படியும் சொல்லுவீர்கள் இதற்கு மேலும் சொல்லுவீர்கள்

      Delete
    3. Avaru sonnathula thappu onnum illaiyee... really 13 irukara varaikum yaarukkume posting kedaikaathu....

      Delete
  4. BUDDHA ACADEMY - DHARMAPURI
    PG TRB HISTORY ONLY
    TEST BATCH ( Online )
    Class Start:21.11.2021

    Previous Achievements
    2006 State 1st place
    2013 State 1st place
    2017 State 4th place
    2019 State 1st and 3rd & Total 29 Candidates Select.

    மொத்த தேர்வுகள்:( TOTAL TEST)

    1.Unit 1 முதல் 10 வரை 10 தேர்வுகள்
    2.துணை தேர்வுகள் (Sub Topic) 20 தேர்வுகள்
    3.பள்ளி புதிய பாடபுத்தகத்திலிருந்து 3500 கேள்விகள்
    4. வரலாறு முழு பாடத்திட்டத்திற்கான 3 தேர்வுகளும் நடத்தப்படும்

    தேர்வுக்கான விடைகள் ஆன்லைன் (GOOGLE MEET) மூலம் கலந்தாலோசித்து விடைகள் தேர்வர்களுக்கு வழங்கபடும்.

    தொடர்புக்கு..,
    புத்தா அகாடமி - தருமபுரி.
    +91 99620 27639 / +91 88380 72588

    ReplyDelete
  5. Pgtrb materials available sir

    ReplyDelete
    Replies
    1. மதிப்பிற்குரிய சகோதரி ஹாசினி அவர்களே மேற்கண்ட கைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு கேட்கவும்

      Delete

Post a Comment

Popular posts from this blog

TNTET PAPER2 ENGLISH QUESTIONS..

English Previously discussed question... Identify the pattern of the following sentence. The boy pushed the door open. A)SVOC B)SVOA C)SVO D)SVC Ans:SVOC      The boy-subject,pushed-verb,the door-object,open-complement ('open' is an action by the verb 'pushed') Today's Questions 7th 1st term book. 1.Match the following collective nouns. 1)A cloud of.   -  a)bells 2)A bench of.  -  b)bats 3)A carillion of. -   c)crocodiles 4)A float of.    -d)bishops. A)1-a,2-b,3-c,4-d B)1-d,2-c,3-b,4-a C)1-b,2-d,3-a,4-c D)1-b,2-a,3-d,4-c 2.Form abstract noun for the following words. Clever,Heavy A)cleverly,heavily B)cleverish,heaviness C)cleverer,heavyish D)cleverness,heaviness 3.Fill in the blanks with suitable verb. Saina and Mary _______(go) to bed at 9.00p.m. A)go B)goes C)went D)will go 4.A phrasal verb is a combination of_______ A)A verb & a preposition B)A verb & A ad...

WARM WELCOME..

Welcome to Puthagasalai.. This is to thank respected admin sir, for his wonderful support inspite of so many hindrances.. Hope we will do our best to make this new website a successful one.. I have taken this big responsibility thinking all my lovable friends will support me as how they were so far..

TODAY'S THOUGHT..

"தெருவிலே சுற்றிக் கொண்டிருந்த நாய் ஒன்று"......, தவறிப் போய் அரண்மனைக்குள் நுழைந்தது"....!! "அந்த அறைக்குள் நுழைந்த நாய்க்கு அதிர்ச்சி ".......!!   "அங்கே சுற்றியும் நூற்றுக் கணக்கான நாய்கள் இருந்தன"....!! "சற்று எரிச்சலடைந்து "உர்ர்.. உர்ர்.." என்றது"....!! "அந்த நூறு நாய்களும் பதிலுக்கு".... "உர்ர்.. உர்ர்.." என்றது. "அந்த நாய் கொஞ்சம் பயந்து விட்டது"...!! இருந்தும் கோபம் தாளாமல்.....,   "லொள் லொள்" என குரைக்க ஆரம்பித்தது. "எல்லா நாய்களும் சேர்ந்து குரைத்தது"......!! "அந்த நாய் குரைப்பதை நிறுத்தியவுடன்"...., "மற்ற எல்லா நாய்களும் குரைப்பதை நிறுத்திகொண்டது".....!! அந்த தெரு நாய்க்கு கோபமும் பயமும் அதிகமானது. உடனே...,   " வெறி பிடித்ததை போல் தொடர்ந்து குரைக்க ஆரம்பித்தது".....,   " பதிலுக்கு அந்த நாய்களும் குரைத்தன"....!! மற்ற நாய்களும் குமயங்கியது " இந்த நாய் பயத்தின் உச்சத்தில்...., " வெறி பிடி...