Skip to main content

TODAY'S THOUGHT..

கணவனுக்கு  திடீர் சந்தேகம் வந்தது தன்னுடைய மனைவிக்கு காது கேட்கவில்லையோ ?


ஆனால் இதை மனைவியிடம் நேரடியாகக் கேட்க அவருக்குத் தயக்கம். 
தயக்கம் என்ன, பயம் தான்.

இந்த விஷயத்தை அவரின் உறவிலுள்ள   டாக்டரிடம்  தெளிவாக விளக்கி கடிதம் எழுதினார்.

டாக்டரிடம் இருந்து வந்த பதிலில்...
"இருபது அடி தூரத்தில் இருந்து மனைவியிடம் ஏதாவது பேசிப் பாருங்கள் , மனைவியின் காதில் விழவில்லை எனில் சற்று நெருங்கி பதினைந்து அடி தூரத்தில் இருந்துப் பேசுங்கள்,
பின் பத்து , ஐந்து இப்படி குறைத்துக் கொண்டே நெருங்கிச் சென்றுப் பேசுங்கள்.

எத்தனை அடி தூரத்தில் இருந்து பேசினால் மனைவிக்கு காதுக் கேட்கவில்லை எனத் தெரிந்தால் அதற்கேற்றபடி சிகிச்சை அளிக்கலாம்" என்றிருந்தது.

அதைக் பார்த்தவுடன் கணவனுக்கு ஒரே குஷி.

வீட்டு வாசலில் இருந்தபடியே உள்ளிருந்த மனைவியிடம் இன்று என்ன சமையல்? எனக் கேட்டார்.
பதில் எதுவும் இல்லை. 

பின் வீட்டு வரவேற்பறையில் இருந்து அதே கேள்வியைக் கேட்டார். அதற்கும் பதில் இல்லை. 

ஹாலில் இருந்து கேட்டார் , சமையலறை வாசலில் இருந்தும் மீண்டும் மீண்டும் அதே கேள்வியைக் கேட்டார். 

மனைவியிடமிருந்து பதிலே இல்லை.
போச்சு இரண்டு ஸ்பீக்கரும் அவுட் ஆகிவிட்டது போல என்று மனதில் கன்ஃபார்ம் செய்து விட்டார்.

கடைசி வாய்ப்பாக மனைவியின் காது அருகே சென்றுச் சத்தமாக இன்றைக்கு என்ன சமையல் ?“ எனக் கேட்டார்.

காதில் ஏதோ குண்டு வெடித்தது போல் இருக்கவே அவர் மனைவி அவரைக் கோபமாக திரும்பிப் பார்த்து, ”ஏன் இப்படி கத்துறீங்க , நீங்களும் வாசல் கேட்டிலிருந்து , வரவேற்பறையில் இருந்து , ஹாலில் இருந்து , சமைலறை வாசலில் இருந்து கேட்க , கேட்க நானும் முருங்கைக்காய் சாம்பார் , உருளைக்கிழங்கு பொரியல்னு சொல்லிக்கிட்டே இருந்தேனே , அது உங்கள் காதில் விழவில்லையா ?

காதுல என்ன பஞ்சு மூட்டையா வைச்சிருக்கீங்க எனப் பொரிந்துத் தள்ளிவிட்டாள்...

கணவன் அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றான்.
தவறு தன்னிடம் தானா?

கதையின் நீதி :-

இப்படித் தான் பலர் பிரச்சனையை நம்மிடம் வைத்துக் கொண்டு அது பிறரிடம் இருப்பதாக நாம் நினைத்து வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம்…

இந்தப் பதிவு சிரிக்க மட்டும் அல்ல சிந்திக்கவும் கூடத் தான் √

Comments

  1. Gudnoon everyone.. Have a blessed day ahead..

    ReplyDelete
  2. Tet related news ethum today varuma Mr.unknown sir

    ReplyDelete
  3. TET list eppoooo varum...

    ReplyDelete
    Replies
    1. நேற்று !!!!!!!!!!
      இன்று?????????
      நாளை-----------------------------

      Delete
    2. 🤦‍♂️🤦‍♂️

      Delete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. வட போச்சே

    ReplyDelete
  6. Unknown sir உறுதியாக tet list வரும் என சொல்கிறீர்கள்.இந்த வாரத்தில் ஆவது வருமா.
    யார் உங்களுக்கு தகவல் சொன்னார்கள்(நண்பர்கள் or அதிகாரிகள் ). கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க sir

    ReplyDelete
  7. Part time teachers salary permanent எவ்வளவு??

    ReplyDelete
    Replies
    1. டெட் பாஸ் பண்ணாதான் போஸ்டிங் அப்போ பார்ட் டைம் டீச்சர்ஸ்க்கு பொருந்தாதா

      Delete
    2. இங்கு ஆட்சி மாறினாலும். காட்சிகள் மாறவில்லை

      Delete
  8. Hello Mr Unknown

    edha sonnalum konjam theliva, vilakkama
    sollunga..

    ReplyDelete
  9. Pls reply pannugha sir

    ReplyDelete
  10. மொத்தம் இந்த ஆண்டு உபரி ஆசிரியர்கள் எண்ணிக்கை 19547.tet இல் இருந்து வெளியில் வந்துருங்க

    ReplyDelete
  11. அவ்ளோ ஈஸியா சொல்லிட்டிங்க சார் எத்தன வருஷ காத்திருப்பு

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

TNTET PAPER2 ENGLISH QUESTIONS..

English Previously discussed question... Identify the pattern of the following sentence. The boy pushed the door open. A)SVOC B)SVOA C)SVO D)SVC Ans:SVOC      The boy-subject,pushed-verb,the door-object,open-complement ('open' is an action by the verb 'pushed') Today's Questions 7th 1st term book. 1.Match the following collective nouns. 1)A cloud of.   -  a)bells 2)A bench of.  -  b)bats 3)A carillion of. -   c)crocodiles 4)A float of.    -d)bishops. A)1-a,2-b,3-c,4-d B)1-d,2-c,3-b,4-a C)1-b,2-d,3-a,4-c D)1-b,2-a,3-d,4-c 2.Form abstract noun for the following words. Clever,Heavy A)cleverly,heavily B)cleverish,heaviness C)cleverer,heavyish D)cleverness,heaviness 3.Fill in the blanks with suitable verb. Saina and Mary _______(go) to bed at 9.00p.m. A)go B)goes C)went D)will go 4.A phrasal verb is a combination of_______ A)A verb & a preposition B)A verb & A ad...

WARM WELCOME..

Welcome to Puthagasalai.. This is to thank respected admin sir, for his wonderful support inspite of so many hindrances.. Hope we will do our best to make this new website a successful one.. I have taken this big responsibility thinking all my lovable friends will support me as how they were so far..

TODAY'S THOUGHT..

"தெருவிலே சுற்றிக் கொண்டிருந்த நாய் ஒன்று"......, தவறிப் போய் அரண்மனைக்குள் நுழைந்தது"....!! "அந்த அறைக்குள் நுழைந்த நாய்க்கு அதிர்ச்சி ".......!!   "அங்கே சுற்றியும் நூற்றுக் கணக்கான நாய்கள் இருந்தன"....!! "சற்று எரிச்சலடைந்து "உர்ர்.. உர்ர்.." என்றது"....!! "அந்த நூறு நாய்களும் பதிலுக்கு".... "உர்ர்.. உர்ர்.." என்றது. "அந்த நாய் கொஞ்சம் பயந்து விட்டது"...!! இருந்தும் கோபம் தாளாமல்.....,   "லொள் லொள்" என குரைக்க ஆரம்பித்தது. "எல்லா நாய்களும் சேர்ந்து குரைத்தது"......!! "அந்த நாய் குரைப்பதை நிறுத்தியவுடன்"...., "மற்ற எல்லா நாய்களும் குரைப்பதை நிறுத்திகொண்டது".....!! அந்த தெரு நாய்க்கு கோபமும் பயமும் அதிகமானது. உடனே...,   " வெறி பிடித்ததை போல் தொடர்ந்து குரைக்க ஆரம்பித்தது".....,   " பதிலுக்கு அந்த நாய்களும் குரைத்தன"....!! மற்ற நாய்களும் குமயங்கியது " இந்த நாய் பயத்தின் உச்சத்தில்...., " வெறி பிடி...