*ஒவ்வொரு முறை தோற்கும் போதும் கவலைப்படாதீர். ஒவ்வொரு தோல்வியும் நீங்கள் முயன்றதற்கான அடையாளம்.*
*ஒவ்வொரு முயற்சியும் உங்களுக்கொரு அனுபவம். ஒவ்வொரு அனுபவமும் உங்களுக்கொரு வெற்றிப்படி.*
*குழந்தைகளின் மனதைப் போல் மனம் இருந்திருந்தால் ஒன்றும் புரியாமல் சிரித்துக் கொண்டே வாழ்ந்திருக்கலாம்.*
*உள்ளே கொதித்து வெளியே புன்னகைத்து வாழும் வாழ்க்கை. பழகிப் போனது மனிதரிடம்....!!*
*சிலரோடு ஒப்பிடும் போது நாம் வெற்றியடைந்திருப்போம். சிலரோடு ஒப்பிடும் போது நாம் தோல்வி அடைந்திருப்போம். யாரோடும் ஒப்பிடாத வாழ்வில் மட்டும் நாம் மகிழ்ந்திருப்போம்.*
*அறியாதது அறிந்து வைத்திருப்பதே அறிவு. தெரியாதது தேடித் தெரிந்து கொள்வதே தெளிவு..!!*
*ஏமாற்றங்களை விட துரோகம் சிறிது ஆச்சரியத்தைத் தருகிறது."எப்படி இவ்வளவு தத்ரூபமாய் நடிக்க முடிகிறது இவர்களால்? என்று.*
*செல்வத்தை சேர்க்கும் பயணத்தில் நிம்மதி, அமைதி மகிழ்ச்சி, நேர்மை, கருணை, அன்பு, இரக்கம் இன்னும் பலவற்றைப் பலரும் இழந்து விடுகின்றனர்.*
*யாருமே குறை காணக்கூடாது என்று நினைப்பவனால் எதிலும் ஈடுபட முடியாது...!!*
*உலகில் பலவும் பலருக்கு அதிர்ஷ்டத்தால் கிடைத்து விடவில்லை. முயற்சி, உழைப்பு போன்றவைகளால் அடைந்தவர்களே அதிகம்.*
*தன்னம்பிக்கை, மனவுறுதி, துணிவு போன்றவை கவலை, துன்பம் ஆகியவற்றை நீக்கும்.*
*பின்னால் பேசுபவன் புகழ்ந்து பேசினால் என்ன. இகழ்ந்து பேசினால் என்ன. காதில் வாங்காமல் அடுத்த அடியை எடுத்து வைத்து முன்னேறிக் கொண்டே இருங்கள்...*
*பாதை கடினமாக இருந்தாலும் நம்முடைய வாழ்க்கை கண்டிப்பாக ஒருநாள் ஒளிமயமாக மாறும்.. நம்பிக்கை தான் வாழ்க்கை...*
*கத்தி முனையில் நடப்பதைப் போல கடினமாக இருந்தாலும்.. வாழ்வில் தன்னம்பிக்கை இழப்பது கூடாது...*
*எவன் ஒருவன் தன்னம்பிக்கை கொண்டவனாக இருக்கிறானோ.. அவன் மற்றவர்களின் நம்பிக்கையைப் பெறுகிறான்...*
*முடிந்து விட்டான் என்று நினைக்கும் போது எழுந்து நில்லுங்கள். எதிரியும் சிலிர்த்துப் போவான்...*
*முடங்கிக் கிடந்தால் முடக்கம். எழுந்து நடந்தால் பாதை. எதிர்த்து நின்றால் வாழ்க்கை. உறுதியோடு உண்மையாய் போராடுங்கள். உங்களை வெல்ல யாரும் கிடையாது...*
Wishing everyone a blessed Sunday ahead..
ReplyDeleteஅறிவாந்தா ஆசிரியகள் உருவாக நியமன தேர்வு தேவை. அன்பில்
ReplyDeleteபாவி மனுஷா 😮
Deleteஅந்த பேட்டில அப்படி தான் அன்பில் சொன்னாரு
ReplyDeleteதயவு செய்து அவருடைய பேட்டி சரியாக பார்க்கவும்.அதில் நியமனத்தேர்வு தேவை என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து என்றார்.
ReplyDeleteஉங்க சவுரியத்துக்கு சொல்லாதிங்க
Deleteசரிப்பா காலாகாலத்துல தாலிய கட்டி சாப்பாட போடுங்கப்பா
ReplyDeleteMam, pg geography tamil trb coaching centre and study materials detail need .
ReplyDeleteFriends pgtrb ku syllabus ellam padichu muduchacha
ReplyDeleteEnakku romba payama irukku
எனக்கும் பயமா தான் இருக்கு
Delete