Skip to main content

வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுத முடியாது - ஆசிரியர் தேர்வு வாரியம் எச்சரிக்கை!


ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வுகளில் முறைகேடுக ளில் ஈடுபடுவோர் , வாழ் நாள் முழுவதும் தேர்வு எழுத முடியாத அளவுக்கு தடைவிதிக்கப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் எச்சரித்துள்ளது .

முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் , உடற்கல்வி இயக்குநர் நிலை 1 , கணினி ஆசிரியர்கள் நிலை 1 ஆகிய பணியிடங்களுக்கான போட்டித் தேர்வின்போது , தேர்வு மையங்களில் ஒழுங் கீனமான செயல்களில் ஈடு படுவோர் , சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படுத்தும் வகையில் நடக்கும் தேர் வர்கள் மீது கடுமையான குற்றவியல் நடவடிக்கை எடுப்பதுடன் , அவர்கள் 5 முதல் 7 ஆண்டுகள் வரை ஆசிரியர் தேர்வு வாரிய தேர்வுகளில் பங்கேற்கமுடி யாத வகையில் தடைவிதிக்கப்படும் .

மேலும் ஆயுட் காலம் முழுவதும் தடை விதிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தற் போது எச்சரித்துள்ளது .

அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுநிலை பட்டதாரி ஆசிரியர் . உடற் கல்வி இயக்குநர் , கணினி ஆசிரியர் பணியிடங்கள் 2,207 உள்ளன . இவற்றில் நிரப்பப்படாமல் உள்ள 247 காலியிடங்களும் , புதிய பணியிடங்கள் 1,960 இடங்களும் அடங்கும் . இந்த பணிக்கான போட் டித் தேர்வில் பங்கேற்க இணைய தளம் மூலம் விண்ணப்பிக்கும் முறை தற்போது தொடங்கியுள்ளது .

இதற்கான எழுத்து தேர்வு நவம்பர் 13 , 14 , 15 ம் தேதிகளில் நடத்த திட்டமி டப்பட்டுள்ளது . அதன்படி விண்ணப்ப பதிவேற்றம் , கட்டணம் செலுத்துதல் , உள்ளிட்ட அனைத்து பணிகளும் ஆன்லைன் மூலமே நடக்கும் . இதையடுத்து , தேர்வு மையங்களில் கடைபிடிக்க வேண் டிய விதிகளை ஆசிரி யர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது . கணினி வழியில் தேர்வு எழுத ஒவ்வொ ருவரும் தயார் நிலையில் இருக்க வேண்டும் .

- கர்ப்பிணிப் பெண் கள் , கடுமையான நோயால் பாதித்தவர்கள் அதற்கான சான்றுகளை சமர்ப்பித் தால் அவர்களுக்கு அரு கமை தேர்வு மையங்கள் ஒதுக்கப்படும் . தேர்வு மையம் அமை யும் மாவட்டம் குறித்த விவரங்கள் 7 நாட்களுக்கு முன்னதாகவும் , தேர்வு மைய விவரம் தேர்வுக்கு 3 நாட்களுக்கு முன்னதாக வும் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும் . ஹால்டிக்கெட்டுகள் இணைய வழியில் மட்டுமே வழங்கப்படும்.

முதுநிலை ஆசிரியர் தேர்வுக்கான சந்தேகம் , கணினி வழி தேர்வில் இடம் பெறும் கேள்விகள் தொடர்பாக விடைக்குறிப் பும் ஆட்சேபணைகளும் மின்னஞ்சல் மூலமாக மட் டுமே அனுப்ப வேண்டும் . கட்ஆப் மதிப்பெண் இருந்தும் விண்ணப்பித்த பணிக்கான உரிய கல்வித் தகுதி இல்லை என்றால் நிராகரிக்கப்படுவார் .

நிர்வாக காரணங் கள் , நோய்த் தொற்று உள்ளிட்ட காரணங்களுக் காக , தேர்வு வாரியம் நடத்தும் தேர்வை தள்ளி வைக்கவோ , ரத்து செய்யவோவாரியத்துக்கு முழு உரிமை உள்ளது .

தேர்வு மையங்களில் ஒழுங்கீன செயல்களில் ஈடுபடும் தேர் வர்கள் மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படுத்தும் விதமாக நடந்தால் கடு மையான குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்ப டும் . அவர்கள் 5 முதல் 7 ஆண்டுகள் வரை எந்த தேர்வும் எழுத முடியாத வகையில் தடை விதிக்கப்ப டும் . மேலும் ஆயுட்கால தடை விதிக்கவும் முடியும் .

Comments

Popular posts from this blog

*இதுவும் கடந்து போகும்..!!!*

நம்முடைய இதுநாள் வரை வாழ்க்கையையும் திரும்பிப் பார்த்தால் இந்த வாக்கியத்தின் மகத்தான உண்மையை உணர முடியும். எத்தனை வெற்றிகள், எத்தனை தோல்விகள், எத்தனை மகிழ்ச்சிகள், எத்தனை துக்கங்கள்..... எல்லாம் வந்து சிறிது காலம் தங்கி கடந்து போயிருக்கின்றன. வந்ததெல்லாம் நம்மை விட்டுப் போவதால் நம்முடையதல்ல என்பது உறுதியாகிறது.வந்து போவதெல்லாம் நம்முடையதல்ல என்பதால் நாம் வெறும் பார்வையாளர்களே அல்லவா? எத்தனை நண்பர்கள், எத்தனை பகைவர்கள், எத்தனை உறவுகள் நம் வாழ்வில் முக்கிய அங்கம் வகித்து வெறும் நினைவுகளை மட்டும் நம்மிடம் விட்டு விட்டுப் போயிருக்கிறார்கள்? வாழ்வில் வந்ததெல்லாம் நம்மைக் கடந்து சென்று கொண்டு தானே இருக்கின்றன. ஒரு விதத்தில் என்றும் நாம் தனியர்களே அல்லவா? இயற்கையின் விதியே இது என்று உளமார உணர்ந்து தெளியும் போது கிடைக்கும் *அமைதி சாதாரணமானதல்ல* அந்த அமைதியை மனதில் நிரந்தரமாக்கிக் கொள்ளுங்கள். *வெற்றிகள் கிடைக்கும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பதை நினைவில் கொள்ளுங்கள். *கர்வம் தலை தூக்காது.* *தோல்விகள் தழுவும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பத...

TODAY'S THOUGHT..

"தெருவிலே சுற்றிக் கொண்டிருந்த நாய் ஒன்று"......, தவறிப் போய் அரண்மனைக்குள் நுழைந்தது"....!! "அந்த அறைக்குள் நுழைந்த நாய்க்கு அதிர்ச்சி ".......!!   "அங்கே சுற்றியும் நூற்றுக் கணக்கான நாய்கள் இருந்தன"....!! "சற்று எரிச்சலடைந்து "உர்ர்.. உர்ர்.." என்றது"....!! "அந்த நூறு நாய்களும் பதிலுக்கு".... "உர்ர்.. உர்ர்.." என்றது. "அந்த நாய் கொஞ்சம் பயந்து விட்டது"...!! இருந்தும் கோபம் தாளாமல்.....,   "லொள் லொள்" என குரைக்க ஆரம்பித்தது. "எல்லா நாய்களும் சேர்ந்து குரைத்தது"......!! "அந்த நாய் குரைப்பதை நிறுத்தியவுடன்"...., "மற்ற எல்லா நாய்களும் குரைப்பதை நிறுத்திகொண்டது".....!! அந்த தெரு நாய்க்கு கோபமும் பயமும் அதிகமானது. உடனே...,   " வெறி பிடித்ததை போல் தொடர்ந்து குரைக்க ஆரம்பித்தது".....,   " பதிலுக்கு அந்த நாய்களும் குரைத்தன"....!! மற்ற நாய்களும் குமயங்கியது " இந்த நாய் பயத்தின் உச்சத்தில்...., " வெறி பிடி...

TNTET PAPER2 ENGLISH QUESTIONS..

English Previously discussed question... Identify the pattern of the following sentence. The boy pushed the door open. A)SVOC B)SVOA C)SVO D)SVC Ans:SVOC      The boy-subject,pushed-verb,the door-object,open-complement ('open' is an action by the verb 'pushed') Today's Questions 7th 1st term book. 1.Match the following collective nouns. 1)A cloud of.   -  a)bells 2)A bench of.  -  b)bats 3)A carillion of. -   c)crocodiles 4)A float of.    -d)bishops. A)1-a,2-b,3-c,4-d B)1-d,2-c,3-b,4-a C)1-b,2-d,3-a,4-c D)1-b,2-a,3-d,4-c 2.Form abstract noun for the following words. Clever,Heavy A)cleverly,heavily B)cleverish,heaviness C)cleverer,heavyish D)cleverness,heaviness 3.Fill in the blanks with suitable verb. Saina and Mary _______(go) to bed at 9.00p.m. A)go B)goes C)went D)will go 4.A phrasal verb is a combination of_______ A)A verb & a preposition B)A verb & A ad...