*அமெரிக்காவில் ஒரு கைதிக்கு தூக்கிலிடப்படுவதற்குப் பதிலாக, விஷ நாகம் தாக்கி மரண தண்டனை கொடுக்க முடிவு செய்யப்பட்டது.*
அமெரிக்காவில் ஒரு கைதிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
அப்போது சில விஞ்ஞானிகள் அந்தக் கைதியைக் கொண்டு சில பரிசோதனைகள் செய்ய வேண்டும் என்று நினைத்து, அரசிடம் அதற்கான அனுமதியை பெற்றார்கள்.
அந்த கைதி தூக்கிலிடப்படுவதற்குப் பதிலாக, விஷ நாகம் தாக்கி கொல்லப்படுவார் என்று முடிவு செய்யப்பட்டது.
ஒரு பெரிய விஷப்பாம்பு கைதிக்கு முன்னால் கொண்டு வரப்பட்டது.
அதைத் தொடர்ந்து அவர்கள் கைதியின் கண்களை இறுக மூடி, கைதியின் நாற்காலிக்கு அருகில் அந்த நாகம் வருவதை கைதி உணரும்படிச் செய்து ஒரு துணியால், கைதியின் கண்களைக் கட்டினர்.
அதன்பின் அந்தக் கைதி மீது இரண்டு சிறிய ஊக்குகளால் பாம்பு கொத்துவதைப் போலவே குத்தப்பட்டார்.
அந்தக் கைதி அலறியபடி, இரண்டு நிமிடங்களில் துடிதுடித்து இறந்து போனார்.
பிரேத பரிசோதனையில் கைதியின் உடலில் பாம்பு விஷத்தை ஒத்த விஷம் இருந்தது தெரிய வந்தது.
அந்த விஷம் எங்கிருந்து வந்தது? அல்லது கைதியின் மரணத்திற்கு வேறு என்ன காரணம்? என்று ஆராயப்பட்டது.
அந்த விஷம் மன அதிர்ச்சியால் அவரது சொந்த உடலால் தயாரிக்கப்பட்டது.
இதில் இருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம் இதுதான்,,,
நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் நேர்மறை அல்லது எதிர்மறை சக்தியை உங்களுக்குள் உருவாக்குகிறது.
அதன்படி உங்கள் உடல் ஹார்மோன்களை உருவாக்குகிறது.
90% நோய்களுக்கான மூல காரணம் எதிர்மறை எண்ணங்களால் உருவாகும் நோயெதிர்ப்பு குறைதலே ஆகும்.
நாம் தற்போது கொரோனா கால நெருக்கடியில் இருக்கிறோம். அரசாங்க பட்டியல்கள் நம்மை பதற வைக்கலாம்.
இந்த அறிக்கைகளை கண்டு அச்சம் கொள்ளாமல், நேர்மறை எண்ணம் கொள்வோம். அதுதான் இப்போதைக்கு நமக்கான நோய் எதிர்ப்பு சக்தியாகும்.
கொரோனா மீதும், உலகில் பரப்பப்படும் வதந்திகள் மீதும் சிறிதும் நம்பிக்கை கொள்ள வேண்டாம்.
கொரோனா வீரியத்தின் பாதிப்பினால் தான் உலகில் இறப்பு பட்டியல்கள் நீள்கிறதா என்றால், அதன் பிரச்சார பயத்தினால் தான் பல உயிர்கள் போகிறது.
கொரோனா வந்தால் செத்துவிடுவோம் என்று நினைத்தாலே போதும், கண்டிப்பாக கொரோனாவும் வரும், கூடவே சாவும் வரும்.
*நம் முன்னோர்கள், "அட அது என்னடா பண்ணப் போகுது?, அட அது ஒன்னும் இல்லை, இந்தச் சின்னப் பிரச்னைக்கா இப்படி உட்கார்ந்து இருக்கற?, அதெல்லாம் ஒன்னுமில்லை, நீ போய் வேலையைப் பாரு போ! என்று எல்லா விஷயங்களையும் சர்வ சாதாரணமாகக் கையாண்டு இருப்பதைப் பார்த்திருப்போம்.* உண்மையிலேயே அந்த வார்த்தைகளே, பல மடங்கு மருந்து எடுத்துக் கொண்டதற்குச் சமம்.
கொஞ்சம் பச்சைத் தண்ணீரை ஒரு சிறிய மருந்துப் பாட்டிலில் அடைத்து, இதுதான் கொரோனாவுக்கான மருந்து என்று கூறி, 250 ரூபாய்க்கு நமக்கு ஒரு Syrup என்று டாக்டர் மூலம் சொல்லிக் கொடுத்தால் கூட, அதையும் டாக்டர் சொல்லிக் கொடுத்தது போலவே குடித்துவிட்டோமானால், ஆஹா ஓகோ என்று குதித்து, தடுப்பூசி போட்டுக் கொண்டுவிட்ட நம்பிக்கை நமக்கு வந்து, அதன் காரணமாகக் கூட கொரோனா நம்மை தாக்காமல் இருக்கக் கூடும்.
நேர்மறையான எண்ணங்கள் மனதில் இருந்தாலே நோய் எதிர்ப்புச் சக்தி தானாகவே அதிகரிக்கும், மனவளம், உடல்நலம் கூடும் என்பதுதான் நிதர்சனமான உண்மை..
Gudmrng friends, brothers and sisters.. Have a blessed day ahead..
ReplyDeleteGood Afternoon Mam...
ReplyDeleteGudnoon Murali sir..
DeleteSuper story madam
ReplyDeleteநீ எதுவாக நினைக்கிறாயோ அதுவாகவே மாறுகிறாய்
ReplyDeleteமிக தேவையான கருத்து..
ReplyDelete