Skip to main content

நாலுபேர்..

 முகத்தில் புன்னகையோடு வலம்வந்தேன்       "கள்ளச்சிரிப்பு "என்றார்கள்..


கோபக்காரனானேன்
" உம்மணாம் மூஞ்சி" என்றார்கள்..

அதிகம் பேசாமலிருந்தேன்
" ஊமையன்" என்றார்கள்..

சளசளவென்று பேசினேன்
" வாயாடி " என்றார்கள்..

புதிய தகவல்களை பரிமாறினேன்
" கருத்து கந்தசாமி " என்றார்கள்..

அவர்கள் வார்த்தைகளுக்கு செவிசாய்த்தேன்
" ஜால்ரா " என்றார்கள்

எல்லா செயல்களிலும்
முன்நின்று செய்தேன்
" முந்திரிக்கொட்டை" என்றார்கள்..

அவர்களைப் பின் தொடர்ந்தேன்
" பச்சப்புள்ள" என்றார்கள்

யாரைப்பார்த்தாலும் வணங்கினேன்
" கும்பிடு கள்ளன் "என்றார்கள்

வணங்குவதை நிறுதினேன்
  "தலைக்கனம்" என்றார்கள்

ஆலோசனை வழங்கினேன்
" படிச்ச திமிர்" என்றார்கள்

சுயமாக முடிவெடுத்தேன்
" அதிபுத்திசாலி "
என்றார்கள்

நான் அடிக்கடி அழுததால்
"இவனிடம் கவனம்" என்றார்கள்

நான் சிரித்தபோதெல்லாம்
"மறை கழண்டுப்போச்சி" என்றார்கள்

எதிர்கேள்வி கேட்டால்
"வில்லங்கம்"என்றார்கள்

ஒதுங்கி இருந்தால்
"பயந்தாங்கொள்ளி "என்றார்கள்

உரிமைக்குப் போராடினால்
"கலகக்காரன் "என்றார்கள்..

எதற்கும் கலங்காமல் இருந்தால்
"கல் நெஞ்சன்" என்றார்கள்

"நாலுபேர் என்ன நினைப்பார்கள்?

நாலுபேர் என்ன பேசுவார்கள்?"

யாரோ நாலுபேருக்காக வாழ்ந்தேன்...

தொலைவில் கிடந்தது வாழ்க்கை..

அந்த நாலுபேரை கழற்றிவிட்டு
என்னை அணிந்துக்கொண்டேன்...

துலங்கத் துவங்கியது
எனக்கான வாழ்வின் துளிர்...

Comments

  1. Gudmrng friends, brothers and sisters.. Have a blessed day ahead..

    ReplyDelete
  2. Intha weekum trb ora silenta irukkang mam

    ReplyDelete
    Replies
    1. Pending issues ellam mudikka process panitu irupanga.. Soon we wil get some good news..

      Delete
  3. Good morning ano mam
    BEO RESULT PATHI ETHANUM NEWS

    ReplyDelete
    Replies
    1. Gudmrng friend..

      BEO also one among the pending issues, so soon they will fix it..

      Delete
  4. Good morning mam... Today Economics additional candidates CV... just 16 candidates only are there..so tonight TRB kitta irrunthu ethavathu announcements expect pannalam...

    ReplyDelete
    Replies
    1. Gudmrng Murali sir..

      Yes, pg porutha vara chances adhigam..

      Delete
  5. Only pgtrb மட்டும் வரும் நல்ல செய்தி

    ReplyDelete
  6. Good morning friends .viraivil therthal

    ReplyDelete
  7. Second list may be expected today😁😁😁😁😁😁😁😁

    ReplyDelete




  8. தமிழக அரசுப்பள்ளிகளில் 400 ஆசிரியர் பணியிடங்கள் – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!!

    தமிழக அரசுப்பள்ளிகளில் 400 ஆசிரியர் பணியிடங்கள் - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!!
    தமிழக அரசுப்பள்ளிகளில் 400 ஆசிரியர் பணியிடங்கள் - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!!


    தமிழக அரசுப்பள்ளிகளில் 400 ஆசிரியர் பணியிடங்கள் – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!!
    தமிழகத்தில் உள்ள 35 நடுநிலை பள்ளிகளை உயர்நிலை பள்ளிகளாகவும், 40 உயர்நிலை பள்ளிகளை மேல்நிலை பள்ளிகளாகவும் தரம் உயர்த்துவது குறித்து தமிழக அரசின் உத்தரவின்படி பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

    தரம் உயர்த்தப்படும் பள்ளிகள்:
    தமிழகத்தில் கொரோனா காரணமாக பள்ளிகள் 10 மாதங்களாக மூடப்பட்டிருந்தன. நேற்று முதல் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. பல நாட்களுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டதால் 85% மாணவர்கள் ஆர்வத்துடன் பள்ளிக்கு வந்தனர். மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.


    இதன்படி தற்போது தமிழகத்தில் உள்ள 35 நடுநிலை பள்ளிகளை உயர்நிலை பள்ளிகளாக தரம் உயர்த்தவும், 40 உயர்நிலை பள்ளிகளை மேல்நிலை பள்ளிகளாக தரம் உயர்த்தவும் ஏற்கனவே சட்டப்பேரவையில் முதல்வர் அறிவிப்பு வெளியிட்டதை தொடர்ந்து, இந்த கல்வியாண்டில் தமிழகத்தில் உள்ள அரசுப்பள்ளிகள் தரம் உயர்த்தப்படுகிறது.

    தமிழக சட்டக்கல்லூரிகள் நவீனமயமாக்கல் – அரசு பரிசீலிக்க நீதிமன்றம் உத்தரவு!!

    இதன்படி 35 நடுநிலை பள்ளிகளிலும், 40 உயர்நிலை பள்ளிகளிலும் ஒரு பள்ளிக்கு 9 ஆசிரியர்கள் வீதம் 360 ஆசிரியர்களும், 40 கணினி ஆசிரியர்களும் என மொத்தம் 400 ஆசிரியர்கள் பணி அமர்த்தப்பட உள்ளனர். இதற்கு தமிழக அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் 41.11 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை செயலாளர் தீராஜ்குமார் தெரிவித்துள்ளார்.

    ReplyDelete
    Replies
    1. எல்லாரும் சொல்லிட்டு போய்ட்டாங்க இப்ப தீரஜ் குமாரா

      Delete
    2. எதும் நடக்கமாட்டிங்குது

      Delete
  9. உபரி ஆசிரியர் கொண்டு நிரப்பலாம்

    ReplyDelete
    Replies
    1. ஒரு வழியா உண்மைய புரிஞ்சுக்கிட்டீங்க போல

      Delete
  10. 2013,2014,2017,2019ல் TET தேர்வில் தேர்ச்சி பெற்று இதுவரை பணி கிடைக்காமல் உள்ளவர்களுக்கு பிப்ரவரி 24ல் பணிநியமனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது

    முதல் கட்டமாக சுமார் 48500 பணியிடம் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது

    இவர்கள்
    பள்ளி கல்வி துறைக்கு, புதிதாக தேர்வு செய்யப்பட்டவுள்ளனர்48500 புதிய ஆசிரியர்களின் தேர்வுப் பட்டியலை, டி.ஆர்.பி., (ஆசிரியர் தேர்வு வாரியம்), விரைவில் இணையதளத்தில் வெளியிடயிருக்கிறது



    ஏற்கனவே2013,2014,2017,2019ல் நடந்த டி.இ.டி., ஆசிரியர் தகுதி தேர்வுகளில், தேர்ச்சி பெற்ற, 80 ஆயிரம் பேரில் இருந்து, 27500 பட்டதாரி ஆசிரியரும், 21000 இடைநிலை ஆசிரியர்களும் தேர்வு செய்யப் படவுள்ளனர்



    பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் எண்ணிக்கை :

    தமிழ் 4975

    ஆங்கிலம் 5862

    கணிதம் 4122

    இயற்பியல் 1505

    வேதியியல் 1612

    தாவரவியல் 1660

    விலங்கியல் 1450

    வரலாறு 6314

    ReplyDelete
    Replies
    1. Dear admin mam,above news unmaiya?

      Delete
    2. கின்னஸ் ரெகார்ட், பகல் கனவு முத்தி போச்சி

      Delete
    3. மறுபடியுமா அன்றே சொன்னேன் முன்னாள் முதல்வர் பிறந்தநாள் அன்று பணிநியமனம் என கருத்து பதிவிடுவார்கள் என்று நண்பர் Hacker போட்டுட்டார்

      Delete
    4. நம்ம நெலம அப்படி இருக்கு

      Delete
    5. Hacker bro


      கற்பனையா இருந்தாலும் ஒரு நியாயம் வேனாமா !!!

      Delete
    6. Dear Unknown..

      Enaku therinju chances ila..

      Delete
  11. 😆😆😆😆😆😆

    ReplyDelete
  12. 27500 பட்டதாரி ஆசிரியரும், 21000 இடைநிலை ஆசிரியர்களும் தேர்வு செய்யப் படவுள்ளனர் ayayo mudila daa sami

    ReplyDelete
  13. Hacker அருமையான கற்பனை

    ReplyDelete
  14. Hacker nee oru joker,ha ha ha ......

    ReplyDelete
  15. Hacker mentally affected nu ninaikiren velai paithiyam agitar

    ReplyDelete
  16. Hacker sir
    யார் உங்களுக்கு இந்த தகவல் சொன்னார்கள்

    உண்மை தகவல் மட்டும் பதிவு செய்யுங்கள்
    Rumors சொல்லாதீர்கள்

    ReplyDelete
  17. இவ்வளவு போஸ்டிங் போட்ட அரசு கஜானா காலியாயிடும்

    ReplyDelete
  18. இந்த ஜென்மத்தில் திருந்த மாட்டீங்க டா

    ReplyDelete
  19. Hi mam madurai target la pgtrb ku fees evlonu therinja sollunga mam

    ReplyDelete
    Replies
    1. 12000 ,rooms and food seperate

      Delete
    2. Hi mam/sir..

      Naa visarichu solraen, naa last time sai la dhan padichen, 12k and hostel periyar bus stand opposite la irukum. Classes poitu vara convenient ah irukum..

      Delete
    3. Na madurai than sis so no problem thanks for your reply mam

      Delete
    4. Oh apo hostel and food selavu micham.. All the best friend..

      Delete
    5. 20000 New student

      17000 old student

      Delete
    6. Iyooooo 20000 aaa unmaya frd

      Delete
  20. Hacker sir நீங்கள் போட்ட செய்தி பொய் செய்தி என்று அனைவருக்கும் தெரியும் .இருந்தாலும் அதை படிக்கும் போது அவ்வளவு சந்தோஷம்.

    ReplyDelete
  21. Still waiting for second list😰😰😰😰😰😰😰😰😰😰😰

    ReplyDelete
    Replies
    1. வெயிட் பண்ணிட்டே இருக்க வேண்டியது தான்

      Delete
  22. Tet certificate employment la register pananuma madem

    ReplyDelete
    Replies
    1. En friend already 2014 la register paniten solra

      Delete
    2. 2013 & 2017 pass Pani iruken

      Delete
    3. Sir ethuku register pannidunga.athu onum periya velai ila sir.nanum register paniruken.

      Delete
    4. Sir ethuku register pannidunga.athu onum periya velai ila sir.nanum register paniruken.

      Delete

Post a Comment

Popular posts from this blog

❤️❤️❤️❤️

₹ நாளை என்பதே நமக்கு உறுதியில்லை... நாளும் அது புரிவதில்லை. ₹ இரண்டு வயது ஆவதற்குள் நாம் பேச கற்றுக்கொள்கிறோம்... ஆனால் எத்தனை வயது ஆனாலும், “எப்படி பேச வேண்டும்” என்பதை நாம் கற்றுக்கொள்வதில்லை...! ₹ நாம் சந்திக்கும் ஒவ்வொரு நபர்களும் வெவ்வேறு விதமான போராட்டக் களத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் ... ₹ நம்மில் பெரும்பாலானோர், சுய ஆர்வம் கொண்டு நீந்த கற்றுக் கொண்டதை விட இன்னொருவர் தள்ளி விட்டதன் மூலம் நீந்த கற்றுக் கொண்டவர்களே அதிகம் .... ₹ வாழும் நாட்களில் சந்தோஷத்தையும், மனஅமைதியையும் தேடுங்கள் ... மனிதனுடைய வாழ்நாள் தேவைகள், ஒரு போதும் தீர்ந்துவிடப்போவதில்லை ₹ அன்பை வெளிப்படுத்த தயக்கம் இருப்பது போலவே ... இந்த கோபத்தை வெளிப்படுத்தவும் இருந்து விட்டால் எத்தனை நன்றாக இருந்துவிடும்? ₹ சில பிள்ளைகளுக்கு 25 ஆண்டுகள் தகப்பனின் வருமானத்தில் தான் வாழ்ந்தோம் என்பது மறந்து போகிறது ... 15 ஆண்டுகள் நம் வருமானத்தில் வாழ்கிறார்கள் என்பது மட்டும் நன்றாக நினைவிலிருக்கிறது. ₹ கெட்ட உள்நோக்கத்துடன் கூறப்படும் உண்மை, ஆயிரம் பொய்களைவிட மோசமானது! ₹ வேலை இல்லாதவனின் பகலும், நோயாளியின் இரவும் மிக நீளமானவை

PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

  PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசு / நகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும் 01.08 . அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பணியாளர் நிர்ணயம் ( Staff Fixation ) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் பார்வையில் காணும் அரசாணைகளை பின்பற்றி இக்கல்வியாண்டிற்கு ( 2022-23 ) 01.08.2022 அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின்படி பட்டதாரி / முதுகலை ஆசிரியர்கள் பணியிடம் ( BT & PG_Staff Fixation ) நிர்ணயம் செய்தல் சார்பான பணிகள் மேற்கொள்ளப்படவிருக்கிறது. இப்பணியினை மேற்கொள்ள ஏதுவாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக பணியாளர்களுக்கு ஒரு சில அறிவுரைகள் மற்றும் எவ்வாறு கணக்கீடு செய்து நிர்ணயம் செய்தல் போன்ற விவரங்களை உரிய அதுவலர்களால் கீழ்க்கண்ட நிலவரப்படி வழங்கப்படவிருக்கிறது.

COMPETITIVE EXAM FOR TET PASSED CANDIDATES - 2024

UGTRB - Teachers Recruitment Notification -pdf தமிழ்நாடு அரசு பள்ளிகளில் மற்றும் வட்டாரவளமையங்களில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் BRTE பணியிடங்களுக்கான UGTRB தேர்வு அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. 👉தமிழ்வழி இட ஒதுக்கீடு 20%  👉பணியில் இருக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 10% ஒதுக்கீடு  (NOC compulsory)  👉மாற்றுத்திறனாளிகள்  👉மூன்றாம் பாலினத்தவர் 👉69% Reservation  என அனைத்து ஒதுக்கீடு நடைமுறைகளும் முறையாக பின்பற்றப்படும்.  👉 காலிப்பணியிடங்கள் -2222 👉கல்வித்தகுதி -       BED + TNTET PAPER -2 Pass   👉விண்ணப்பம் - Online 01.11.2023 முதல் 30.11.2023 வரை  👉தேர்வு - Offline - OMR BASED  👉weightage Mark - உண்டு TET தேர்ச்சி பெற்ற ஆண்டின் அடிப்படையில் மதிப்பெண்.  ( விவரம் Notification)   As per G.O- 147 👉 கட்டாயத்தமிழ் தகுதித்தேர்வு - உண்டு  👉பாடவாரியாக தேர்வு உண்டு  👉150 கேள்வி - 150 மதிப்பெண்  👉 OC - 60 Mark தேர்ச்சி  👉BC/MBC/ DNC/ SC/ST - 40 MARK தேர்ச்சி  👉சான்றிதழ் சரிபார்ப்பு - உண்டு Notification in pdf-  Click Here