அருமையான கருத்து. நான் இன்று காலை jogging ( ஜாகிங், மெது ஓட்டம், சீராக ஓடல்) சென்றுக் கொண்டிருந்த பொழுது எனக்கு முன்னால் 1/2 கிலோ மீட்டர் சென்று கொண்டிருந்த ஒரு நபரைச் கவனித்தேன். அவர் ஓடிக் கொண்டிருந்த வேகத்தைப் பார்த்த பொழுது அவர் சற்று என்னை விட மெதுவாக ஓடுகிறார் என்பதை என்னால் யூகிக்க முடிந்தது. அது எனக்கு ஒரு நல்ல உணர்வை தந்தது. நாம் அவரை பிடித்து விடலாம் என எனக்கு நானே சொல்லிக் கொண்டேன். எனவே நான் என்னுடைய வேகத்தை அதிகரித்துக் கொண்டே சென்றேன். சிறிது ,சிறிதாக எங்களுக்கு இடையே உள்ள தூரம் குறைந்து கொண்டே வந்தது. சில நிமிடங்களுக்கு பிறகு , எங்களுக்கு 100 அடி இடைவெளி மட்டுமே இருந்தது. எனவே நான் இன்னும் வேகத்தை கூட்டி அவரைப் பிடித்து விட வேண்டும் என்ற நோக்குடன் வேகத்தை அதிகரித்தேன். இறுதியாக, சாதித்து விட்டேன்! அவரைப் பிடித்து, அவரைக் கடந்தும் விட்டேன். எனக்குள் " அவரைக் கடந்து விட்டேன்", என மிகவும் நல்ல படியாக உணர்ந்தேன். ஆனால் அந்த நபருக்கு , நான் அந்த நபருடன் போட்டி போட்டது கூட தெரியவில்லை. அவரைக் கடந்த பிறகு, நான் அவ...