சிவன் கோவில்களில் அனைத்து நந்திகளும் இடக்காலை மடக்கி வலக்காலை முன்வைத்து அமர்ந்திருக்கும். ஆனால் நம் அண்ணாமலையார் கோவிலில் மட்டும் பெரிய நந்தி வலக்காலை மடக்கி இடக்காலை முன்வைத்து அமர்ந்து இருப்பார்......
முகலாயர் காலத்தில் திருவண்ணாமலை வந்த அரசன் ஒருவன் கோவிலை சிதைக்க எண்ணினான். அப்பொழுது கோவில் அருகில் ஐந்து சிவபக்தர்கள் ஒரு காளை மாட்டினை வழிபட்டு அதனை பல்லக்கில் சுமந்து சென்று வழிபட்டனர்.
அரசன், நீங்கள் தலையில் வைத்து வணங்குவது ஏன் என கேட்டான்? அதற்கு அந்த ஐவர் எம் இறைவன் சிவபெருமானின் வாகனம். அவரை சுமப்பவரை நாங்கள் சுமப்பது பெரும்பாக்கியம் என்றனர். அதற்கு அரசன் சிவன் இந்த அண்ணாமலையார் உண்மையிலேயே சக்தி உடையவராக இருந்தால் நான் இந்த மாட்டை இரண்டாக வெட்டுகிறேன் வந்து சேர்த்து வைத்து உயிர் கொடுக்கச்சொல் என்று கூறி வெட்டி விட்டான்.உடனே பதறிய ஐவரும் அண்ணா
மலையாரிடம் முறையிட அண்ணாமலையார் அசரீரியாய் "வடக்கே என் ஆத்ம பக்தன் ஒருவன் நமசிவாய என ஜபித்துக்கொண்டிருக்கிறான் அவனை தேடி இங்கு அழைத்து வாருங்கள்" என்றார்
உடனே அந்த சத்தத்தை கேட்டு அவ்விடம் சென்ற ஐவரும் 15 வயது பாலகனை கண்டனர். ஐவரும் "இச்சிறு பாலகனா பக்தன் " என ஏளனம் செய்த போது அருகே காட்டிலிருந்து புலி ஒன்று ஐவரையும் தாக்க முற்பட்டது . அச்சிறுபாலகன் தான் புலியை நமசிவாய மந்திரம் கூறி வென்று அவர்களை காப்பாற்றினான்.ஐவரும் நடந்ததை கூறி
அச்சிறுபாலகனை அழைத்து சென்றனர். அண்ணாமலையார் கோவில் வந்தடைந்த அவர்களை அரசனை கண்டு தான் அந்த மாட்டின் இரண்டு துண்டுகளையும் இணைத்து உயிர் கொடுப்பதாக கூறினான். உடனே அண்ணா மலையார் முலஸ்தானம் சென்று நமசிவாய மந்திரம் கூறி அந்த மாட்டினை இணைத்து உயிர்பெறச்செய்தார்.
இதனை கண்ட ஐவரும் பாலகனும் ஓம் நமசிவாய அண்ணாமலைக்கு அரோகரா எனப் போற்றி பேரானந்தம் அடைந்தனர். இதனையும் நம்பாத அரசன் கடைசியாக ஒரு போட்டி. நம் பெரிய நந்தியை பார்த்து இந்த உயிரில்லாத இந்த நந்திக்கு உயிர் கொடுத்து காலை மாற்றி மடித்து வைத்து உட்கார்ந்து விட்டால் உங்கள் அண்ணாமலையாரை வணங்கி இக்கோயிலை சிதைக்கும் முயற்சி யையும் கொள்ளை அடித்த நகைகளையும் அண்ணாமலையாரிடமே ஒப்படைத்து விட்டு செல்கிறேன் என்றான்.
உடனே நமசிவாய மந்திரம் கூறிய அப்பாலகனும் ஐவரும் அண்ணாமலையாரிடம் நம் பெரியநந்திக்கு உயிரூட்டுமாறு வேண்டினர். கருணைக்கடல் அல்லவா நம் அண்ணாமலையார் உடனே நம் பெரிய நந்திக்கு உயிர் கொடுத்து கால் மாற்றி மடக்கி வைக்க உத்தரவிட்டார். அன்று முதல் நம் அண்ணாமலையார் கோவிலின் பெரிய நந்தி மட்டும் வலது காலை மடித்து இடது காலை முன் வைத்து அண்ணாமலையாரை வணங்கி வருகிறார். அரசனும் அண்ணாமலையானை வணங்கி அனைத் தையும் ஒப்ளடைத்துவிட்டு சென்றுவிட்டான்
Gudmrng friends, brothers and sisters.. Have a blessed day ahead..
ReplyDeleteTrt???
ReplyDeleteGood morning Mam
ReplyDeleteGudnoon Devi mam..
DeletePg???
ReplyDeleteSister ,
ReplyDeleteஅதிமுக ஆட்சி கலைந்தாள் போஸ்டிங் அம்பேலா???
Vaaipey ila brother.. Trb related ellam endha aatchi vandhalum nadakkum..
Deleteவணக்கம் தல
ReplyDeleteGudnoon friend..
Deleteஅப்போ trt
ReplyDeleteGood evening ano sis
ReplyDeleteGudeveng Revathi sis..
DeleteTrt பத்தி மட்டும் எந்த தகவலும் வராதா மேடம்
ReplyDelete