அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு இலவச காலணி வழங்கும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வந்தது.இந்த கல்வி ஆண்டு முதல் மாணவ-மாணவிகளுக்கு இலவச காலணிக்கு பதிலாக இலவச ஷூ-சாக்ஸ் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன்படி 6 முதல் 10-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு ஒரு ஜோடி கருப்பு நிற ஷூ அத்துடன் ஒரு ஜோடி கருப்பு அல்லது வெள்ளை சாக்ஸ் வழங்கப்படுகிறது.
ஏழை-எளிய மாணவ- மாணவிகள் பயன்பெறும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதற்காக பல்வேறு அளவுகளில் ஷூ-சாக்ஸ் தயாராகி வருகின்றன. மொத்தம் 28 லட்சத்து 64 ஆயிரத்து 865 மாணவ- மாணவிகளுக்கு ஷூ மற்றும் சாக்ஸ்கள் வழங்கப்படுகின்றன. வருகிற கல்வி ஆண்டு முதல் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
தற்போது அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் சேர்ந்து படிக்கும் மாணவ- மாணவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அவர்களுடைய நலனை கருத்தில் கொண்டு இந்த திட்டத்தை செயல்படுத்த அரசு முடிவு செய்து இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.இலவச காலணிக்கு பதிலாக ஷூ-சாக்ஸ் வழங்கும் திட்டத்துக்காக தமிழக அரசு ரூ.58 கோடியே 36 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளது. இது ஏற்கனவே இலவச காலணிக்கு வழங்கப்படும் தொகையைவிட ரூ.10.02 கோடி அதிகம்.குறிப்பிட்ட காலத்தில் இவற்றை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வரும் கல்வி ஆண்டில் வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
Good morning mam
ReplyDelete