Skip to main content

சவுக்கடி..

அயல் நாட்டில்
மது அருந்திய குற்றத்திற்காக மூவர் கைது செய்யப்பட்டனர்...!
.
ஒரு ரஷ்யன்.. ஒரு சீனன்.. ஒரு தமிழன்..
.
அவர்களுக்கு 50 சவுக்கடிகள்.. தண்டனையாக அளிக்க உத்தரவிடப்பட்டது..!
ஆனால் அதற்கு முன்..
அவர்கள்
வேண்டுவது 'இரண்டு' செய்யப்படும் என சொல்லப்பட்டது..!
.
முதலில் ரஷ்யன்..!!
"எனக்கு.. 50 சவுக்கடிகளில் பாதியாக
குறைத்து.. 25 ஆக கொடுங்கள்..!" என்றான்..!
ஒப்புக்கொள்ளப்பட்டது..!
.
இரண்டாவது என்ன..? என்று கேட்டனர்..!
"என் முதுகில்.. ஒரு பெரிய தலையணை ஒன்றை கட்டுங்கள்..!"
என்றான்..!
.
அவ்வாறே செய்யப்பட்டது..!!
பத்து சவுக்கடியில் தலையணை கிழிந்து...
அவன் பலமான காயத்துக்கு ஆளானான்..!
.
அடுத்து சீனன்..!!
"எனக்கும் 50 சவுக்கடியில்.. பாதியாக குறைத்து 25 அடி கொடுங்கள்" என்றான்..!
ஒப்புக்கொள்ளப்பட்டது..!!
.
இரண்டாவது...
"என் முதுகில் இரண்டு தலையணைகளை கட்டுங்கள்..!"
என்றான்..!
.
அவ்வாறே செய்யப்பட்டது..!
15 சவுக்கடிகளில் தலையணைகள்
கிழிந்து..
அவன் முதுகு பிளந்தது..!!
.
அடுத்ததாக தமிழன்..!
அவன் அமைதியாக சொன்னான்..
"எனக்கு 50 சவுக்கடியை... 75 ஆக உயர்த்துங்கள் என்றான்..!
.
அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சியுடன் அவனை பார்த்தனர்.!
ஒப்புக்கொள்ளப்பட்டது..!
.
இரண்டாவது என்ன..? என்று கேட்கப்பட்டது..!!
.
அவன் சொன்னான்....
"எனக்கு தண்டனை கொடுத்த.. நீதிபதியை,
என் முதுகில் தூக்கி கட்டுங்கள் என்றான்..!!!
.
இதனைக் கேட்ட நீதிபதி அதிர்ந்து போனாா்....
.
அப்போது நீதிபதியை பார்த்து அவன் கேட்டது...
மது அருந்தியதற்காக தண்டனை கொடுத்த தாங்கள்...
அதனை விற்பனை செய்பவர்களுக்கு இவ்வரசு தரும் ஆதரவு மற்றும் சலுகைகளை,
நீதித்துறை ௧ண்டும் காணாதிருப்பதற்காக முதல் சவுக்கடியின் தொடக்கம் இது என்றான்.......

Comments

 1. Gudmrng friends, brothers and sisters.. Have a blessed day ahead..

  ReplyDelete
 2. Happy B'day Revathi sis.. As I wished u last year, hope u'll b celebrating this b'day with kutty paapa.. Have a blast..

  ReplyDelete
 3. why trb cancelled lecturer exam mam?

  ReplyDelete
 4. இன்றைய பதிவு உண்மையான சவுக்கடி மேம்

  ReplyDelete
 5. willeducational psychology question same for all major in upcoming pg trb mam? is same means 40 marks easily get other major except physics?

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

சிந்தனைச் சிதறல்..

மனம் ஒருமுகப்பட.. *காற்று ஒருமுகப்பட புயலாகிறது! மேகம் ஒருமுகப்பட மழையாகிறது.!  நீர் ஒருமுகப்பட நதியாகிறது!  நதி ஒருமுகப்பட கடலாகிறது!  மனம் ஒருமுகப்பட வெற்றி உருவாகிறது!  உங்களைக் கையாள மூளையைப் பயன்படுத்துங்கள்! மற்றவரைக் கையாள இதயத்தைப் பயன்படுத்துங்கள்!  இதயத்தைக் கவர்ந்துவிட்டு, எதைச் செய்தாலும், அது இணக்கமாகவே இருக்கும்.  வாயில் உதிரும் வார்த்தைகளை விட இதயத்திலிருந்து உதிரும் வார்த்தைகளால் அன்பு மலரும்! அன்பே ஆனந்தம் தரும்.*_ கோபம் ஒரு சுயதண்டனை, அடுத்தவர் செய்த தவறுக்கோ அல்லது அடுத்தவர் தவறு செய்திருக்கலாம் என்ற நிலையிலோ நமக்கு நாமே கொடுத்துக் கொள்கிற தண்டனைதான் கோபம்!  கோபத்தில் நடிப்பிருக்கலாம்! துடிப்பிருக்கக்கூடாது!*_  *உறவுகள் கூட நிலவைப் போன்று தான்..!* *"தூரத்தில்" இருக்கும் வரை* *ரசித்துக் கொண்டாடப்படும்..!!* *எதிர்பார்ப்பை* *குறைத்துக் கொள்ளுங்கள்..!* *ஏமாற்றத்தால் சோர்வடையத்* *தேவையில்லை..!!* *அன்று "வயதைப்"* *பார்த்து வந்தது..* *இன்று "வசதியைப்"* *பார்த்து தான் வருகிறது..!!* *"மரியாதை"* *செல்லும் பாதை*  *சரியானதாக இல்லாத போது..*

அமைதி..

நாட்டில் அவ்வப்போது ஏதாவது போட்டிகள் நடத்தி வெற்றி பெறுபவர்களுக்கு சன்மானம் அளிப்பது அந்த மன்னனின் வழக்கம். ஒரு முறை அமைதி என்றால் என்ன என்பது குறித்து தத்ரூபமான ஓவியம் வரைபவர்களுக்கு மிகச் சிறந்த பரிசு வழங்கப்படும் என்று அறிவித்தான். இதையடுத்து நாட்டின் முன்னணி ஓவியர்கள் அமைதியை பிரதிபலிக்கும் வண்ணம் தத்ரூபமான பல ஓவியங்களை வரைந்து அரண்மனைக்கு எடுத்து வந்தார்கள். மன்னன் ஒவ்வொரு ஓவியமாக பார்வையிட்டுக் கொண்டே வந்தான். அமைதியை ஒவ்வொரு ஓவியரும் ஒரு மாதிரி பிரதிபலித்து இருந்தார்கள். ஒருவர் அழகான ஏரியை வரைந்திருந்தார். ஒரு அழகிய மலையின் அடிவாரத்தில் அந்த ஏரி காணப்பட்டது. மலையின் பிம்பம் ஏரியில் பிரதிபலித்து பார்க்கவே ரம்மியமாக இருந்தது. மற்றொருவர் மலர்களை வரைந்திருந்தார். பார்த்தவுடனே பறிக்கத் தூண்டும் வகையில் அம்மலர்கள் தத்ரூபமாக இருந்தது. இப்படி ஒவ்வொருவரும் அமைதியை தங்களுக்கு தோன்றியவாறு ஓவியத்தில் பிரதிபலித்திருந்தனர். ஒரு ஓவியத்தில் ஒரு மலையின் மீதிருந்து ஆக்ரோஷமாக கொட்டும் நீர்வீழ்ச்சியின் படம் வரையப்பட்டிருந்தது. அதுமட்டுமா இடியுடன் மழை வேறு பொழிந்து கொண்டிருந்தது. இது அமைதியே அல்ல.

படித்ததில் பிடித்தது..

 கடவுளிடம் ஒரு விவசாயி கடுமையாகச் சண்டைக்குப் போனான். ”உனக்குப் பயிர்களைப் பற்றி என்ன தெரியும்? நீ  நினைத்தபோது மழையை அனுப்புகிறாய். தப்பான சமயத்தில் காற்றை வீசுகிறாய். உன்னால் பெரிய தொந்தரவாக இருக்கிறது. பேசாமல், இந்த வேலைகளை விவசாயி ஒருத்தனிடம் ஒப்படைத்துவிடேன்!” என்றான். கடவுள் உடனே,  “ அப்படியா? சரி.  இனிமேல் வெளிச்சம், மழை, காற்று எல்லாம் உன் கட்டுப்பாட்டிலேயே இருக்கட்டும்” என்று வரம் அருளிவிட்டுப் போய்விட்டார். விவசாயிக்கு சந்தோஷம் பிடிபடவில்லை. அடுத்த விதைப்பிற்கான பருவம் வந்தது. ”மழையே பெய்” என்றான். பெய்தது. நிறுத்தச் சொன்னபோது,  மழை நின்றது. ஈரமான நிலத்தை உழுதான். தேவையான வேகத்தில் காற்றை வீசச் செய்து,  விதையை தூவினான். மழை, வெயில், காற்று எல்லாமே அவன் சொன்ன பேச்சைக் கேட்டன. பயிர் பச்சைப்பசேல் என வளர்ந்தது. வயல்வெளியைப் பார்க்கவே மிகவும் ரம்மியமாக இருந்தது. அறுவடைக் காலமும் வந்தது. விவசாயி ஒரு கதிரை அறுத்தான். அதனை உதிர்த்து, திறந்து பார்த்தான். அதிர்ந்தான்.. உள்ளே தானியத்தைக் காணவில்லை, மிகச் சிறிய பதர்தான் இருந்தது. அடுத்தது, அதற்கடுத்தது என்று ஒவ்வொரு தானியக்கதிராக வெட்டி