Skip to main content

வாழ்க வளமுடன்..

நல்ல குடும்பம் -
அருட்தந்தை பேசுகிறார்.
மனவளக்கலைப் பேராசிரியர்கள் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
இல்லற வாழ்க்கைச் சிறப்பாக அமைய வேண்டும் என்றால், அதற்கு என்ன வழி?
மூன்று பண்புகள்:
1.  *விட்டுக் கொடுப்பது,*
2.  *அனுசரித்துப் போவது,*
3.  *பொறுத்துப் போவது.*
இவை மூன்றும் இல்லை என்றால் இல்லறம் இன்பமாக இருக்காது.
இந்த இடத்தில் ஒரு சந்தேகம். ஒரு பேராசிரியை எழுந்து அதைக் கேட்டார்.
“விட்டுக்கொடுப்பது என்று பொதுவாக சொல்கிறீர்கள்...
யார் விட்டுக் கொடுப்பது? கணவனா? மனைவியா? பிரச்சினையே அங்குதானே ஆரம்பம்!”
எல்லோரும் ஆவலோடு மகரிஷியின் முகத்தைப் பார்கிறார்கள்.
இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்?
கணவனுக்குச் சாதகமாகப் பேசுவாரா?அல்லது
மனைவிக்குச் சாதகமாகப் பேசுவாரா?
மகரிஷி சிரிக்கிறார்.அப்புறம் சொல்கிறார்.
“யாரிடம் அன்பு அதிகமாக இருக்கிறதோ, அறிவாளியோ அவர்கள் தான் விட்டுக் கொடுப்பார்கள். அவர்கள்தான் அனுசரித்துப் போவார்கள். அவர்கள்தான் பொறுத்துப் போவாகள்.”
அரங்கம் கைதட்டலால் அதிர்கிறது.
ஆரவாரம் அடங்கியவுடன் அருட்தந்தை தொடந்து பேசுகிறார்:
“அன்புள்ளவர்களிடம் தான் பிடிவாதம் இருக்காது.பெருந்தன்மை இருக்கும். குடும்பத்தில் ஆற்றலை உற்பத்தி பண்ணுகிறவர்கள் அவர்கள்தாம்...
அவர்கள்தாம் Power Producers, Charged Batteries, நம்பிக்கை நட்சத்திரங்கள்.... இறை ஆற்றலோடு நெருக்கம் உள்ளவர்கள். அவர்களுக்குத்தான் தவம் எளிதாகக் கைகூடும்.
அவர்கள் தொட்டதெல்லாம் துலங்கும்.
அத்தனைச் சிக்கல்களுக்கும் தீர்வாக அவர்கள் திகழ்வார்கள். அருட்பேராற்றல் ஆசிர்வதிக்கப் பெற்றவர்கள்!”
அருட்தந்தையின் விளக்கம் நமக்குள் ஓர் உந்துதலை ஏற்படுத்துவதை உணர முடிகிறது.
*விட்டுக்கொடுப்பதில் முந்திக் கொள்ள வேண்டும் என்கிற வெளிச்சத்தை நமக்குள்ளே உண்டு பண்ணுகிறது.*
அமைதியான குடும்பமே நல்ல குடும்பம். குடும்ப அமைதியே உலக அமைதிக்கு வித்தாகும் என்கிறார் மகரிஷி.
அமைதியான குடும்ப வாழ்விற்கு மேலும் அவர் சொல்கின்ற கீழ்க்கண்ட பத்து அறிவுரைகள கவனத்தில் கொள்வோம்.
பத்து வழிகள்:
1.  நாம் பெற்ற ஞானத்தைப் பயன்படுத்த வேண்டிய இடம் நம் குடும்பமே.
2.  கணவன்-மனைவி உறவுக்கு இணையாக உலகில் வேறெந்த உறவையும் சொல்ல முடியாது.
3.  குடும்ப நிர்வாகம் செய்வது உங்கள் அறிவாகத்தான் இருக்க வேண்டும். எந்த நிலையிலும் உணர்ச்சிகள் நிர்வாகம் செய்யக் கூடாது.
4.  வரவுக்குள் செலவை நிறுத்துங்கள். அது குடும்ப அமைதியைக் காக்கும். வீண் செலவுகள் செய்ய வேண்டாம். அது குடும்ப அமைதியைக் குலைக்கும்.
5.  ஒரு குடும்பத்தில் உள்ள எல்லோருக்கும் பொருளீட்டும் திறன் வேண்டும். அல்லது பெரும்பாலோர் பொருளீட்டும் திறன் பெற்றிருத்தல் வேண்டும். சிலர் அதிகமாக சம்பாதிக்கலாம்,சிலர் குறைவாகச் சம்பாதிக்கலாம். அப்படி இருந்தாலும் அதைக் காப்பது, நுகர்வது, பிறருக்கு இடுவது ஆகிய செயல்களில் சமமான பொறுப்பு வேண்டும்.
6.  கணவனுக்குத் தெரியாமல் மனைவியோ, மனைவிக்குத் தெரியாமல் கணவனோ சம்பாதிப்பதும், செலவு செய்வதும், சேமிப்பதும் சரியாக இருக்காது. அது பிணக்கிக்கு இடம் தரும். மனதில் ஒளிவு மறைவு வைத்துக் கொண்டிருந்தால் தெய்வீக உறவு இருக்காது.  பொறுப்பற்று வீண் செலவு செய்பவராக இருந்தால் இது பொருந்தாது.
7.  குடும்ப அமைதி நிலவ, சகிப்புத்தன்மை, விட்டுக்கொடுத்தல், தியாகம் என்ற மூன்றையும் கடைபிடித்து வரவேண்டும்.
8.  பிறர் குற்றத்தைப் பெரிதுபடுத்தாமல் பொறுத்தலும், மறத்தலும் அமைதிக்கு வழி வகுக்கும்.
9.  தனக்குக் கிடைத்த வாழ்க்கைத்துணையைப் பற்றி யாரும் குறை கொள்ளத் தேவை இல்லை. அவரவர் அடிமனமே இதைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும்.
10.  நல்ல குடும்பத்தில் நன்மக்கள் தழைப்பார்கள். பிறவிப் பெருங்கடல் நீந்துவதற்கும் குடும்ப அமைதி இன்றியமையாததாகும்.
வாழ்க வளமுடன்

Comments

  1. Gudmrng friends, brothers and sisters.. Have a blessed day ahead..

    ReplyDelete
  2. Good morning Anon mam.When will we expect TRT Exam.

    ReplyDelete
    Replies
    1. Gudmrng Rajasekar sir,..

      Till now there's no sign of notification but still we can expect TRT very soon, am trying to get updates regarding this, if I get any updates sure will comment here.. Keep in touch..

      Delete
  3. Good morning ano sis and friends

    ReplyDelete
  4. அருட்பேராற்றல் இரவும் பகலும்,எல்லா நேரங்களிலும், எல்லா இடங்களிலும், எல்லா தொழில்களிலும் உறுதுணையாகவும், பாதுகாப்பாகவும், வழிநடத்துவதாகவும் அமையுமாக,வாழ்க வளமுடன் Good morning ano mam & frds

    ReplyDelete
  5. Good morning friends and ano mam
    Abdul bro
    Sundar bro
    Nabu bro
    Thanesh mam
    Ramya sis
    Revathi sis
    Sabina sis
    Arul bro
    Fathima sis
    Santhi sis

    ReplyDelete
    Replies
    1. Good morning admin mam n banu sis

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. Pleasant gud mrng banu sis...

      Delete
    4. இனிய காலை வணக்கம் பானு அவர்களே

      Delete
  6. Gud mrng ano mam
    Thanesh sis ,abdul bro,sunder bro,banu sis,fathima sis,santhi sis,arul bro n all frnds...

    ReplyDelete
    Replies
    1. இனிய காலை வணக்கம் ரம்யாசெல்வா அவர்களே

      Delete
  7. Good morning, sister and friends.

    ReplyDelete
  8. Gud noon ano mam
    Ramya sis
    Banu sis
    Revathi sis
    Abdul sir
    Sunder sir
    Arul sir
    Prakash sir
    Thanesh sis
    Shanthi sis and all my frnds

    ReplyDelete
  9. Ano mam real analysis padikka aarambichacha

    ReplyDelete
    Replies
    1. Gudevng Fathima mam..

      Real romba dry so statistics 1&2 dhan poitu iruku, porumaya dha padikraen mam.. Time kedaikkumbothu..

      Delete
  10. This comment has been removed by the author.

    ReplyDelete
  11. Mam any news abt computer science?

    ReplyDelete
    Replies
    1. Mam neenga computer science la ug or pg?

      Delete
    2. Ug to pg conversion unmaiya mam.

      Delete
    3. Computer exam pathi kekka solirkaen mam, minister kitta kekradha reporter frnd sonanga, edhavadhu thagaval irundha kandippa solraen mam..

      Delete
    4. I am pg mam. Pg with B.Ed qualification aagumnu thaan kelvipatten. That's why its getting late.

      Delete
  12. Soon there will be a notification for PG TRB..

    ReplyDelete
  13. Ano mam tet case appo varuthu.
    Court sonna 2week mudiyapoguthu

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

TNTET PAPER2 ENGLISH QUESTIONS..

English Previously discussed question... Identify the pattern of the following sentence. The boy pushed the door open. A)SVOC B)SVOA C)SVO D)SVC Ans:SVOC      The boy-subject,pushed-verb,the door-object,open-complement ('open' is an action by the verb 'pushed') Today's Questions 7th 1st term book. 1.Match the following collective nouns. 1)A cloud of.   -  a)bells 2)A bench of.  -  b)bats 3)A carillion of. -   c)crocodiles 4)A float of.    -d)bishops. A)1-a,2-b,3-c,4-d B)1-d,2-c,3-b,4-a C)1-b,2-d,3-a,4-c D)1-b,2-a,3-d,4-c 2.Form abstract noun for the following words. Clever,Heavy A)cleverly,heavily B)cleverish,heaviness C)cleverer,heavyish D)cleverness,heaviness 3.Fill in the blanks with suitable verb. Saina and Mary _______(go) to bed at 9.00p.m. A)go B)goes C)went D)will go 4.A phrasal verb is a combination of_______ A)A verb & a preposition B)A verb & A ad...

WARM WELCOME..

Welcome to Puthagasalai.. This is to thank respected admin sir, for his wonderful support inspite of so many hindrances.. Hope we will do our best to make this new website a successful one.. I have taken this big responsibility thinking all my lovable friends will support me as how they were so far..

TODAY'S THOUGHT..

"தெருவிலே சுற்றிக் கொண்டிருந்த நாய் ஒன்று"......, தவறிப் போய் அரண்மனைக்குள் நுழைந்தது"....!! "அந்த அறைக்குள் நுழைந்த நாய்க்கு அதிர்ச்சி ".......!!   "அங்கே சுற்றியும் நூற்றுக் கணக்கான நாய்கள் இருந்தன"....!! "சற்று எரிச்சலடைந்து "உர்ர்.. உர்ர்.." என்றது"....!! "அந்த நூறு நாய்களும் பதிலுக்கு".... "உர்ர்.. உர்ர்.." என்றது. "அந்த நாய் கொஞ்சம் பயந்து விட்டது"...!! இருந்தும் கோபம் தாளாமல்.....,   "லொள் லொள்" என குரைக்க ஆரம்பித்தது. "எல்லா நாய்களும் சேர்ந்து குரைத்தது"......!! "அந்த நாய் குரைப்பதை நிறுத்தியவுடன்"...., "மற்ற எல்லா நாய்களும் குரைப்பதை நிறுத்திகொண்டது".....!! அந்த தெரு நாய்க்கு கோபமும் பயமும் அதிகமானது. உடனே...,   " வெறி பிடித்ததை போல் தொடர்ந்து குரைக்க ஆரம்பித்தது".....,   " பதிலுக்கு அந்த நாய்களும் குரைத்தன"....!! மற்ற நாய்களும் குமயங்கியது " இந்த நாய் பயத்தின் உச்சத்தில்...., " வெறி பிடி...