Skip to main content

TODAY'S THOUGHT..

லண்டனில் கர்ப்பிணி பெண்மணி ஒருவர் தன்னுடைய வயிற்றில் இருந்த சிசு கொஞ்சமும் நகராமல் இருப்பதை இரவில் திடீரென்று உணர்ந்தார்.பதறிப்போன அவரும் அவருடைய கணவரும் உடனே மருத்துவரை அணுகினர்.மருத்துவர் பரிசோதித்துவிட்டு காலையில் ஸ்கேன் செய்து பார்க்கலாம் என்றும்,சிசு கர்ப்பப்பைக்குள் வட்டமடிக்காமல் இருந்தால் அது உயிருடன் இல்லை என்பதாகவே தனக்கு படுவதாக கணவரிடம் மட்டும் ரகசியமாக சொல்லிவிட்டு மனதை திடப்படுத்திக்கொள்ள சொல்லிவிட்டார்.

குழப்பத்துடன் வீடு திரும்பிய கணவன் மனைவிக்கு விஷயத்தை சொல்லாமல் கொஞ்சம் அவளுடைய மனநிலையை மாற்ற டேப் ரிக்கார்டரில் ஒரு பாடலை போட்டுவிட்டார்.தன் வேதனையை வெளிக்காட்டிக்கொள்ளாமல் மனைவியின் அருகில் கண் மூடி அமர்ந்திருந்தார்.திடீரென்று தன் மனைவி தன் தோளை தொட்டு உலுக்கவும் கண்ணை திறந்தார்.மனைவி ஆனந்த கண்ணீரோடு சிசு கர்ப்பப்பையின் உள்ளே தற்போது நகர்வதாக சொல்லவும் உடனே மறுபடியும் மருத்துவமனைக்கு இருவரும் பயணப்பட்டனர்.

மீண்டும் பரிசோதித்த மருத்துவருக்கு பயங்கர ஆச்சர்யம்.அவரும் சிசு நகர்வதை உறுதி செய்தார்.எல்லாவற்றையும் ஒன்றுவிடாமல்  விசாரித்தார்.குறிப்பிட்ட பாடலை கேட்டவுடன்தான் குழந்தை நகர்ந்ததை உணர்ந்த அவர் அந்த இசையமைப்பாளரை தெய்வம் என்று வாயார புகழ்ந்தார்.

குழந்தை நல்லபடியாக சிறிது நாட்கள் கழித்து பிறந்தது.அந்த தம்பதியினர் நேராக அந்த இசையமைப்பாளர் வீட்டுக்கு வந்து அவர் காலில் அந்த குழந்தையை போட்டு ,அவர்களும் அவர் காலில் விழுந்து ஆசி வாங்கி சென்றனர்.....

அந்த பாடல் தேவாரம்.....!

அந்த இசையமைப்பாளர் இளையராஜா.....!

Comments

 1. Gudmrng friends, brothers and sisters.. Have a blessed day ahead..

  ReplyDelete
 2. Gudmrng ano sis..nice lines..

  ReplyDelete
 3. Good morning, sister and friends.

  ReplyDelete
 4. Gud mrng . ano mam. And puthagasalai frnds

  ReplyDelete
 5. Gud morning ano mam and all friends

  ReplyDelete
 6. Gd afternoon ano mam and all of u in this blog.

  ReplyDelete
 7. Friends..

  Gudevng all.. Hope all of u might have watched Titanic movie.. Adhula ship sink aga poguthunu therinjum, andha ship la pala per uyira kaapathikka anga inga oodumbothu kuda 4 per continuous ah music vaasichutey irupanga.. Oru point of time la pothum nu matha 3perum povanga andha 4th persona gain solo va play pannuvaru so pona 3perumthirumba vandhu join panipanga..

  Adhu pola dha namalum inga puthagasalai la irukom, don't worry all of u, soon there will be some happy news.. Trust almighty, keep praying..

  ReplyDelete
 8. Good night ano mam & dear friends

  ReplyDelete
 9. Good night ano mam & dear friends

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தற்காலிக ஆசிரியர் பணி தொடர்பான வழக்கு ஜூலை 15-க்கு ஒத்திவைப்பு.

  தற்காலிக ஆசிரியர் பணி தொடர்பான வழக்கு ஜூலை 15-க்கு ஒத்திவைப்பு.   தற்காலிக ஆசிரியர் பணி தொடர்பான வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில் வழக்கானது 15ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. விசாரணையின் போது ஆசிரியர் பணிக்கு விண்ணப்பித்த 1,50,648 பேரில் 28,984 பேர் மட்டுமே தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளதாக அரசு தெரிவித்தது. ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் விண்ணப்பங்களை முதலில் பரிசீலிக்க வேண்டும் என ஐகோர்ட் அரசை அறிவுறுத்தி வழக்கை ஜூலை 15 க்கு ஒத்திவைத்தது.

TET தேர்வுத் தேதி மாற்றம் - TRB அறிவிப்பு

TET தேர்வுத் தேதி மாற்றம் - TRB அறிவிப்பு   தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு 2022 ம் ஆண்டிற்கான ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிக்கை எண் .01 / 2022 , நாள் 07.03.2022 அன்று வெளியிடப்பட்டது . 06.07.2022 பத்திரிகை செய்தியின்படி ஆகஸ்டு மாதம் 25 முதல் 31 வரை உள்ள தேதிகளில் தாள்- I ற்கு மட்டும் முதற்கட்டமாக தேர்வுகள் கணினிவழியில் மட்டுமே நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது என்ற விவரம் தெரிவிக்கப்பட்டது. தற்பொழுது நிர்வாக காரணங்களினால் , தாள்- I ற்கான தேர்வு 10.09.2022 முதல் 15.09.2022 வரை நடத்தப்படவுள்ளது . மேற்படி கணினிவழித் தேர்விற்காக ( Computer Based Examination ) பயிற்சித் தேர்வு ( Practice Test ) மேற்கொள்ளவிரும்பும் தேர்வர்கள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் பயிற்சியினை மேற்கொள்வதற்கு , தேர்வுக்கு 15 நாட்களுக்கு முன்பிருந்து வாய்ப்பு வழங்கப்படும். அனைத்து பணிநாடுநர்களும் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பயிற்சி மேற்கொள்ளலாம் . இது குறித்த அறிவிக்கை , தேர்வுகால அட்டவணை மற்றும் அனுமதிச்சீட்டு ( Admit card ) வழங்கும் விவரம் செப்டம்பர் முதல் வாரத்தில் அறிவிக்கப்படும் .

PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

  PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசு / நகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும் 01.08 . அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பணியாளர் நிர்ணயம் ( Staff Fixation ) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் பார்வையில் காணும் அரசாணைகளை பின்பற்றி இக்கல்வியாண்டிற்கு ( 2022-23 ) 01.08.2022 அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின்படி பட்டதாரி / முதுகலை ஆசிரியர்கள் பணியிடம் ( BT & PG_Staff Fixation ) நிர்ணயம் செய்தல் சார்பான பணிகள் மேற்கொள்ளப்படவிருக்கிறது. இப்பணியினை மேற்கொள்ள ஏதுவாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக பணியாளர்களுக்கு ஒரு சில அறிவுரைகள் மற்றும் எவ்வாறு கணக்கீடு செய்து நிர்ணயம் செய்தல் போன்ற விவரங்களை உரிய அதுவலர்களால் கீழ்க்கண்ட நிலவரப்படி வழங்கப்படவிருக்கிறது.