*மற்றவர்கள் செய்யும் தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொள்ளுங்கள். ஏனெனில் எல்லாத் தவறுகளையும் நீங்களே செய்யும் அளவுக்கு உங்களுக்கு ஆயுள் இருக்காது.* *மிகவும் நேர்மையாக இருக்காதீர்கள்; ஏனெனில் நேரான மரங்கள் முதலில் வெட்டப்படும்; நேர்மையானவர்களே முதலில் பழிதூற்றப்படுவார்கள். கொஞ்சம் வளைந்து கொடுங்கள். வாழ்க்கை, லகுவாய் இருக்கும்.* *இங்கு விஷமற்ற பாம்பு கூட தன்னை விஷமுள்ள பாம்பு போல காட்டிக்கொள்ள வேண்டுமாக்கும்.* *உங்கள் இரகசியங்களை எவரிடம் பகிர்ந்து கொள்ளாதீர். அது உங்களை அழித்து விடும். இது தான் மிகப்பெரிய குரு மந்திரம்.* *ஒவ்வொரு நட்புக்கு பின்னாலும் ஒரு சுயலாபம் இருக்கின்றது. சுயலாபம் இல்லாத நட்பே இல்லை. இது ஒரு கசப்பான உண்மையே.* *ஒரு வேலையை செய்யத்தொடங்கும் முன் இந்த மூன்று கேள்விகளையும் கேட்டுக்கொள்ளுங்கள். ஏன் இதை செய்கின்றேன்? இதன் முடிவு என்னவாக இருக்கும்? இதில் நான் வெற்றிபெறுவேனா இல்லையா? என ஆழமாக யோசித்து அதில் நல்ல விடைகள் கிடைத்தால் மட்டுமே அந்த பணியை செய்யத் தொடங்குங்கள்.* *பயம் உங்களை நெருங்கத் தொடங்கும் போதே அதை தாக்கி அழித்து விடுங்கள்.* *ஒரு பணியைச் செய்யத்தொடங்கியப...