ஒரு முறை #நேருவிடம் ஹிந்துத்துவ அமைப்பினர் மல்லுக்கு நின்றார்கள், அந்த #தெரசா மதமாற்றம் செய்கின்றார் அவரை நாட்டை விட்டு வெளியேற்று என குட்டிகரணம் அடித்தார்கள்.. #நேரு அமைதியாக சொன்னார், "வாருங்கள் செல்வோம் அப்படி அவர் மதமாற்றம் செய்தால் இன்றே அனுப்பிவிடுவோம்" என சொல்லிவிட்டு #கல்கத்தா விரைந்தார்.. #காவி கோஷ்டிக்கு மகிழ்ச்சி தாளவில்லை, செல்வோம் அங்கே அந்தம்மா #ஞானஸ்நானம் கொடுத்துகொண்டிருக்கும், இன்றே தூக்கிவிடலாம் என மகிழ்வோடு சென்றார்கள்.. நேரு அவர்கள் உள்ளே நுழைய அக்கும்பலுக்கு அதிர்ச்சி காத்திருந்தது, அங்கே #தொழுநோயாளிகள் புண்களுக்கு சிலர் மருந்து இட்டுகொண்டிருந்தனர், சிலர் முதியவர்களுக்கு உணவு ஊட்டினர், சிலர் அவர்களை குளிப்பாட்டி கொண்டிருந்தனர்.. சீழ்பிடித்த அந்த நோயாளிகளை, மற்றவர்கள் அருகே செல்லும் அந்த வியாதிக்காரர்களை எந்த கூச்சமுமின்றி அவர்கள் பராமரித்துகொண்டிருந்தார்கள். ஜெபமாலையும், கர்த்தராகிய இயேசு வாழ்க, #அல்லேலூயா என்ற சத்தம் கேட்கும் என சென்றவர்களுக்கு கடும் அதிர்ச்சி.. நேரு கேட்டார் "இந்த நோயாளிகள் எந்த நாட்டுக்காரர்கள்".. #காவிகள் சொ...