இந்திய பெண்களின் கல்வி முன்னேற்றத்துக்காக செயல்பட்டு வரும் அமைப்பு எஜுகேட் கேர்ள். இந்த அமைப்பின் தூதராக நியமிக்கப்பட்டிருக்கிறார் பாலிவுட் நடிகை கத்ரினா கைப். இந்த அமைப்பின் நிறுவனர் சபீனா அவரை நியமித்துள்ளார். "இந்த பொறுப்புக்கு தகுதியானவர் கத்ரினா. அவருக்கு சட்டமும் தெரியும், பெண் முன்னேற்றம் குறித்தும், பெண் கல்வி குறித்து உலக நாடுகளில் பேசி வருகிறார். அவர் தூதராக நியமிக்கப்பட்டதன் மூலம் இந்த பணியை முன்னிலும் வேகமாக முன்னெடுத்து செல்வோம்" என்கிறார் சபீனா.
இதுகுறித்து கத்ரினா கூறியதாவது: கிராமப்புற மற்றும் ஆதிவாசி பெண் குழந்தைகள் பள்ளிக்கு செல்வதிலும், உயர்கல்வி கற்பதிலும் இன்னும் தடைகள் உள்ளது. பள்ளியில் இடைநிற்கும் பெண்களை மீண்டும் பள்ளியில் சேர்ப்பதற்காக இந்த அமைப்பு 10 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறது. ஆண்களுக்கு சமமாக பெண்களும் தரமான கல்வியை பெறுவதற்காக உழைக்கவே இந்த பணியில் நான் என்னை இணைத்துக் கொண்டிருக்கிறேன் என்றார் கத்ரினா.
Comments
Post a Comment