மதுரை: பார்வைற்றோருக்காக திருக்குறளை &'பிரெய்லி&' புத்தகமாக தமிழ், ஆங்கிலத்தில் வெளியிட தாக்கலான வழக்கில் அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
மதுரை ராம்குமார் தாக்கல் செய்தமனு: நான் பார்வையற்ற மாற்றுத்திறனாளி. பி.ஏ.,-எல்.எல்.பி., முடித்துள்ளேன். திருக்குறள் பல்வேறு மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. பார்வையற்றோர் பிறர் துணையின்றி திருக்குறள் கற்க பிரெய்லி வடிவில் தமிழ், ஆங்கில புத்தகங்கள் இல்லை. இதனால் சிரமப்படுகின்றனர். பிரெய்லி வடிவ புத்தகம் வெளியிடுவதுஅரசின் கடமை.தமிழக அரசுக்குமனு அனுப்பினேன்.
திருக்குறளை தெளிவுரையுடன்தமிழ், ஆங்கிலத்தில் பிரெய்லி வடிவபுத்தகமாக வெளியிட உத்தரவிட வேண்டும்.இவ்வாறு ராம்குமார் மனுசெய்தார்.நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஆர்.ஹெமலதா அமர்வு தமிழ் ஆட்சிமொழி மற்றும் பண்பாட்டுத்துறை முதன்மைச் செயலாளர், பள்ளி கல்வித்துறை செயலாளர், தஞ்சாவூர் தமிழ் பல்கலை துணைவேந்தர், தமிழ்நாடு பார்வையிழப்பு தடுப்புச்சங்க திட்ட இயக்குனருக்கு நோட்டீஸ் அனுப்பி ஏப்.,13 க்கு ஒத்திவைத்தது.
Comments
Post a Comment