ஜகார்தா: கிழக்கு இந்தோனேஷியாவின் கடல்பகுதியில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. பான்டா கடலில், கடல் மட்டத்துக்கு கீழ் 171 கி.மீ., ஆழத்தில் ஏற்றபட்ட இந்நிலநடுக்கம், ரிக்டரில் 6.4 ஆக பதிவாகியுள்ளது. கடும் நிலநடுக்கத்தையடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தற்காலிக ஆசிரியர் பணி தொடர்பான வழக்கு ஜூலை 15-க்கு ஒத்திவைப்பு. தற்காலிக ஆசிரியர் பணி தொடர்பான வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில் வழக்கானது 15ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. விசாரணையின் போது ஆசிரியர் பணிக்கு விண்ணப்பித்த 1,50,648 பேரில் 28,984 பேர் மட்டுமே தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளதாக அரசு தெரிவித்தது. ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் விண்ணப்பங்களை முதலில் பரிசீலிக்க வேண்டும் என ஐகோர்ட் அரசை அறிவுறுத்தி வழக்கை ஜூலை 15 க்கு ஒத்திவைத்தது.
Comments
Post a Comment