ந்த பதிவை போட வேண்டும் என்று
அடிக்கடி நினைத்தது உண்டு.இத்தனை தத்துவங்கள், இத்தனை விளக்கங்கள், இத்தனை ஞானிகள், இத்தனை தியான முறைகள். கற்று கரையேறுவது எப்படி? இந்த புலம்பல்கள் அடிக்கடி என் கதவை தட்டும்.
நான் பொதுவாக சொல்வேன்....
இத்தனையும் உங்களை வேண்டாவெறுப்பாக யார் கற்று கொள்ளச் சொல்கிறார்கள்?
Buffet விருந்துக்கு போகிறோம்.என்ன தேவையோ, எது நமக்கு பிடிக்கிறதோ அதை உண்கிறோம்.
அதே போலத்தான் இதுவும்.
ஒரு விளக்கம் இறை நிலை குறித்து எளிமையாக.
உங்களுக்குக்கு பிடித்த ஒரு தியானம்.
எளிய உடற்பயிற்சி உடல் நலம் காக்க. அவ்வளவுதான்.
ஆனால் விருப்பத்தோடு செய்ய வேண்டும். ஐயோ செய்ய வேண்டுமே என்ற சலிப்பு கூடாது.
இது போல ஒரு Blue print உங்களுக்குகேற்றது போல நீங்களேபோட்டுக்கொள்ளுங்கள்.
முடிந்தது ராமாயணம்.
கேட்பதை எல்லாம் storage செய்யும் godown
ஆகி விடாதீர்கள் என்பேன்.
அடுத்த கேள்வி நீங்கள்என்ன தியானம் செய்கிறீர்கள்?
நான் எப்பொழுதும் துரியாதீத தவம். எனக்கு மிகவும் பிடிக்கும். வான் காந்தத்தில் (பிரபஞ்சத்தில்) அருட்தந்தையின் கை பிடித்து உலாவுவேன்.
அல்லது இறை நிலை தவம்.youtube ல்
மகரிஷியோடு இணைந்து கொள்வேன்.
பிரயாணங்களில் ஓஷோவின் மூச்சை கவனித்தல் தியானம் அல்லது Relaxation
பயிற்சி.
ஒரு தியானத்தில் ஒருமுகமாக நீங்கள் தேர்ச்சி பெற்று விட்டால்.... மன அலை நீளம் குறைவதால் மற்ற எந்த தியானமாக இருந்தாலும் எளிதில் வசப்படும்.
என்ன தியானம் செய்தாலும் விருப்பத்தோடு செய்ய வேண்டும். பிடித்த பாட்டு,
பிடித்த உணவு போல.
மனஅலை நீளம் குறைய குறைய, அமைதி மனதை மெல்ல தாலாட்டும்.
பல அற்புதங்களும் நிகழும். பிரபஞ்ச பேரறிவோடு,, ஒரு தொடர்பு கிடைத்துவிடும்.
ஒரு பதிவு போட வேண்டும் என்று நீங்கள் Mobile எடுக்கும் போது ஒரு வெற்றுத்தாள்.
எழுத ஆரம்பித்தவுடன், சொற்கள் காட்டாற்று வெள்ளம் போல அடுத்தடுத்து கருத்து மழையாய் பொழிய, எழுதி முடித்தவுடன் நானா எழுதினேன் என்றுநீங்கள்ஆச்சரியப்படலாம்.
சில செயல்கள், சில மனிதர்கள் சந்திக்க வேண்டும் என்று ஆழமாக சிந்தித்தால் அதற்கான குழ்நிலைகள் தாமாகவே உருவாகும்.
இதை மிகைப்படுத்தி சொல்லவில்லை. தியானத்தின் மூலமாக மன அலை நீளம் குறைந்து அமைதி மனதில் நிலவுமானால், பிரபஞ்சம் உங்களோடு கைகோர்த்து விடும்.
ஆனால் தான், தனது, இந்த ego எல்லாம் மறைய வேண்டும்.
நான் சொல்வது போல எளிமையாகBlue print போட்டு களத்தில் இறங்குங்கள். எல்லாமே விரைவில் கைகூடும்.
என் நண்பர் ஒருவருக்கு இதை சொன்னேன். அவர் இப்போது மிகவும் தெளிவாக இருக்கிறார். பதிவாக போடுங்கள் என்ற அவர் வற்புறுத்தலும் இந்த பதிவு வர ஒரு காரணம்.
எல்லாம் எளிமையே
நாம் எளிமையாக நோக்கினால்....
பிரபஞ்ச களத்தில் உலவ வாழ்த்துக்கள்....

Comments
Post a Comment