Skip to main content

மாற்றம் - அது நம்மிடம் இருந்து தொடங்கட்டும்!!

 போர்வெல்லில் விழுந்த குழந்தைக்கு பிரார்த்தனை செய்துகொண்டே, பிதுங்கி வழியும் பஸ் படிக்கட்டில் தொங்கிக்கொண்டு பயணம் செய்தான் 3 குழந்தைக்கு தகப்பன் ஒருவன்.


போர்வெல் குழந்தைக்கு பரிதாபப்பட்டுக்கொண்டே 16 பள்ளி பிள்ளைகளை தன் ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு சென்றான் ஒருவன்.

போர்வெல்லை மூடாதவனை திட்டிக்கொண்டே ஒன்வேயில் பைக்கை ஓட்டிச் சென்றான் ஒருவன்.

லஞ்சம் வாங்கிக்கொண்டு பஸ்ஸுக்கு சான்றிதழ் கொடுத்துவிட்டு ஓட்டை வழியே குழந்தை விழுந்தவுடன் தானே நடவடிக்கை எடுக்கிறான் ஒருவன்.

சந்திராயனுக்கும் போர்வெல்லுக்கும் முடிச்சுப் போட்டு அரசாங்கத்தை திட்டிக்கொண்டே 1500 ருபாய்க்கு டிக்கெட் எடுத்து கூத்தாடியின் சினிமாவை பார்க்க சென்றான் ஒருவன்.

சீனாவைப் பார், சிங்கப்பூரைப் பார் என்று புலம்பிக்கொண்டே ரோட்டோர டிரான்ஸ்பார்மரின் கீழ் அவசரத்துக்கு ஒதுங்கினான் ஒருவன்.

மனிதாபிமானம் என்பதே இப்போது இல்லை என்று பேசிக்கொண்டே, விபத்தில் அடிபட்டு உயிருக்கு போராடிக்கொண்டு இருப்பவனை வீடியோ எடுத்து அப்லோட் செய்கிறான் ஒருவன்.

மக்கள் 2000 ரூபாய் வாங்கிக்கொண்டு ஓட்டுப் போடும்வரை இப்படித்தான் இருக்கும் என்று திட்டிவிட்டு, 50000 ஆயிரம் லஞ்சம் கொடுத்து பணியிட மாறுதல் வாங்குகிறான் ஒருவன்.

பொருளாதாரம்   போனதால் மனம் உடைந்து தினமும் 500 ரூபாய் டாஸ்மாக் க்கு வரி கட்டுகிறான் ஒருவன்.

நீர் வாங்கவும், பீர் வாங்கவும் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டே, தொழிற்சாலைகளால்தான் காற்று மாசு படுகிறது என்கிறான் ஒருவன்.

சினிமாவில் அவுத்து போட்டு ஆடிவிட்டு பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்கிறாள் ஒருத்தி.

நிர்பயாவிற்கு பிறகு 40000 நிர்பயாவை பார்த்தாச்சி.

சுஜித்துக்கு பிறகு பல சுஜித்தையும் பார்த்தாச்சு 

அடுத்தவர் முதுகை பார்த்து சிரிக்கும் எவனும் தன் முதுகை சுத்தமாக வைப்பதில்லை.

முன்னெச்சரிக்கை என்று ஏட்டில்தான் படித்திருக்கிறேன். பின்னெச்சரிக்கை என்பதை மட்டும் தான் நாட்டில் பார்க்கிறேன்.

இதுவும் கடந்து போகும். இதைவிட பெரிய பொழுதுபோக்கு வந்தால்.

ஆம் அனைத்தையும் பொழுதுபோக்காகத்தான் விற்பனை செய்கிறான் ஒருவன்.

*தனிமனித ஒழுக்கம் போற்றப்படும் வரை நமக்கு பொழுதுபோக்குக்கு பஞ்சம் இருக்காது. நமக்கு உணவு இல்லை என்றாலும் பொழுதுபோக்குதானே முக்கியம்...*

*சிந்தனையே செய்யாமல்,*
*பொழுதை போக்குவோம் நன்றாக...*

Comments

  1. madam nice post. missed these valuable thoughts. hope you will continue posting.

    ReplyDelete
  2. அட்மின் திரும்ப வந்தாச்சா? உங்கள் சேவை தொடரட்டும்

    ReplyDelete
    Replies
    1. Hi unknown friend..

      Yes, am back.. I will continue it hereafter.. Keep in touch for valuable motivational thoughts..

      Delete
  3. Replies
    1. Revathi sis, very happy to c u again.. Keep in touch..

      Delete
  4. சகோதரி எவ்ளோ வருஷம் ஆச்சு. நீங்க சொன்னமாதிரி போட்டி தேர்வு தான் நடந்துச்சு. டெய்லி போஸ்ட் போடுங்க. மிக்க மகிழ்ச்சி

    ReplyDelete
    Replies
    1. Saravanan Brother.. Ya, many years have gone but am still there and am back.. Keep in touch brother..

      Delete

Post a Comment

Popular posts from this blog

TNTET PAPER2 ENGLISH QUESTIONS..

English Previously discussed question... Identify the pattern of the following sentence. The boy pushed the door open. A)SVOC B)SVOA C)SVO D)SVC Ans:SVOC      The boy-subject,pushed-verb,the door-object,open-complement ('open' is an action by the verb 'pushed') Today's Questions 7th 1st term book. 1.Match the following collective nouns. 1)A cloud of.   -  a)bells 2)A bench of.  -  b)bats 3)A carillion of. -   c)crocodiles 4)A float of.    -d)bishops. A)1-a,2-b,3-c,4-d B)1-d,2-c,3-b,4-a C)1-b,2-d,3-a,4-c D)1-b,2-a,3-d,4-c 2.Form abstract noun for the following words. Clever,Heavy A)cleverly,heavily B)cleverish,heaviness C)cleverer,heavyish D)cleverness,heaviness 3.Fill in the blanks with suitable verb. Saina and Mary _______(go) to bed at 9.00p.m. A)go B)goes C)went D)will go 4.A phrasal verb is a combination of_______ A)A verb & a preposition B)A verb & A ad...

WARM WELCOME..

Welcome to Puthagasalai.. This is to thank respected admin sir, for his wonderful support inspite of so many hindrances.. Hope we will do our best to make this new website a successful one.. I have taken this big responsibility thinking all my lovable friends will support me as how they were so far..

TODAY'S THOUGHT..

"தெருவிலே சுற்றிக் கொண்டிருந்த நாய் ஒன்று"......, தவறிப் போய் அரண்மனைக்குள் நுழைந்தது"....!! "அந்த அறைக்குள் நுழைந்த நாய்க்கு அதிர்ச்சி ".......!!   "அங்கே சுற்றியும் நூற்றுக் கணக்கான நாய்கள் இருந்தன"....!! "சற்று எரிச்சலடைந்து "உர்ர்.. உர்ர்.." என்றது"....!! "அந்த நூறு நாய்களும் பதிலுக்கு".... "உர்ர்.. உர்ர்.." என்றது. "அந்த நாய் கொஞ்சம் பயந்து விட்டது"...!! இருந்தும் கோபம் தாளாமல்.....,   "லொள் லொள்" என குரைக்க ஆரம்பித்தது. "எல்லா நாய்களும் சேர்ந்து குரைத்தது"......!! "அந்த நாய் குரைப்பதை நிறுத்தியவுடன்"...., "மற்ற எல்லா நாய்களும் குரைப்பதை நிறுத்திகொண்டது".....!! அந்த தெரு நாய்க்கு கோபமும் பயமும் அதிகமானது. உடனே...,   " வெறி பிடித்ததை போல் தொடர்ந்து குரைக்க ஆரம்பித்தது".....,   " பதிலுக்கு அந்த நாய்களும் குரைத்தன"....!! மற்ற நாய்களும் குமயங்கியது " இந்த நாய் பயத்தின் உச்சத்தில்...., " வெறி பிடி...