Skip to main content

அவமானமே மூலதனம் 💐

 மன்னரின் அரசவை...

ஒருவர் தான் ஆரம்பிக்க இருக்கும் கல்லூரிக்கு நிதி கேட்டு வருகிறார்.

அந்த மன்னர் இந்து என்றாலே கோபப் படுபவர்.

" நிதி தானே ..இந்தா என தன் காலில் இருந்த ஷூவை வந்தவர் மேல் வீசி எறிந்தார்.

எதிர்பாராத நிகழ்வால் நிலைகுலைந்தாலும்..ஒருபக்கம்
அவமானம்..மனதை கஷ்டப்படுத்தியது.

இருந்தாலும் ஒரு நல்ல விஷயத்துக்காகத் தானே அவமானப்படுகிறோம்..என
தேற்றிக்கொன்டு..மன்னருக்கு நன்றி சொல்லி கிளம்பினார்.
மன்னருக்கு ஒன்றும் புரியவில்லை .

என்னடா நாம் அவமானப்படுத்த ஷூவை வீசினோம்   நன்றி சொல்லி செல்கிறானே என ஒருவரை எப்படி அவமானப்படுத்த முயன்றாலும் எதிரிலிருப்பவர் தன் நோக்கத்தில் உறுதியாய் இருந்தால் என்ன செய்ய முடியும்
மேலும் தன்மேல் நம்பிககையில்லாதவர்கள் தான்அவமானமாய் உணர்ந்து எமோஷன் ஆவார்கள்.

வெளியில் ஒரே சத்தம் .. அமைச்சரை அழைத்த மன்னர் என்னஅங்கே..என்றார்
நீங்க எறிந்த ஷூவை ஏலம் போடுகிரான் மன்னா.. கல்லூரி கட்ட மன்னர் தந்த ஷூ..என்றே கூவுகிரான் என்றார்.

எவ்வளவு போகிறது...
படு கேவலமாய் பத்து நாணயத்துக்கு மேல் ஏலம் போகவில்லை என்றார்..
அய்யய்யோ..என்ன விலையானாலும் ஏலம் எடு...

அமைச்சரும் ஐம்பது லட்சம் கொடுத்து எடுத்தார்..
நிதி கேட்டு வந்தவர் மீன்டும் மன்னரிடம் வந்தார்.
மன்னா நீங்கள் போட்ட ஷூ பாதிகட்டடம் கட்ட கிடைத்து விட்டது

அடுத்த ஷூவை எப்போது போடுவீர்கள் என்றார் பாருங்கள்
மன்னர் வந்தவரின் சாமார்த்தியத்தையும்..சகிப்புத்தன்மையையும் எண்ணி...தாமே கல்லூரியை கட்டித்தந்தார்.
அது தான் தற்போதைய காசி பனரஸ் பல்கலைக்கழகம்.
அவமானத்தை யார் ஒருவர் அவமானமென உணர்கிறார்களோ
அவர்கள் ஒருநாளும் எதையும்
ஜெயிக்க முடியாது.

எப்போதும் நோக்கம் நிறைவேறுவது தான் முக்யம்.
மான அவமானங்களல்ல...

நாம் செய்வது நல்லதாய் இருக்க வேண்டும்.
ஒவ்வொரு அவமானமும் வெற்றிக்கான படிக்கட்டுக்கள்
என எண்ணுவோம்.

எந்தவொரு வளர்ச்சியையும் நீண்ட நாட்கள் யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.
.
அவமானம் என்பது ஒருவித மூலதனம்.
.
.
.
.
.
.
.
.
அந்த காலணி வீசப்பட்டது திரு. மதன் மோகன் மாளவியா அவர்கள் மீது. அவர் தான் பனாரஸ் பல்கலைக் கழகத்தை நிறுவியவர்.

Comments

Post a Comment

Popular posts from this blog

TNTET PAPER2 ENGLISH QUESTIONS..

English Previously discussed question... Identify the pattern of the following sentence. The boy pushed the door open. A)SVOC B)SVOA C)SVO D)SVC Ans:SVOC      The boy-subject,pushed-verb,the door-object,open-complement ('open' is an action by the verb 'pushed') Today's Questions 7th 1st term book. 1.Match the following collective nouns. 1)A cloud of.   -  a)bells 2)A bench of.  -  b)bats 3)A carillion of. -   c)crocodiles 4)A float of.    -d)bishops. A)1-a,2-b,3-c,4-d B)1-d,2-c,3-b,4-a C)1-b,2-d,3-a,4-c D)1-b,2-a,3-d,4-c 2.Form abstract noun for the following words. Clever,Heavy A)cleverly,heavily B)cleverish,heaviness C)cleverer,heavyish D)cleverness,heaviness 3.Fill in the blanks with suitable verb. Saina and Mary _______(go) to bed at 9.00p.m. A)go B)goes C)went D)will go 4.A phrasal verb is a combination of_______ A)A verb & a preposition B)A verb & A ad...

WARM WELCOME..

Welcome to Puthagasalai.. This is to thank respected admin sir, for his wonderful support inspite of so many hindrances.. Hope we will do our best to make this new website a successful one.. I have taken this big responsibility thinking all my lovable friends will support me as how they were so far..

TODAY'S THOUGHT..

"தெருவிலே சுற்றிக் கொண்டிருந்த நாய் ஒன்று"......, தவறிப் போய் அரண்மனைக்குள் நுழைந்தது"....!! "அந்த அறைக்குள் நுழைந்த நாய்க்கு அதிர்ச்சி ".......!!   "அங்கே சுற்றியும் நூற்றுக் கணக்கான நாய்கள் இருந்தன"....!! "சற்று எரிச்சலடைந்து "உர்ர்.. உர்ர்.." என்றது"....!! "அந்த நூறு நாய்களும் பதிலுக்கு".... "உர்ர்.. உர்ர்.." என்றது. "அந்த நாய் கொஞ்சம் பயந்து விட்டது"...!! இருந்தும் கோபம் தாளாமல்.....,   "லொள் லொள்" என குரைக்க ஆரம்பித்தது. "எல்லா நாய்களும் சேர்ந்து குரைத்தது"......!! "அந்த நாய் குரைப்பதை நிறுத்தியவுடன்"...., "மற்ற எல்லா நாய்களும் குரைப்பதை நிறுத்திகொண்டது".....!! அந்த தெரு நாய்க்கு கோபமும் பயமும் அதிகமானது. உடனே...,   " வெறி பிடித்ததை போல் தொடர்ந்து குரைக்க ஆரம்பித்தது".....,   " பதிலுக்கு அந்த நாய்களும் குரைத்தன"....!! மற்ற நாய்களும் குமயங்கியது " இந்த நாய் பயத்தின் உச்சத்தில்...., " வெறி பிடி...