Skip to main content

Posts

Showing posts from August, 2022

TET தேர்வுத் தேதி மாற்றம் - TRB அறிவிப்பு

TET தேர்வுத் தேதி மாற்றம் - TRB அறிவிப்பு   தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு 2022 ம் ஆண்டிற்கான ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிக்கை எண் .01 / 2022 , நாள் 07.03.2022 அன்று வெளியிடப்பட்டது . 06.07.2022 பத்திரிகை செய்தியின்படி ஆகஸ்டு மாதம் 25 முதல் 31 வரை உள்ள தேதிகளில் தாள்- I ற்கு மட்டும் முதற்கட்டமாக தேர்வுகள் கணினிவழியில் மட்டுமே நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது என்ற விவரம் தெரிவிக்கப்பட்டது. தற்பொழுது நிர்வாக காரணங்களினால் , தாள்- I ற்கான தேர்வு 10.09.2022 முதல் 15.09.2022 வரை நடத்தப்படவுள்ளது . மேற்படி கணினிவழித் தேர்விற்காக ( Computer Based Examination ) பயிற்சித் தேர்வு ( Practice Test ) மேற்கொள்ளவிரும்பும் தேர்வர்கள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் பயிற்சியினை மேற்கொள்வதற்கு , தேர்வுக்கு 15 நாட்களுக்கு முன்பிருந்து வாய்ப்பு வழங்கப்படும். அனைத்து பணிநாடுநர்களும் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பயிற்சி மேற்கொள்ளலாம் . இது குறித்த அறிவிக்கை , தேர்வுகால அட்டவணை மற்றும் அனுமதிச்சீட்டு ( Admit card ) வழங்கும் விவரம் செப்டம்பர் முதல் வாரத்தில் அறிவிக்கப்படும் .

ஞாயிறு போற்றுதும்..

கவிப்பேரரசு பாா்வையில் ஞாயிற்றுக் கிழமை. ஞாயிற்றுக்  கிழமையென்பது சக்தி. ஞாயிற்றுக் கிழமையென்பது மனசைத் தூசுதட்டி  வைக்கும் துப்புரவுநாள். பலருக்கு வாழ்க்கையே விடுமுறையாய் இருப்பதனால் ஞாயிற்றுக் கிழமையின் பெருமையே தெரிவதில்லை. சனிக்கிழமை சாயங்காலத்தில் உயிரோடிருக்கிற  ஞாயிற்றுக் கிழமை பிறக்கும்போது இறந்தே பிறக்கிறது. ஞாயிற்றுக் கிழமை என்பது ஒய்வுகளின் உன்னத மண்டபம். மிகை ஊதியம் கிடைத்தால் ஞாயிற்றுக் கிழமையை விற்பதற்கு நாம் தயாா். அதற்கு வாய்ப்பில்லாதவா்கள் மட்டுமே ஞாயிற்றுக் கிழமையைக் கட்டாயக் கல்யாணம் செய்து கொள்கிறாா்கள். ஞாயிற்றுக் கிழமை என்பது உறக்கமல்ல விழிப்பு. பூமி விழிக்குமுன்பே புலன்கள் விழித்து விடவேண்டும். பித்தளைப் பாத்திரங்களை மாதம் ஒரு முறை புளி போட்டுத் துலக்குவது மாதிரி, புலன்களை வாரம் ஒரு முறை புடம் போட்டுத் துலக்க வேண்டும். ஆனால் ஞாயிற்றுக் கிழமையென்றால் பதினொரு மணிக்குப் பல் துலக்குவது என்றுதான் இங்கு பலா் இல்லற அகராதிகளில் எழுதப் பட்டிருக்கிறது. ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் இந்தியாவுக்கு பாரத் பந்த் தாகவே இருக்கிறது. ஜன்னல்களையும் புலன்களையும் ச...

பள்ளிகளில் 12.08.2022 முதல் 19.08.2022 வரை விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்க பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு!!!

  பள்ளிகளில் 12.08.2022 முதல் 19.08.2022 வரை விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்க பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு!!! பள்ளிகளில் 12.08.2022 முதல் 19.08.2022 வரை விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்க பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு!!! செயல்முறைகள் கீழே உள்ள link ஐ கிளிக் செய்து download செய்து கொள்ளுங்கள் 👇👇👇👇👇👇👇👇👇👇👇👇 Click here to download pdf file 

வாழ்க்கையின் நீதி கதை!

தற்போதைய காலகட்டத்திற்கு  இந்த கதை இந்த சமூகத்திற்கு அவசியம் தேவை! 🐀🐀எலிப்பொரியும் எஜமானியும். (சிறு கதை)🐀🐀 ஒரு பண்ணயார் வீட்டில் ஒரு எலி வசித்து வந்தது... ஒரு நாள் அது தனது இரவு நேர இரை தேடப் புறப்பட்டுக் கொண்டிருந்தது. எலி வலையை விட்டு தலையை உயர்த்திப் பார்த்தது. வீட்டின் எஜமானனும், எஜமானியும்,  ஒரு பார்சலைப் பிரித்துக் கொண்டிருந்தார்கள். ஏதோ நாம் சாப்பிடக்கூடிய ஒரு பொருள் தான் உள்ளே இருக்கும் என்று ஆவலோடு பார்த்தது எலி. அவர்கள் வெளியே எடுத்தது ஒரு எலிப்பொறி. அதைப்பார்த்ததும் அந்த எலிக்கு மூச்சே நின்று விடும் போல இருந்தது... உடனே ஒரே ஓட்டமாக வீட்டில் இருந்த கோழியிடம் போய் சொன்னது... "பண்ணையார் ஒரு எலிப்பொறி வாங்கி வந்துள்ளார். எனக்கு பயமாக இருக்கிறது என்றது.." இதைக் கேட்ட கோழி விட்டேற்றியாகச் சொன்னது.." உன்னைப் பொறுத்தவரை இது கவலைப்பட வேண்டிய விஷயம்தான். நல்ல வேளையாய் இந்த எலிப்பொறியால் எனக்கு ஒரு பிரச்சினையும் இல்லை என்றது கோழி.." உடனே அது .. பக்கத்தில் இருந்த வான்கோழியிடம் சென்று.. அதே விஷயத்தைப் போய்ச் சொல்லியது. வான்கோழியும் அதேபதிலைச் சொல்லியதோடு, "ந...

ஆசிரியர் பணியிடங்களை தற்காலிகமாக நிரப்புதல் - வழிகாட்டு முறைகள் ( Guide lines ) - Commissioner Proceedings

ஆசிரியர் பணியிடங்களை தற்காலிகமாக நிரப்புதல் - வழிகாட்டு முறைகள் ( Guide lines ) - Commissioner Proceedings தொடக்கக் கல்வி இயக்கக நிர்வாகத்தின் கீழ் செயல்படும் அரசு / நகராட்சி / ஊராட்சி ஒன்றிய தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் 2022-23ம் கல்வியாண்டில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை தற்காலிகமாக நிரப்புதல் - சென்னை உயர்நீதிமன்ற இடைக்கால ஆணையின்  அடிப்படையில் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு முறைகள் ( Guide lines ) தெரிவித்தல் தொடர்பாக பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்  https://drive.google.com/file/d/1iC0RclGofwqfL138nXmfB-FGcZ1ck4KX/view?usp=sharing

இலக்குகள் அடைவதற்கு..

உங்கள் இலக்குகளின் மீது முழுதாக நம்பிக்கை வையுங்கள். உங்களைச் சுற்றி இருப்பவர்களிடம் இருந்து கிடைக்கும் உற்சாக வார்த்தைகளுக்கு மேல் உங்களுக்குள் இருக்கும் ஆழமான நம்பிக்கை தான் அடுத்தடுத்த தளங்களுக்கு நகர்த்திச் செல்லும் அதே நேரத்தில் இலக்கு குறித்தத் தெளிவும் வேண்டும்.  இலக்குகள் இல்லாத யாரும் சாதனையாளர்களாக மாறிய வரலாறு இல்லை என்பதை அழுத்திச் சொல்லலாம்.  இலக்குகளைத் தெளிவாக வரையறுத்துக் கொள்ளும் அதேநேரம், அதை அடைவதற்கான முயற்சிகளை சோர்வில்லாமல் முன்னெடுக்க வேண்டும்.. இரண்டு பேர் ஒரு பெரிய மலை முகட்டின் முன் நின்று கொண்டு இருக்கிறார்கள். இருவரில் முதலில் மலையின் உச்சியைத் தொடுபவருக்கு மிகப் பெரிய தொகை பரிசாகக் கொடுக்கப்படும் என்று அறிவிக்கப்படுகிறது.  இரண்டு பேருக்குமே மலையேற்றம் குறித்து அனுபவம் துளியும் கிடையாது. ஆனால் கண் முன்னே பணமுடிப்பு மின்ன, உற்சாகம் பொங்கி வழிகிறது. 'இருவரில் ஒருவர் வேகவேகமாக ஓடி மலையில் ஏறத் தொடங்குகிறார். இன்னொருவரோ அமைதியாக அவர் மலை ஏறுவதை கவனித்துக் கொண்டு இருக்கிறார்.  சுற்றியிருக்கும் கூட்டம் ஆர்ப்பரித்துக் கத்துகிறது. அதுவோ பாறைகள் ந...

PGTRB - கூடுதலாக சுமார் 1030 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிக்கை வெளியீடு! - Notification pdf

  PGTRB - கூடுதலாக சுமார் 1030 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிக்கை வெளியீடு! - Notification pdf   நடைபெற்று முடிந்த போட்டித் தேர்வின் மூலம் கூடுதலாக சுமார் 1030 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிக்கை வெளியீடு! It is hereby informed that 01/2021 , dated 09.09.2021 for the direct recruitment for Post Graduate Assistants / Physical Education Director Grade I / Computer Instructor Grade - I in School Education and other Departments for the year 2020-21 . , in para 1 Number of vacancies , the following amendments are issued . PG Additional TRB Notification - Download here...