போனவாரமே வந்து பாக்கணும்னு நினைச்சேன்... இந்த வாரம் உன்னை ஹாஸ்பிட்டல்ல இப்படி வந்து பாப்பேன்னு கொஞ்சம் கூட நினைக்கலே .
ஒவ்வொரு முறையும் நான் சொல்லிடணும்னு நினைக்கும் போதெல்லாம் ஏதோ ஒரு தயக்கம்.. கண்கெட்ட பின்னே சூரியனைக் கும்பிடறா மாதிரி அவங்களும் என்னை விரும்பியிருக்காங்கன்னு காலங்கடந்து இப்போ தெரிஞ்சு என்ன செய்ய? சொல்லி ஏத்துக்கற வயசிலேயும் சூழ்நிலையிலுமா இருக்கேன்?
வெளிநாட்டுல இருக்கற பசங்களுக்கு வேணும்னு , தனக்கு எதையுமே வாங்கிக்காம, நல்ல துணிமணி உடுத்தாம, பேங்க்பாஸ்புக்கை நிரப்பினாரு மனுஷன்..கடைசி காரியத்துக்கு கூட வரமுடியாம பசங்க ஆளுக்கொரு கண்டத்துல இருக்குதுங்க..
எப்பவோ வந்திருக்க வேண்டிய ப்ரமோஷன் உங்களுக்கு...சம் டர்ட்டி இன்டர்னல் பாலிடிக்ஸ்..அட்லீஸ்ட் ரிடையர்மென்ட்டுக்கு மூணு வருஷம் முன்னாடியாவது வந்துதேன்னு ...சந்தோஷப்பட்டுக்கோங்க
ஒரு தடவையாவது தாஜ்மஹலை நேர்ல பாக்கணும்னு சொல்லிகிட்டேயிருந்தா..
ஆபீஸ் , வேலை, லீவு இல்லே,பட்ஜட் செலவு அது இதுன்னு தள்ளிபோட்டுக்கிட்டேயிருந்தேன்..
தாஜ்மஹல் அங்கேயே தான் இருக்கு.அவதான் இல்ல.
இனி யாரோட போய் பாக்கறது ?
அபிச்சுவரி காலத்துல நம்ம சாரைப் பாத்ததும் சங்கடமா இருந்தது.என்னமா நமக்கு இன்ஜினியரிங் டிராயிங் சொல்லிக்கொடுத்தாரு மனுஷன்..?!
அலும்னி அஸோஸியேஷன்ல கூப்பிட்டு கௌரவப்படுத்தணும்னு சொல்லிக்கிட்டேயிருந்தோம் நாலு வருஷமா..கை வரவேயில்ல.இனிமே எப்பவுமே முடியாது..
ரெண்டு நாளாவே அவரு சரியா பேசல..டல்லா இருந்தாரு.
நேரத்துக்கு சாப்பிடல..வழக்கம்போல ஏதோ வேலை மும்முரம்னு கேக்காம விட்டுட்டேன்...அப்பவே என்ன ஏதுன்னு கேட்டுத்தெரிஞ்சுகிட்டு டாக்டர் கிட்ட போயிருந்தா இவ்ளோ சீரியஸ் ஆகியிருக்காது..
ஃபோனை வைக்கும் போதெல்லாம் "செல்போன்லேயே பேசி முடிச்சுடறியே..ஊருக்கு நேர்ல வந்து என்னை ஒருதடவை பாரேன் டா" ன்னு அப்பா சொல்லுவாரு..
வேலை ஜாஸ்தியா இருக்குப்பா.ஏதாவது விசேஷம்னா லீவு கிடைக்கும் வரேன்னு நானும் சொல்லுவேன்..
தோ..இப்ப லீவு போட்டு அவரைப்பாக்கத்தான் ஊருக்கு வந்திருக்கேன்..கண்ணே தொறக்காம படுத்துகிடக்கற .அப்பாவுக்குத்தான் அது தெரியாது
காலம் கடந்த
அங்கீகாரங்கள்,
அன்பு வார்த்தைகள்,
அறிவுரைகள்,
உபசாரங்கள்
உணர்தல்கள்
அக்கரைதோய்ந்த வெளிப்பாடுகள்,
காதல்,
ஞானப்படிப்பினைகள்
முடிவுகள்
இவற்றால் என்ன பயன்? செய்யாமல் விட்டதைக்காட்டிலும் இரண்டுமடங்கு வலிதரக்கூடியவை இவை..
எல்லாத்துக்கும் ஒரு நேரம் காலம் வேண்டாமா?
ஃபாஸ்ட் புட் மாதிரிஎல்லாத்தையும்
எடுத்தேன் கவுத்தேன்னு உடனேயே சொல்லி செஞ்சுட முடியுமா? என ஒரு தரப்பு போர்க்கொடித்தூக்கும் .
சினிமாத்தனமா சொல்லணுமா என்ன எல்லாத்தையும்? இது மற்றொரு தரப்பு
இதில் வெளிப்படுத்துபவர்களின் நேரம்காலம் அதை எதிர்பார்த்து காத்திருப்பவர்களின் நேரம் காலம் இரண்டும் முக்கால்வாசி நேரங்களில் முரண்பட்டுப்போகும்..
பசித்தவயிறுக்குத் தான் சோறு தேவை.
புளியேப்பம் எடுத்தவருக்கு விருந்தோம்பல் எதற்கு?
ஆவிபறக்கும் நுரைத்த காபியை ஊதிபடியே முதல் வாய் உறிஞ்சுவதைப்போல, கடுகளவு சிறிதாயினும் சில வெளிப்பாடுகள் உடனுக்குடன் பிரசவிக்கப்படும் சுகமே அலாதிதான்...
ஏங்கித்தேடுகையிலும், எதிர்பார்த்துக்காத்திருக்கையிலும் தாமதமின்றி வந்து சேரும் எதுவுமே வரம்தான்...
யார்மீதேனும் அக்கரையோ, அன்போ, கோபமோ, காதலோ, எதைப்பற்றிய எதிர்பார்ப்போ,பாராட்டோ, இருக்கும் பட்சத்தில் தாமதிக்காமல் உடனே அழகாய் வெளிப்படுத்துங்கள்..தாமதித்தலும் தள்ளிப்போடுதலும் இனி வெளிப்படுத்தும் வாய்ப்பிற்கே இடமில்லை எனும் நிலைக்குத்தள்ளக்கூடும்.
தேங்கிய நீர் சாக்கடையாதல் போலத்தான் தேக்கிய உணர்வுகளும்..
எந்த நிமிடம் யாருடைய கடைசி நிமிடமென யாருக்குத்தெரியும்?
Wishing everyone a blessed day ahead..
ReplyDeleteதமிழக அரசு பள்ளிகளில் lkg ukg வகுப்புகள் மூடல். Lkg ukg வகுப்புகள் பாடம் கற்பித்த 2000+ teachers தொடக்க பள்ளிக்கு மாற்றம். Sgt teachers. .
ReplyDeleteUnmaiya ivanga posting fill Panna ma Iruka enna enna karanam solla mudiyumo athai room pottu yosipanga pola
DeleteHasini mam strike enna achu mam.
ReplyDelete