Skip to main content

என்னால் முடியும்..


அவமானத்தை வலியாய் எடுத்துக் கொள்ளாதீர்....

வழியாய் எடுத்துக்கொள்ளுங்கள்......!!!!!


இங்கே கை தூக்கி விடுபவர்களை விட....

கையில் தள்ளி கீழே விழ வைப்பவர்களே அதிகம்....!!!!!!


எதிரில் நிற்பவரெல்லாம் எதிரியுமில்லை....

தோளில் கையிட்டவனெல்லாம் நண்பனுமில்லை....

இதை உணர்ந்து கொண்டவருக்கு கவலையுமில்லை....!!!!!


வாழ்க்கை ஒரு *ஓவியம்* அல்ல...

திரும்பத் திரும்ப வரைவதற்கு....

அது ஒரு *சிற்பம்*...

செதுக்கினால் செதுக்கியது தான்....!!!!


உங்களை வேண்டாம் என்று தூக்கி எறிந்தவர்களிடம் எச்சரிக்கையாய் இருங்கள்......

அவர்களுக்கு விளையாட ஏதேனும் தேவைப்படும் போது உங்கள் ஞாபகம் வரலாம்.....!!!!


துன்பங்களும் அனுபவமும் நம்மைச் சூழும் போது தான்....

வாழ்க்கை நமக்கு நல்ல பாடத்தையும., பாதையையும் தெளிவாகக் காட்டும்....!!!!


மகிழ்ச்சி என்பது நீங்கள் யாராக இருந்தாலும்...

நீங்கள் என்ன வைத்து இருக்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது அல்ல....

அது நீங்கள் நினைப்பதைப் பொறுத்தது....!!!!!


வார்த்தைகளுக்கும் உயிருண்டு....

வாழ்வது உயிர்கள் மட்டுமல்ல....

வார்த்தைகளும் தான்...!!!!


தன் வலிமை தெரியாமல்  உயரப்பறக்க நினைக்கும்

பறவைகள் எல்லாம் வானில் உயரப்பறந்து விடுவதில்லை....!!!!


கழுகும் பறவைதான்...

குருவியும் பறவைதான்...

அதனதன் வலிமை அதனதன் உயரம்....!!!!!


உங்களுக்கான நேரம் குறைவானது.....

எனவே வேறொருவரின் வாழ்க்கையை  வாழ்ந்து அதை வீண்டிக்க வேண்டாம்...!!!!


பிறரிடமிருந்து எதையும் பிரபஞ்சம் உங்களுக்கு பிடுங்கிக் கொடுப்பதில்லை....!!!!!


உங்களுக்கானது உங்களை வந்தடையும்....

எனவே பிறரின் வளர்சியைக் கண்டு மகிழுங்கள்.....

வாழ்த்துங்கள்.....

விரைவில் நீங்களும் அந்த நிலையை அடைவீர்கள்....!!!!!


எந்த விசயம் நீங்கள் செய்தாலும்....

என்றுமே நம்பிக்கையோடு கடைப்பிடிக்க வேண்டிய தாரக மந்திரம்.....

*என்னால் முடியும்* என்பது தான்...!!!!!


ஒரே நாளில் எதுவும் கிடைத்து விடாது....

ஆனால் ஒருநாள் எல்லாம் கிடைக்கும்....!!!!

Comments

  1. Wishing everyone a blessed day ahead..

    ReplyDelete
  2. இந்த மாதம் ஆசிரியர் நியமனம் செய்ய வாய்ப்புள்ளதாமே உண்மையா Mam

    ReplyDelete
    Replies
    1. No chance intha academic year mudivarthkul pottale Periya visayam bcos govt gajana Kali

      Delete
    2. Pg ku pottu dhana sir aganum..

      Delete
  3. Indha year kula pg, BT rendum chance iruku..

    ReplyDelete
  4. அனைத்து ஆசிரியர்களுக்கும் காலை வணக்கம். நேற்று 1500 rs received. 4500 மட்டும் தேவை as final. கடைசி வழக்குக்கே வழக்கறிஞர் 20000 மட்டுமே குறைத்தார். மேலும் 5000 rs குறைக்க try செய்து முடியாத காரணத்தால் வேறு வழி இன்றி நான் என்னுடைய பணம் 5000 rs கொடுத்து வழக்கை தொடர்ந்து விட்டொம். இன்றும் வழக்கறிஞர் கண்டிப்பாக குறைக்கமாட்டார் . எனவே இன்னும் ஒரு 2000 to 2500 கூட நீங்கள் இன்று மாலைக்குள் கொடுத்தால் போதும். மீதம் 2000 rs நான் போட்டு கொள்க்கிறேன். நன்றி. இது பணம் கேட்டு அனுப்பும் கடைசி SMS. அடுத்து வழக்கு நம்பர் மற்றும் வழக்கு சம்பந்தமான விசயங்களை அனுப்புகிறேன்.

    Note : DPI ல் protest செய்ய Ravi sir மற்றும் நைநார் முகமது மற்றும் பொன்மணி. மேடம் நமது Association 36 / 2017 லிருந்து முயன்று வருகின்றனர். வள்ளுவர்கோட்டத்தில் மாலை 6 க்கு பிறகு 100% போராட்டத்தை தொடரமுடியாது as per inspector information from commissioner office. ஆதலால் நமது வள்ளுவர்கோட்டம் போராட்டம் 9.06.2022 மாலை 6 pm க்கு முடிந்த மறு நாளில் இருந்து DPI ல் போரட்டத்தை தொடர்வதற்கு உண்டான அனுமதியை லதா இன்ஸ்பெக்டர் மேடம் வழங்கியுள்ளார். இன்று ரவி சார் சென்னை சென்று விட்டு உறுதியான தகவலை இன்று உங்களுக்கு பதிவிடுவார்.

    நன்றி..

    Google pay : 9994549014 or

    Icici : 015601524094
    Ifsc : ICIC0000156

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

*இதுவும் கடந்து போகும்..!!!*

நம்முடைய இதுநாள் வரை வாழ்க்கையையும் திரும்பிப் பார்த்தால் இந்த வாக்கியத்தின் மகத்தான உண்மையை உணர முடியும். எத்தனை வெற்றிகள், எத்தனை தோல்விகள், எத்தனை மகிழ்ச்சிகள், எத்தனை துக்கங்கள்..... எல்லாம் வந்து சிறிது காலம் தங்கி கடந்து போயிருக்கின்றன. வந்ததெல்லாம் நம்மை விட்டுப் போவதால் நம்முடையதல்ல என்பது உறுதியாகிறது.வந்து போவதெல்லாம் நம்முடையதல்ல என்பதால் நாம் வெறும் பார்வையாளர்களே அல்லவா? எத்தனை நண்பர்கள், எத்தனை பகைவர்கள், எத்தனை உறவுகள் நம் வாழ்வில் முக்கிய அங்கம் வகித்து வெறும் நினைவுகளை மட்டும் நம்மிடம் விட்டு விட்டுப் போயிருக்கிறார்கள்? வாழ்வில் வந்ததெல்லாம் நம்மைக் கடந்து சென்று கொண்டு தானே இருக்கின்றன. ஒரு விதத்தில் என்றும் நாம் தனியர்களே அல்லவா? இயற்கையின் விதியே இது என்று உளமார உணர்ந்து தெளியும் போது கிடைக்கும் *அமைதி சாதாரணமானதல்ல* அந்த அமைதியை மனதில் நிரந்தரமாக்கிக் கொள்ளுங்கள். *வெற்றிகள் கிடைக்கும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பதை நினைவில் கொள்ளுங்கள். *கர்வம் தலை தூக்காது.* *தோல்விகள் தழுவும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பத...

TODAY'S THOUGHT..

"தெருவிலே சுற்றிக் கொண்டிருந்த நாய் ஒன்று"......, தவறிப் போய் அரண்மனைக்குள் நுழைந்தது"....!! "அந்த அறைக்குள் நுழைந்த நாய்க்கு அதிர்ச்சி ".......!!   "அங்கே சுற்றியும் நூற்றுக் கணக்கான நாய்கள் இருந்தன"....!! "சற்று எரிச்சலடைந்து "உர்ர்.. உர்ர்.." என்றது"....!! "அந்த நூறு நாய்களும் பதிலுக்கு".... "உர்ர்.. உர்ர்.." என்றது. "அந்த நாய் கொஞ்சம் பயந்து விட்டது"...!! இருந்தும் கோபம் தாளாமல்.....,   "லொள் லொள்" என குரைக்க ஆரம்பித்தது. "எல்லா நாய்களும் சேர்ந்து குரைத்தது"......!! "அந்த நாய் குரைப்பதை நிறுத்தியவுடன்"...., "மற்ற எல்லா நாய்களும் குரைப்பதை நிறுத்திகொண்டது".....!! அந்த தெரு நாய்க்கு கோபமும் பயமும் அதிகமானது. உடனே...,   " வெறி பிடித்ததை போல் தொடர்ந்து குரைக்க ஆரம்பித்தது".....,   " பதிலுக்கு அந்த நாய்களும் குரைத்தன"....!! மற்ற நாய்களும் குமயங்கியது " இந்த நாய் பயத்தின் உச்சத்தில்...., " வெறி பிடி...

TNTET PAPER2 ENGLISH QUESTIONS..

English Previously discussed question... Identify the pattern of the following sentence. The boy pushed the door open. A)SVOC B)SVOA C)SVO D)SVC Ans:SVOC      The boy-subject,pushed-verb,the door-object,open-complement ('open' is an action by the verb 'pushed') Today's Questions 7th 1st term book. 1.Match the following collective nouns. 1)A cloud of.   -  a)bells 2)A bench of.  -  b)bats 3)A carillion of. -   c)crocodiles 4)A float of.    -d)bishops. A)1-a,2-b,3-c,4-d B)1-d,2-c,3-b,4-a C)1-b,2-d,3-a,4-c D)1-b,2-a,3-d,4-c 2.Form abstract noun for the following words. Clever,Heavy A)cleverly,heavily B)cleverish,heaviness C)cleverer,heavyish D)cleverness,heaviness 3.Fill in the blanks with suitable verb. Saina and Mary _______(go) to bed at 9.00p.m. A)go B)goes C)went D)will go 4.A phrasal verb is a combination of_______ A)A verb & a preposition B)A verb & A ad...