Skip to main content

சிரித்துவிடுங்கள்..

யாராவது உங்களை 

அவமரியாதை செய்தால் 

நீங்கள் பலவீனமாகஉணர்கிறீர்கள்!!.

தொந்தரவுக்கு உள்ளாகிறீர்கள்!!.


எப்படிப் பழி வாங்குவது என்று 

யோசிக்கத் தொடங்குகிறீர்கள்....

அந்த மனிதன் உங்களைக் 

கைப் பற்றிவிட்டான்....

மக்கள் சிறிய விசயங்களுக்காக முழு வாழ்க்கையையும் வீணடிக்கிறார்கள்....


மற்றவர், அது தாய் தகப்பன், நண்பர், உறவினர் யாராக இருந்தாலும், 

உங்களை அவமரியாதை செய்தால் அந்தக் காயம் வயதான பின்னரும் ஆறுவதில்லை...


அந்தக் காயம் இன்னும் திறந்து புதிது போல் இருக்கும்... யாராவது அதைத் தொட்டால் நீங்கள் வெடித்து விடுவீர்கள்....


இந்தக் காயத்தை வளர விடாதீர்கள்.... 

இது உங்களைக் காயப்படுத்தி விட அனுமதிக்காதீர்கள்....


24 மணி நேரம் மட்டும் முயற்சி செய்து பாருங்கள்... யாராவது உங்களை அவமரியாதை செய்தால் ஏற்றுக் கொள்ளுங்கள்....


பதிலுக்கு ஒன்றும் செய்யாதீர்கள்.... 

என்ன நிகழ்கின்றது என்று பாருங்கள்.... நீங்கள் இதுவரை உணர்ந்தேயிராத சக்தி உங்கள் மீது பொழிவதை உணர்வீர்கள்....


ஒரு முறை நீங்கள் அதை சுவைத்து விட்டால் உங்கள் வாழ்க்கை மாறுபடும்...


வருத்தங்கள், எதிர்ப்புகள், பழிகள் என்று உங்களை நீங்களே அழித்துக் கொண்டிருந்ததை நினைத்து சிரிப்பீர்கள்....


உங்களைத் தவிர வேறு யாராலும் 

உங்களை அழிக்க முடியாது!!!

உங்களைத் தவிர வேறு யாரும் 

உங்களைக் காப்பாற்ற முடியாது!!!Comments

 1. Mam good morning.naan trt kku padikka arambituvitten. Encourage and supporting words unga kitta irundu vendum mam. Thank u.

  ReplyDelete
 2. Thiru sir..

  Hardwork never fails, stay confident and stay focused..

  ReplyDelete
 3. Bt assistant social vacancy 👉👉https://youtu.be/TxSMW56a1f4

  ReplyDelete
 4. How many times she told sir..

  ReplyDelete
  Replies
  1. Madam many people saying different stories so asking admin mam

   Delete
 5. Mam Nan 2013,2017 paper 1pass& 2017 paper2 pass geography .Trt varuma ,job kidaikuma please reply mam

  ReplyDelete
  Replies
  1. Geography ku backlog vacancies ae 500+ iruku, so don't worry..

   Delete

Post a Comment

Popular posts from this blog

படித்ததில் பிடித்தது..

                 சில நாய்களுக்கும் ஒரு சிறுத்தைக்கும் இடையில் எந்த விலங்கு வேகமாக ஓடுகிறது என்று ஒரு போட்டி  ஏற்பாடு செய்யப்பட்டது! வானை நோக்கி துப்பாக்கி சுடப்பட்டு போட்டி ஆரம்பமானது. நாய்கள் ஓட ஆரம்பித்தன. ஆனால் சிறுத்தை தன் கூண்டை விட்டு வெளியே வரவே இல்லை. போட்டியை பார்க்க கூடியிருந்த அணைத்து மக்களுக்கும் தாள முடியாத ஆச்சரியம். - 'என்ன நடந்தது?' 'ஏன் சிறுத்தை ஓடவில்லை?' என்று போட்டி ஒருங்கிணைப்பாளரிடம் கேட்டார்கள். அதற்க்கு அவர் சொன்ன விடை - “சில சமயங்களில் நீங்கள் சிறந்தவர் என்பதை மற்றவர்களுக்கு நிரூபிப்பது ஒரு அவமானம்”. சிறுத்தை அதன் வேகத்தை வேட்டையாடுவதற்கு மட்டுமே பயன்படுத்தும்.  அதன் வேகத்தையும், வலிமையையும் சில நாய்களுக்கு நிரூபிக்க வேண்டியதில்லை. ஆகவே, நம் வாழ்வில் பல சூழ்நிலைகளில், நாம் சிறந்தவர்கள் என்பதை எல்லோருக்கும் நிரூபிக்க முயற்சி செய்ய வேண்டிய அவசியமில்லை. அப்படி செய்வது நம்மக்குத்தான் கால, பொருள், ஆற்றல் விரயம்.  தேவையில்லாதவர்களிடம், தகுதியற்றவர்களிடம்  நாம் யார் என்பதை நிரூபிக்காமல் இருப்பதே சிறந்த புத்திசாலித்தனம்..

TODAY'S THOUGHT..

 இரண்டு ரயில் தண்டவாளங்கள் அருகருகே இருக்கின்றன.. ஒன்றில் எப்பவுமே ரயில் வராது.... மற்றொன்றில் ரயில் அடிக்கடி வரும்... ரயில் வராத தண்டவாளத்தில் ஒரு குழந்தை விளையாடிக் கொண்டிருக்கிறது. ரயில் வரும் தண்டவாளத்தில் பத்து குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்கிறது. அத்தருணத்தில் ரயில் வருகிறது.... தூரத்தில் இதனை நீங்கள் பார்க்கிறீர்கள்..... உங்களுக்கு அருகே ட்ராக் மாற்றும் கருவி இருக்கிறது.... நீங்கள் யாரை காப்பாற்றுவீர்கள்....? இப்படி ஒரு கேள்வியை நேற்று ஒரு விழாவில் ஒருவர் கேட்டார்... ப்ராக்டிகலாக பதில் சொல்லனும்.. நாம் யாரும் சூப்பர் மேன் இல்லையென்றும் சொன்னார்..... உண்மையாக நாம் என்ன செய்வோம்...? ஒரு குழந்தை விளையாடு்ம் இடத்திற்கு தானே ட்ராக்கை மாற்றி விடுவோம்.. ஏனெனில் 10 குழந்தைகள் காப்பாற்றப்படுமே என்றார்.... உண்மை தான் என்றோம்... இன்றைய சமூகமும் இப்படித்தான் உள்ளது. ரயில் வரும் என்று தெரிந்து தவறு செய்யும் குழந்தைகள் காப்பற்றபடுகிறது ரயில் வராத இடத்தில் யாருக்கும் தொந்தரவு தராமல் தவறே செய்யாத குழந்தை தண்டனை பெறுகிறது இன்றைய சூழலில் நம் வாழ்கையும், நம் நாடும் இப்படி தான் இருக்கிறது என்று அ

வட்டம்..

 _*ஒரு வட்டம் போட்டு*_ _*அதற்குள்ளேயே*_ _*வாழ்வதில்*_ _*தவறில்லை.*_ _*ஆனால், அந்த வட்டம்தான் .*_ _*வாழ்க்கை என்று...*_ _*நீ நினைத்துக் கொள்வதும் தவறு...*_ _*அதற்குள்ளேயே வாழ்ந்து முடிப்பதும் தவறு...*_ _*இந்த உலகம் மிகப்பரந்து விரிந்தது...*_ _*உன்னை ஏன் சுருக்கிக் கொள்கிறாய்...?*_ _*எல்லையில்லாதவனை... உணரும் வரைதான்...*_ _*எல்லைக்குள் நாம் வாழும்*_ _*வாழ்வென்பது..."*_ _*அதுவரை...*_ _*சுவற்றில் எறியப்பட்ட பந்தாக,* _*வினைகள்*_ - _*எதிர்வினைகளாக திரும்பி*_ _*வந்து கொண்டே*_ _*இருக்கும்..."*_ _*நிம்மதி எப்போதும்...*_ _*உங்கள் உள்ளங்கைக்*_ _*கனியாகவே*_ _*இருக்கிறது...*_ _*தேவையற்ற விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து...*_ _*நீங்கள்தான் அதை எட்டாக்கனி ஆக்கி கொண்டு ஏங்கி துன்பப்படுகிறீர்கள்...*_ _*உன் குழப்பத்திற்கு காரணமே...*_ _*உன் மனதின் எல்லை... குறுகியதாக இருப்பதுதான்...*_ _*உன் மனதை விசாலமாக்கு...*_ _*நிம்மதி -- தியானம்...*_ _*ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்...*_ _*நீ நிம்மதியாக இருந்தால்...*_ _*தியானத்தில் இருப்பாய்...*_ _*நீ தியானத்தில் இருந்தால்...*_ _*நிம்மதியாக இருப்பாய்...*_