Skip to main content

பாதையை மாற்றுங்கள்..

மனதை எப்போது‌ம் உற்சாகமாக வைத்து‌க் கொ‌ண்டா‌ல் நா‌ம் எப்போதுமே இளமையாக இரு‌க்கலா‌ம். 


அது எப்படி ‌பிர‌ச்‌சினைக‌ள் வரு‌ம் போது மனதை உற்சாகமாக வை‌த்து‌க் கொ‌ள்ள முடியு‌ம் என்று ‌நீ‌ங்க‌ள் கே‌‌ட்கலா‌ம். 


எதையு‌ம் நே‌ர்மறையாக ‌சி‌ந்‌தி‌க்க ஆர‌ம்‌பி‌த்து‌ வி‌ட்டா‌ல் ந‌ம்மா‌ல் எந்த ‌சூ‌ழ்‌நிலை‌யிலு‌ம் உடை‌ந்து போகாம‌ல் ம‌கி‌ழ்‌ச்‌சியாக வாழ முடியு‌ம். 


எல்லாவ‌ற்‌றி‌ற்குமே இர‌ண்டு வா‌ய்‌ப்புக‌ள் தா‌ன் உள்ளன. வா‌ழ்‌க்கை‌யி‌ல் ஒன்று ‌நீ‌ங்க‌ள் ஆரோ‌க்‌கியமாக இரு‌ப்‌பீ‌ர்க‌ள் அல்லது நோ‌ய் வா‌ய்‌ப்படு‌வீ‌ர்க‌ள். 


முத‌லி‌ல் ‌நீ‌ங்க‌ள் நலமாக இரு‌க்‌கி‌றீ‌ர்க‌ள் என்றா‌ல் ‌நீ‌ங்க‌ள் ஏ‌‌ன் கவலை‌ப்பட வே‌ண்டு‌ம்?


இல்‌லை, உட‌ல் நல‌க் குறைவு ஏற்படு‌கிறது என்று வை‌த்து‌க் கொ‌ள்ளு‌ங்க‌ள்.


அத‌ற்கு‌ம் இர‌ண்டு வா‌ய்‌ப்புக‌ள் தா‌ன். ஒன்று ‌நீ‌ங்க‌ள் குணமடை‌வீ‌ர்க‌ள். இல்‌லையெ‌ன்றா‌ல் இற‌ந்து‌ விடு‌வீ‌ர்க‌ள்.‌ 


நீ‌ங்க‌ள் குணமடை‌வீ‌ர்க‌ள் என்றா‌ல் ஏன் அதை‌ப் ப‌ற்‌றி கவலை‌ப்பட வே‌ண்டு‌ம். 


எதிலு‌ம் ஒன்று ந‌ல்லது அல்லது கெ‌ட்டது நட‌க்கு‌ம். ந‌ல்லது நட‌ந்தா‌ல் கவலை‌ப்பட ஒன்‌று‌மி‌ல்லை, 

கெ‌ட்டது நட‌ந்தா‌ல் அதிலு‌ம் இர‌ண்டு ‌விஷய‌ங்க‌ள்.

 

இப்படி இரு‌க்க, உங்க‌ள் வா‌ழ்‌க்கை‌ப் ப‌ற்‌றிய கவலையைத் தூ‌க்‌கி எறிந்து ‌வி‌ட்டு, வா‌ழ்‌க்கை என்‌பது பூ‌ங்காவன‌ம் அல்ல போரா‌ட்ட‌க்கள‌ம் என்பதை உணரு‌ங்க‌ள். 


போரா‌ட்ட‌க்கள‌த்‌தி‌ல் இழ‌ப்புகளு‌ம், வெ‌ற்‌றிகளு‌ம் சாதாரண‌ம். எதற்கு‌ம் கல‌ங்காம‌ல் வாழப் பழ‌கி‌க் கொ‌ள்ளு‌ங்க‌ள். 


எப்போது‌ம் நட‌ப்பவை எல்லா‌ம் ந‌ன்மை‌க்கே என்று அத‌ன் போ‌க்‌கி‌ல் உங்‌களது வா‌ழ்‌க்கையை ‌சிற‌ப்பாக வாழ‌ப்பழ‌கி‌க் கொ‌ள்ளு‌ங்க‌ள்.‌


நீ‌ங்க‌ள் ‌எந்தப் ‌பிர‌ச்‌சினையையு‌ம் ச‌ந்‌தி‌க்காம‌ல் வா‌ழ்‌க்கை‌யி‌ல் செ‌ன்று கொ‌ண்டிரு‌க்‌கி‌றீ‌ர்க‌ள் என்றா‌ல் ‌நீ‌ங்க‌ள் தவறான‌ பாதை‌யி‌ல் பய‌ணி‌க்‌கி‌றீ‌ர்க‌ள் என்று பு‌ரி‌ந்து கொ‌ள்ளு‌ங்க‌ள். 


முத‌லி‌ல் உங்க‌ள் பாதையை மா‌ற்று‌ங்க‌ள். ‌‌சில சமய‌ங்க‌ளி‌ல் இது பெ‌ரிய அள‌வி‌ல் மு‌ன்னே‌ற்ற‌த்தை அளி‌‌க்கு‌ம்.பு‌திதாக செ‌ய்யு‌ம் போது தா‌ன் உற்சாக‌ம் அதிகரி‌க்கு‌ம். 


அரை‌த்த மாவையே அரை‌த்து ‌நீ‌ங்க‌ள் எதையு‌ம் சா‌தி‌க்க முடியாது என்பதை உணரு‌ங்க‌ள்..


உற்சாக‌மும். மகிழ்ச்சியும் உங்களு‌க்கு‌ள் தா‌ன் இரு‌க்‌கிறது. அதை வெ‌ளி‌யி‌ல் தேடா‌தீ‌ர்க‌ள்.


ம‌ற்றவ‌ர்களு‌க்கு மு‌ன்னுதாரணமாக வா‌ழ்‌ந்து கா‌ட்டு‌ங்க‌ள்..

Comments

 1. Wishing everyone a blessed Sunday ahead..

  ReplyDelete
 2. 3000 பணியிடமா??

  ReplyDelete
 3. அய்யோ யாராவது சொல்லுங்களேன்

  ReplyDelete
 4. சண்முகம் சார் இந்த போஸ்டிங் டிஆர்டி வச்சு போடுவாங்களா

  ReplyDelete
 5. ரிப்ளை பண்ணுங்க சார்

  ReplyDelete
 6. Mam idhu posting fill Panna koodiya vacant ah

  ReplyDelete
  Replies
  1. Ila sir ubari asiriyarnu oru word use panirkanga..

   Delete
 7. Mam ennuma ubari asiriyar erukanga. Evlo years mam. Ethuvea solluvanga

  ReplyDelete
  Replies
  1. Ila mam indha time nichayama posting poduvaanga, kandippa trt varum..

   Delete
 8. Mam kandippa trt eppo varum nambi padikkalama ellarum trt varathu bt vaccancy illanu solli kulappuranga please reply me mam

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

படித்ததில் பிடித்தது..

                 சில நாய்களுக்கும் ஒரு சிறுத்தைக்கும் இடையில் எந்த விலங்கு வேகமாக ஓடுகிறது என்று ஒரு போட்டி  ஏற்பாடு செய்யப்பட்டது! வானை நோக்கி துப்பாக்கி சுடப்பட்டு போட்டி ஆரம்பமானது. நாய்கள் ஓட ஆரம்பித்தன. ஆனால் சிறுத்தை தன் கூண்டை விட்டு வெளியே வரவே இல்லை. போட்டியை பார்க்க கூடியிருந்த அணைத்து மக்களுக்கும் தாள முடியாத ஆச்சரியம். - 'என்ன நடந்தது?' 'ஏன் சிறுத்தை ஓடவில்லை?' என்று போட்டி ஒருங்கிணைப்பாளரிடம் கேட்டார்கள். அதற்க்கு அவர் சொன்ன விடை - “சில சமயங்களில் நீங்கள் சிறந்தவர் என்பதை மற்றவர்களுக்கு நிரூபிப்பது ஒரு அவமானம்”. சிறுத்தை அதன் வேகத்தை வேட்டையாடுவதற்கு மட்டுமே பயன்படுத்தும்.  அதன் வேகத்தையும், வலிமையையும் சில நாய்களுக்கு நிரூபிக்க வேண்டியதில்லை. ஆகவே, நம் வாழ்வில் பல சூழ்நிலைகளில், நாம் சிறந்தவர்கள் என்பதை எல்லோருக்கும் நிரூபிக்க முயற்சி செய்ய வேண்டிய அவசியமில்லை. அப்படி செய்வது நம்மக்குத்தான் கால, பொருள், ஆற்றல் விரயம்.  தேவையில்லாதவர்களிடம், தகுதியற்றவர்களிடம்  நாம் யார் என்பதை நிரூபிக்காமல் இருப்பதே சிறந்த புத்திசாலித்தனம்..

TODAY'S THOUGHT..

 இரண்டு ரயில் தண்டவாளங்கள் அருகருகே இருக்கின்றன.. ஒன்றில் எப்பவுமே ரயில் வராது.... மற்றொன்றில் ரயில் அடிக்கடி வரும்... ரயில் வராத தண்டவாளத்தில் ஒரு குழந்தை விளையாடிக் கொண்டிருக்கிறது. ரயில் வரும் தண்டவாளத்தில் பத்து குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்கிறது. அத்தருணத்தில் ரயில் வருகிறது.... தூரத்தில் இதனை நீங்கள் பார்க்கிறீர்கள்..... உங்களுக்கு அருகே ட்ராக் மாற்றும் கருவி இருக்கிறது.... நீங்கள் யாரை காப்பாற்றுவீர்கள்....? இப்படி ஒரு கேள்வியை நேற்று ஒரு விழாவில் ஒருவர் கேட்டார்... ப்ராக்டிகலாக பதில் சொல்லனும்.. நாம் யாரும் சூப்பர் மேன் இல்லையென்றும் சொன்னார்..... உண்மையாக நாம் என்ன செய்வோம்...? ஒரு குழந்தை விளையாடு்ம் இடத்திற்கு தானே ட்ராக்கை மாற்றி விடுவோம்.. ஏனெனில் 10 குழந்தைகள் காப்பாற்றப்படுமே என்றார்.... உண்மை தான் என்றோம்... இன்றைய சமூகமும் இப்படித்தான் உள்ளது. ரயில் வரும் என்று தெரிந்து தவறு செய்யும் குழந்தைகள் காப்பற்றபடுகிறது ரயில் வராத இடத்தில் யாருக்கும் தொந்தரவு தராமல் தவறே செய்யாத குழந்தை தண்டனை பெறுகிறது இன்றைய சூழலில் நம் வாழ்கையும், நம் நாடும் இப்படி தான் இருக்கிறது என்று அ

வட்டம்..

 _*ஒரு வட்டம் போட்டு*_ _*அதற்குள்ளேயே*_ _*வாழ்வதில்*_ _*தவறில்லை.*_ _*ஆனால், அந்த வட்டம்தான் .*_ _*வாழ்க்கை என்று...*_ _*நீ நினைத்துக் கொள்வதும் தவறு...*_ _*அதற்குள்ளேயே வாழ்ந்து முடிப்பதும் தவறு...*_ _*இந்த உலகம் மிகப்பரந்து விரிந்தது...*_ _*உன்னை ஏன் சுருக்கிக் கொள்கிறாய்...?*_ _*எல்லையில்லாதவனை... உணரும் வரைதான்...*_ _*எல்லைக்குள் நாம் வாழும்*_ _*வாழ்வென்பது..."*_ _*அதுவரை...*_ _*சுவற்றில் எறியப்பட்ட பந்தாக,* _*வினைகள்*_ - _*எதிர்வினைகளாக திரும்பி*_ _*வந்து கொண்டே*_ _*இருக்கும்..."*_ _*நிம்மதி எப்போதும்...*_ _*உங்கள் உள்ளங்கைக்*_ _*கனியாகவே*_ _*இருக்கிறது...*_ _*தேவையற்ற விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து...*_ _*நீங்கள்தான் அதை எட்டாக்கனி ஆக்கி கொண்டு ஏங்கி துன்பப்படுகிறீர்கள்...*_ _*உன் குழப்பத்திற்கு காரணமே...*_ _*உன் மனதின் எல்லை... குறுகியதாக இருப்பதுதான்...*_ _*உன் மனதை விசாலமாக்கு...*_ _*நிம்மதி -- தியானம்...*_ _*ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்...*_ _*நீ நிம்மதியாக இருந்தால்...*_ _*தியானத்தில் இருப்பாய்...*_ _*நீ தியானத்தில் இருந்தால்...*_ _*நிம்மதியாக இருப்பாய்...*_