Skip to main content

நூறு ஒட்டகங்கள்..

பிரச்சனைகளே இருக்கக் கூடாது என மனிதனாய்ப் பிறந்த யாரும்… ஏன்? உயிர்கள் ஏதும் நினைத்து விட முடியாது… 


உயிர்களாகப் பிறந்த அனைத்து ஜீவராசிகளுக்கும் ஏதேதோ வழிகளில் பிரச்சனைகள் இருக்கத் தான் செய்யும்.. 


அதை யாரும் இல்லாமல் செய்ய இயலாது. ஆனால், மனிதனாய்ப் பிறந்த நாம் அதை எப்படிக் கையாள்கிறோம் என்பதைப் பொறுத்தே அதன் தீவிரம் அமைகிறது..


வாழ்வில் பிரச்சனைகள் என்பது நூறு ஒட்டகங்கள் போன்றது... அனைத்தும் ஒரே நேரத்தில் படுப்பதற்கான வாய்ப்புக் குறைவே..


ஒவ்வொன்றும் படுப்பதற்கான காலம் உள்ளது...சில பிரச்சனைகள் தானாக முடிந்து விடும். சிலவற்றை நாம் மெனக்கெட்டு முடித்து விடலாம்.. 


ஆனால் சில பிரச்சனைகள் முடிந்தால் வேறு சில பிரச்சனைகள் புதிதாக எழலாம்...


அனைத்துப் பிரச்சனையும் முடிந்தால் தான் நிம்மதியாகத் தூங்குவேன் என்றால் இந்த உலகத்தில் யாராலும் தூங்க முடியாது..


பிரச்சனைகள் அனைத்தும் எப்போது முடியும் எனக் கவலைப்பட்டுக் கொண்டே இருக்காதீர்கள்....


எனக்கு ஒரு தீர்வு சொல்லுங்கள்" என்றவாறே ஒரு அறிஞர் முன்பாக நின்றிருந்தான் அவன்.அப்போது  மாலை நேரம்..


அய்யா."நான் ஓடிக் கொண்டே இருக்கிறேன்..பல பிரச்சனைகள். வீட்டில், தெருவில், ஊரில், வேலை செய்யும் இடத்தில் என எங்குமே பிரச்சனைகள்..


என்னால் நிம்மதியாகத் தூங்க முடியவில்லை.. இதில் இருந்து விடுபட ஏதாவது ஒரு நல்ல தீர்வு சொல்லுங்கள் என்றான் அந்த அறிஞரிடம்..


அவர் அவனிடம் "தோட்டத்திற்குச் சென்று ஒட்டகங்கள் என்ன செய்து கொண்டு இருக்கின்றன எனப் பார்த்து விட்டு வா" என்றார்.


சென்றவன் திரும்பி வந்து , "100 ஒட்டகங்களும் நின்று கொண்டு இருக்கின்றன" என்றான்.


"நல்லது. அந்த 100 ஒட்டகங்களும் தரையில் படுத்தவுடன் அங்கே இருக்கிற ஓய்வறையில் நீ படுத்துத் தூங்கி விட்டு காலையில் திரும்பி வா.. " என்றார்..


"சரி அய்யா" என்றவாறு தோட்டத்திற்குப் போனவன் கண்களில் தூக்கம் இன்றி களைப்புடன் காலையில் திரும்பி வந்து "அய்யா.. இரவு முழுவதும் தூங்கவே இல்லை .. என்றான்.. 

"என்ன ஆச்சு?" என்றார் அந்த அறிஞர்..


"சில ஒட்டகங்கள் தானாகவே தரையில் படுத்து விட்டன..சில ஒட்டகங்களை நான் மெனக்கெட்டுப் படுக்க வைத்தேன். அனைத்து ஒட்டகத்தையும் 

ஒரு சேர என்னால் படுக்க வைக்க முடியவில்லை.


சிலது படுத்தால் சிலது எழுந்து கொள்கின்றன..

அனைத்து ஒட்டகத்தையும் ஒட்டுமொத்தமாக படுக்க வைக்க முடியவில்லை. அதனால் நான் தூங்குவதற்குப் போகவே இல்லை" என்றான்.


அந்த அறிஞர் சிரித்தபடியே, 


"இதுதான் வாழ்க்கை.. வாழ்க்கையில் பிரச்சனையை முடிப்பது என்பது ஒட்டகத்தை படுக்க வைப்பது போன்றது என்றார்..


நமக்கான பிரச்சனைகள் தீர்வதற்கான காலமும் உள்ளது..


*ஆகவே , சிலவற்றை காலத்தின் கரங்களில் ஒப்படைத்து விட்டு,* 

*வாழ்வை அமைதியாக அனுபவிப்போம்.*

Comments

  1. Wishing everyone a blessed day ahead..

    ReplyDelete
  2. Good morning mam.M.SC BED.COMPUTER SCIENCE. TNTET PAPER 1 &PAPER 2 WRITE PANNALAMA

    ReplyDelete
    Replies
    1. Good Morning Unknown frnd..

      There is nothing mentioned about specialization of ug courses, so you can apply..

      Delete
  3. Friends enaku neriya message anupiranga .....file cm office la iruku....cm office la Enna nadakuthunu enaku theriyathu....cm office la irunthu DPI office Ku letters vantha than enaku teriya vaippu..... minimum cm office la oru file complete Panna 10 to15 days agum....entha time budject start aguthu...so trt file late agum....may be budject la direct ah announce Panna vaippu iruku....

    ReplyDelete
  4. பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கு சான்றிதழ்களை பதிவேற்றம் செய்வதற்கான கால அவகாசம் மார்ச் 18ஆம் தேதியிலிருந்து மார்ச் 25ஆம் தேதி வரை நீட்டிப்பு - ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு

    ReplyDelete
  5. https://youtu.be/sX_Jkm82wFk

    ReplyDelete
  6. ”பட்ஜெட் கூட்டத்தொடருக்கு பின் ஆசிரியர்கள் நியமனம் குறித்து முதலமைச்சருடன் ஆலோசனை” - அமைச்சர் அன்பில் மகேஸ்

    ReplyDelete
  7. இல்லை என்றால் உடனே முடிவு எடுத்து விடுவார்களா ?இப்படியே போனால் போகட்டும் போடா என்று கூறி விடைபெற்று விடுவோம் போல

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

TODAY'S THOUGHT..

"தெருவிலே சுற்றிக் கொண்டிருந்த நாய் ஒன்று"......, தவறிப் போய் அரண்மனைக்குள் நுழைந்தது"....!! "அந்த அறைக்குள் நுழைந்த நாய்க்கு அதிர்ச்சி ".......!!   "அங்கே சுற்றியும் நூற்றுக் கணக்கான நாய்கள் இருந்தன"....!! "சற்று எரிச்சலடைந்து "உர்ர்.. உர்ர்.." என்றது"....!! "அந்த நூறு நாய்களும் பதிலுக்கு".... "உர்ர்.. உர்ர்.." என்றது. "அந்த நாய் கொஞ்சம் பயந்து விட்டது"...!! இருந்தும் கோபம் தாளாமல்.....,   "லொள் லொள்" என குரைக்க ஆரம்பித்தது. "எல்லா நாய்களும் சேர்ந்து குரைத்தது"......!! "அந்த நாய் குரைப்பதை நிறுத்தியவுடன்"...., "மற்ற எல்லா நாய்களும் குரைப்பதை நிறுத்திகொண்டது".....!! அந்த தெரு நாய்க்கு கோபமும் பயமும் அதிகமானது. உடனே...,   " வெறி பிடித்ததை போல் தொடர்ந்து குரைக்க ஆரம்பித்தது".....,   " பதிலுக்கு அந்த நாய்களும் குரைத்தன"....!! மற்ற நாய்களும் குமயங்கியது " இந்த நாய் பயத்தின் உச்சத்தில்...., " வெறி பிடி...

TNTET PAPER2 ENGLISH QUESTIONS..

English Previously discussed question... Identify the pattern of the following sentence. The boy pushed the door open. A)SVOC B)SVOA C)SVO D)SVC Ans:SVOC      The boy-subject,pushed-verb,the door-object,open-complement ('open' is an action by the verb 'pushed') Today's Questions 7th 1st term book. 1.Match the following collective nouns. 1)A cloud of.   -  a)bells 2)A bench of.  -  b)bats 3)A carillion of. -   c)crocodiles 4)A float of.    -d)bishops. A)1-a,2-b,3-c,4-d B)1-d,2-c,3-b,4-a C)1-b,2-d,3-a,4-c D)1-b,2-a,3-d,4-c 2.Form abstract noun for the following words. Clever,Heavy A)cleverly,heavily B)cleverish,heaviness C)cleverer,heavyish D)cleverness,heaviness 3.Fill in the blanks with suitable verb. Saina and Mary _______(go) to bed at 9.00p.m. A)go B)goes C)went D)will go 4.A phrasal verb is a combination of_______ A)A verb & a preposition B)A verb & A ad...

WARM WELCOME..

Welcome to Puthagasalai.. This is to thank respected admin sir, for his wonderful support inspite of so many hindrances.. Hope we will do our best to make this new website a successful one.. I have taken this big responsibility thinking all my lovable friends will support me as how they were so far..