Skip to main content

புறக்கணிப்பு..

 எல்லா தகுதியும் இருந்தாலும் ஒரு சின்ன காரணத்துக்காக உங்கள வேணாம்னு சொல்லிடுவாங்க......


#சீனாமூங்கில்

ஒருவகையான சீன மூங்கில் மண்ணுக்குள்ளேயே வளருமாம் அது வெளியே வர ஒரு வருஷம் ரெண்டு வருஷம் அல்ல அஞ்சு வருஷம் ஆகும் ஆனா வெளிய வந்துட்டா 90 நாளில் 

90 அடி வளர்ந்துடுமாம் ...


அத்தனை நாட்களும் அது வெளியே வர தாமதம் ஆக காரணம் அவ்வளவு உயரம் வளர போகும் மரத்திற்கு பின்னாடி அது தாக்குப் பிடிக்கக் கூடிய அளவிற்கு அதன் வேர்கள் இருக்க வேண்டும் அதாவது தன்னுடைய பிளாட்பாரத்தை அது உறுதியா அமைத்துக் கொள்கிறது...


இதை நீங்க ஒரு பாடமாக எடுத்துக் கொண்டு உங்களுக்கான பிளாட்பாரத்தை நீங்க உறுதியா அமைச்சுக்கோங்க...


பின்னாடி உங்கள் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது எவ்வளவு பிரச்சனை வந்தாலும் தாக்கு பிடிக்கக்கூடிய சக்தி உங்களுக்கு வந்து விடும்


அப்படி உங்களுக்கான வாய்ப்பு கிடைக்கும் போது நீங்க அடிக்கிற அடி மரண அடியாக இருக்கணும். ஒரு மாஸ் என்ட்ரியா . இருக்கணும்.... உங்களைப் புறக்கணித்த அத்தனை பேருமே ஒரு நல்ல ஆளை நாம விட்டுட்டோமேனு வருத்தப்படனும் அந்த மாதிரி நீங்க வந்து காட்டணும்...


அதுவரைக்கும் உங்களுடைய தன்னம்பிக்கையும் கடின உழைப்பும் நம்பிக்கையும் ஒருபோதும் இழந்து மனம் தளரக்கூடாது..,


இன்னைக்கு மிகப் பெரிய ஆளாக இருக்கிற அத்தனை பேருமே ஒரு காலத்தில் புறக்கணிக்கப்பட்டவர்கள் தான்........


இளையராஜா வேணாம்னு சொன்னதால தான் ஏ ஆர் ரகுமான் என்ற மிகப் பெரிய இசையமைப்பாளர் உருவானார் ஆஸ்கார் அவார்டு வாங்கி இந்தியாவுக்கு பெருமை சேர்த்தார் ....😌😌😌😌😌😌


Comments

  1. Wishing everyone a blessed morning ahead..

    ReplyDelete
  2. 28, 29-ல் ஆதிதிராவிடர் நலத்துறை கல்விப் பணியாளர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு

    ReplyDelete
  3. ஆதிதிராவிடர் நலத்துறை ஆசிரியர் காலிபணியிடம்
    Sc/SCA மட்டுமே நிரப்புவர்களா?
    Or
    அனைத்து Bc, mbc, bcm, SC, SCA தேர்வர்கள் கொண்டு நிரப்புவார்களா
    ano mam?

    அதே போல் கள்ளர் பள்ளிகள்
    DNC/MBC கொண்டு நிரப்புவார்களா OR அனைத்து பிரிவினர் கொண்டு நிரப்புவார்களா

    ano ma

    ReplyDelete
    Replies
    1. Ellaraiyum vachu dhan fill pannuvanga, sc/st matum dhanu onnum kidayathu..

      Delete

Post a Comment

Popular posts from this blog

*இதுவும் கடந்து போகும்..!!!*

நம்முடைய இதுநாள் வரை வாழ்க்கையையும் திரும்பிப் பார்த்தால் இந்த வாக்கியத்தின் மகத்தான உண்மையை உணர முடியும். எத்தனை வெற்றிகள், எத்தனை தோல்விகள், எத்தனை மகிழ்ச்சிகள், எத்தனை துக்கங்கள்..... எல்லாம் வந்து சிறிது காலம் தங்கி கடந்து போயிருக்கின்றன. வந்ததெல்லாம் நம்மை விட்டுப் போவதால் நம்முடையதல்ல என்பது உறுதியாகிறது.வந்து போவதெல்லாம் நம்முடையதல்ல என்பதால் நாம் வெறும் பார்வையாளர்களே அல்லவா? எத்தனை நண்பர்கள், எத்தனை பகைவர்கள், எத்தனை உறவுகள் நம் வாழ்வில் முக்கிய அங்கம் வகித்து வெறும் நினைவுகளை மட்டும் நம்மிடம் விட்டு விட்டுப் போயிருக்கிறார்கள்? வாழ்வில் வந்ததெல்லாம் நம்மைக் கடந்து சென்று கொண்டு தானே இருக்கின்றன. ஒரு விதத்தில் என்றும் நாம் தனியர்களே அல்லவா? இயற்கையின் விதியே இது என்று உளமார உணர்ந்து தெளியும் போது கிடைக்கும் *அமைதி சாதாரணமானதல்ல* அந்த அமைதியை மனதில் நிரந்தரமாக்கிக் கொள்ளுங்கள். *வெற்றிகள் கிடைக்கும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பதை நினைவில் கொள்ளுங்கள். *கர்வம் தலை தூக்காது.* *தோல்விகள் தழுவும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பத...

TODAY'S THOUGHT..

"தெருவிலே சுற்றிக் கொண்டிருந்த நாய் ஒன்று"......, தவறிப் போய் அரண்மனைக்குள் நுழைந்தது"....!! "அந்த அறைக்குள் நுழைந்த நாய்க்கு அதிர்ச்சி ".......!!   "அங்கே சுற்றியும் நூற்றுக் கணக்கான நாய்கள் இருந்தன"....!! "சற்று எரிச்சலடைந்து "உர்ர்.. உர்ர்.." என்றது"....!! "அந்த நூறு நாய்களும் பதிலுக்கு".... "உர்ர்.. உர்ர்.." என்றது. "அந்த நாய் கொஞ்சம் பயந்து விட்டது"...!! இருந்தும் கோபம் தாளாமல்.....,   "லொள் லொள்" என குரைக்க ஆரம்பித்தது. "எல்லா நாய்களும் சேர்ந்து குரைத்தது"......!! "அந்த நாய் குரைப்பதை நிறுத்தியவுடன்"...., "மற்ற எல்லா நாய்களும் குரைப்பதை நிறுத்திகொண்டது".....!! அந்த தெரு நாய்க்கு கோபமும் பயமும் அதிகமானது. உடனே...,   " வெறி பிடித்ததை போல் தொடர்ந்து குரைக்க ஆரம்பித்தது".....,   " பதிலுக்கு அந்த நாய்களும் குரைத்தன"....!! மற்ற நாய்களும் குமயங்கியது " இந்த நாய் பயத்தின் உச்சத்தில்...., " வெறி பிடி...

நீங்கள் வாழ்க்கையில் வெற்றி பெற்று விட்டீர்களா என்பதை கண்டுபிடிக்க ஒரு சுலபமான வழிமுறை..

ஒரு பேனாவையும் பேப்பரையும் எடுத்துக்கொள்ளுங்கள். கேட்கிற ஐந்து கேள்விக்கு உடனே பதில் கிடைத்தால் அதுல பதிலை எழுதுங்க. ரொம்ப நேரம் எடுத்துக்கக்கூடாது. ரொம்ப மண்டையை போட்டு பிச்சுக்கக்கூடாது. உங்களால முடியலேன்னா அடுத்த கேள்விக்கு உடனே போயிடுங்க. அதுவும் முடியலியா…. படிச்சிகிட்டே போங்க…. ரெடியா..... 1. உலகத்திலேயே மிகப் பெரிய பணக்காரர்கள் ஒரு ஐந்து பேரை சொல்லுங்க பார்க்கலாம்.. 2. 2004 மற்றும் 2009 பாராளுமன்ற தேர்தல்ல பிரபல தலைவர்களை தோற்கடித்தவர்களில் ஒரு நாலு பேர் பெயரை சொல்லுங்க பார்க்கலாம்… 3. சர்வதேச அளவில் நடக்குற அழகிப் போட்டிகளில் ஜெயிச்ச இந்திய பெண்கள் ஒரு நாலு பேர் பெயரை சொல்லுங்க…. 4. நோபல் பரிசு வாங்கிய உங்களுக்கு தெரிந்த ஒரு பத்து பேர் பெயரை சொல்லுங்க….. 5. கடைசியா ஆஸ்கார் அவார்ட் வாங்கிய ஐந்து நடிகர் மற்றும் நடிகைகள் பெயரை சொல்லுங்க பார்க்கலாம்… உங்கள் பதில் உங்களுக்கே திருப்தியா இருந்ததா? இல்லே தானே? நாம் யாருக்குமே கடந்த காலத்தின் தலைப்பு செய்திகளோ அல்லது தலைப்பு செய்திகளில் இடம்பிடித்தவர்களோ நினைவில் இருப்பதில்லை. இத்தனைக்கும் இவங்கள...