ஆதி திராவிடர் நலத் துறை பள்ளி ஆசிரியர்களுக்கு 28.12.2021 மற்றும் 29.12.2021 ஆகிய நாட்களில் இடமாறுதல் கலந்தாய்வு நடைபெறுகிறது - அரசு அறிவிப்பு!!!
செய்தி வெளியீடு எண் :1373
நாள் : 20.12.2021 செய்தி வெளியீடு
2021-2022 ஆம் கல்வி ஆண்டிற்கான பொது மாறுதல் கலந்தாய்வு ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் ஆதிதிராவிடர் | நல மேல்நிலைப்பள்ளி / உயர்நிலைப்பள்ளி / நடுநிலைப்பள்ளி / ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்கள், கணினி பயிற்றுநர், உடற்கல்வி இயக்குநர்/ உடற்கல்வி ஆசிரியர் ஆகிய பதவிகளுக்கு 28.12.2021 அன்றும், பட்டதாரி ஆசிரியர் / தமிழாசிரியர் / இடைநிலை ஆசிரியர், ஆகிய பதவிகளுக்கு மாவட்டத்திற்குள்ளும் மற்றும் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் 29.12.2021 அன்றும் காலை 10.00 மணி அளவில் அந்தந்த மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் பொது மாறுதல் கலந்தாய்வு on-line மூலம் பணியிட மாறுதல் கோரி பதிவு
செய்து விண்ணப்பித்தவர்கள் மட்டும் on-line கலந்தாய்வில் கலந்து கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.
வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை -9
- Get link
- X
- Other Apps
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment