Skip to main content

ஈர்ப்புவிதி_நன்றியுணர்வு..

"நமது எண்ணங்களின் விளைவு தான் நாம் வாழும் இன்றைய நிலை."


நம்முடைய எண்ணங்கள் எப்படி உள்ளதோ அதன்படிதான் நம் வாழ்க்கையும் அமைத்துள்ளது என்பதை நம்முடைய முந்தைய கால அனுபவங்களைக் கவனிப்பதன் மூலமாகப் புரிந்துகொள்ளலாம்.  


இதுவரை நமது எண்ணங்கள் எப்படி இருந்துள்ளது என்பதை சிந்தித்துப் பாருங்கள்.


நம்முடைய எண்ணங்கள் பெரும்பாலும் இவர்கள் ஏன் இப்படி உள்ளார்கள்? இது ஏன் இப்படி நடக்கிறது? நமக்கு மட்டும் ஏன் இந்த நிலை? நான் நல்லதைத் தானே நினைக்கிறேன் பிறகு எனக்கு ஏன் இப்படி நடக்கிறது? என்பது போன்ற எண்ணங்கள் தான் அதிகமாக ஓடியது/ஓடுகிறது.


இதன் விளைவு தான் நாம் இன்று சந்திக்கும் பயம், கோபம், கவலை போன்ற மன அழுத்தங்கள் மற்றும் பல சிக்கல்களுக்கான காரணங்கள். 


இதைப் புரிந்துகொண்டு இதை அப்படியே மாற்றி சிந்திப்பது தான் இதற்கான சரியான தீர்வாக இருக்கும். 


முள்ளை முள்ளால் தானே எடுக்க முடியும்...?


எல்லாம் நன்மைக்கே!

எல்லோரும் நல்லவர்களே!

நமக்கு நடக்கும் அனைத்தும் நமது நன்மைக்காகத் தான் நடக்கிறது. என்பது போன்ற எண்ணங்களை நமக்குள் நாம் உருவாக்க வேண்டும். 


இதுபோன்ற எண்ணங்களை நமக்குள் எப்படி நம்மால் உருவாக்க முடியும் தெரியுமா? 


அதற்குத்தான் "நன்றியுணர்வு" உதவி செய்கிறது. 


நம்மை சுற்றி இருப்பவர்கள் மீது, நமக்கு உதவியாக இருப்பவர்கள் மீது எனத் தொடங்கி, நபர்கள், பொருட்கள் என நம்மை சுற்றி இருக்கும் அனைத்தின் மீதும் நாம் நன்றியுணர்வுடன் இருக்க வேண்டும்.


நீங்கள் எதன் மீதெல்லாம் நன்றிக்கடன் பட்டுள்ளீர்கள் என்பதைப் பட்டியலிடுங்கள். அது நம்மைச் சுற்றியுள்ள அனைத்திற்கும் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றே இருக்கும். 


அப்படி இருந்தால் மட்டுமே நீங்கள் சரியானதொரு நன்றியுணர்வுப் பட்டியலை தயார் செய்துள்ளீர்கள் என்று பொருள். 


ஏனென்றால், நல்லது கெட்டது என நம் வாழ்க்கையில் இதுவரை நடந்தேறிய அனைத்துமே நமக்கு ஏதேனும் ஒரு வகையில் உதவியாகவே இருந்திருக்கும்.


நன்மைகள் நமக்கு மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கும் மற்றும் தீமைகள் நமக்கு அனுபவப் பாடமாக அமைந்திருக்கும் என ஏதேனும் ஒரு வகையில் அனைத்துமே நமக்கு இதுவரை உதவியாகவே இருந்துள்ளது என்பதை உணரலாம். 


எனவே, அனைத்தின் மீதும் நன்றியுணர்வுடன் வாழக் கற்றுக்கொள்ளலாம். அது நம் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக மாற்ற உதவும்.


பேரன்புடன்...❤️

Comments

  1. Wishing everyone a blessed morning ahead..

    ReplyDelete
  2. காலை வணக்கம் அட்மின் சகோதரி .......

    ReplyDelete
  3. Puthusa innum oru corono varuthunu solranga, meendum lock down potta Enna panrathunu theriyala, but athukula tetla pass pannavangaluku consolidated pay la job poduvangala mam athuvum pannalana vala vera valli theriyala mam

    ReplyDelete
    Replies
    1. Sasi sir..

      Ama, new variant vandhuruku, name omricon. Romba severe ah irukunu solranga.. But tet ku consolidated pay la poda solli request pannalam..

      Delete
    2. Epdi mam request pandrathu

      Delete
    3. CM cell ku request panalam, cm ku registered post kuda anupalam, education minister kum anupalam..

      Delete
  4. Ippo iruka situvationla govt ku nammaloda nillami theriyathu but innoru lock down potta sagaratha thavira vera valli illa mam, mudiyala remba kastama iruku

    ReplyDelete
    Replies
    1. Sir..

      Yen apdi solringa.. Private schools achum try panlame neenga, naanum initial ah matriculation school la dhan work panen, apuram dhan aided kedachuthu..

      Satta udhavi mayam nu onnu iruku anga namma queries ah eludhi potu, advocate vachu proceed pana mudiyathunu sonna avangalae case file panuvanga, adhu kuda try panalam..

      Delete
  5. என்ன சசி அவர்களே சாவு எல்லாத்துக்கும் தீர்வு ஆகாது

    ReplyDelete
  6. Sasi sir.... Neenga mathavangaluku possitive thought sollalanalum paraviila...negative ...thing pani negative pesathiga..intha website parkura ouvrutharum oru mana vali yoduthan irukirom.repeat ed itha solumpothu padikira vangaluku intha ennam varamathiri iruku ...mudiyala

    ReplyDelete
  7. Saagaradhuku yosikra ellarum vazhradhuku enna poraadininganu yosinga..

    ReplyDelete
  8. Consolidated pay la job pootta kuuda relief from painful life mam.

    ReplyDelete
  9. Please take any stop mam and give ideas mam

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

❤️❤️❤️❤️

₹ நாளை என்பதே நமக்கு உறுதியில்லை... நாளும் அது புரிவதில்லை. ₹ இரண்டு வயது ஆவதற்குள் நாம் பேச கற்றுக்கொள்கிறோம்... ஆனால் எத்தனை வயது ஆனாலும், “எப்படி பேச வேண்டும்” என்பதை நாம் கற்றுக்கொள்வதில்லை...! ₹ நாம் சந்திக்கும் ஒவ்வொரு நபர்களும் வெவ்வேறு விதமான போராட்டக் களத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் ... ₹ நம்மில் பெரும்பாலானோர், சுய ஆர்வம் கொண்டு நீந்த கற்றுக் கொண்டதை விட இன்னொருவர் தள்ளி விட்டதன் மூலம் நீந்த கற்றுக் கொண்டவர்களே அதிகம் .... ₹ வாழும் நாட்களில் சந்தோஷத்தையும், மனஅமைதியையும் தேடுங்கள் ... மனிதனுடைய வாழ்நாள் தேவைகள், ஒரு போதும் தீர்ந்துவிடப்போவதில்லை ₹ அன்பை வெளிப்படுத்த தயக்கம் இருப்பது போலவே ... இந்த கோபத்தை வெளிப்படுத்தவும் இருந்து விட்டால் எத்தனை நன்றாக இருந்துவிடும்? ₹ சில பிள்ளைகளுக்கு 25 ஆண்டுகள் தகப்பனின் வருமானத்தில் தான் வாழ்ந்தோம் என்பது மறந்து போகிறது ... 15 ஆண்டுகள் நம் வருமானத்தில் வாழ்கிறார்கள் என்பது மட்டும் நன்றாக நினைவிலிருக்கிறது. ₹ கெட்ட உள்நோக்கத்துடன் கூறப்படும் உண்மை, ஆயிரம் பொய்களைவிட மோசமானது! ₹ வேலை இல்லாதவனின் பகலும், நோயாளியின் இரவும் மிக நீளமானவை

PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

  PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசு / நகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும் 01.08 . அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பணியாளர் நிர்ணயம் ( Staff Fixation ) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் பார்வையில் காணும் அரசாணைகளை பின்பற்றி இக்கல்வியாண்டிற்கு ( 2022-23 ) 01.08.2022 அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின்படி பட்டதாரி / முதுகலை ஆசிரியர்கள் பணியிடம் ( BT & PG_Staff Fixation ) நிர்ணயம் செய்தல் சார்பான பணிகள் மேற்கொள்ளப்படவிருக்கிறது. இப்பணியினை மேற்கொள்ள ஏதுவாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக பணியாளர்களுக்கு ஒரு சில அறிவுரைகள் மற்றும் எவ்வாறு கணக்கீடு செய்து நிர்ணயம் செய்தல் போன்ற விவரங்களை உரிய அதுவலர்களால் கீழ்க்கண்ட நிலவரப்படி வழங்கப்படவிருக்கிறது.

COMPETITIVE EXAM FOR TET PASSED CANDIDATES - 2024

UGTRB - Teachers Recruitment Notification -pdf தமிழ்நாடு அரசு பள்ளிகளில் மற்றும் வட்டாரவளமையங்களில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் BRTE பணியிடங்களுக்கான UGTRB தேர்வு அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. 👉தமிழ்வழி இட ஒதுக்கீடு 20%  👉பணியில் இருக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 10% ஒதுக்கீடு  (NOC compulsory)  👉மாற்றுத்திறனாளிகள்  👉மூன்றாம் பாலினத்தவர் 👉69% Reservation  என அனைத்து ஒதுக்கீடு நடைமுறைகளும் முறையாக பின்பற்றப்படும்.  👉 காலிப்பணியிடங்கள் -2222 👉கல்வித்தகுதி -       BED + TNTET PAPER -2 Pass   👉விண்ணப்பம் - Online 01.11.2023 முதல் 30.11.2023 வரை  👉தேர்வு - Offline - OMR BASED  👉weightage Mark - உண்டு TET தேர்ச்சி பெற்ற ஆண்டின் அடிப்படையில் மதிப்பெண்.  ( விவரம் Notification)   As per G.O- 147 👉 கட்டாயத்தமிழ் தகுதித்தேர்வு - உண்டு  👉பாடவாரியாக தேர்வு உண்டு  👉150 கேள்வி - 150 மதிப்பெண்  👉 OC - 60 Mark தேர்ச்சி  👉BC/MBC/ DNC/ SC/ST - 40 MARK தேர்ச்சி  👉சான்றிதழ் சரிபார்ப்பு - உண்டு Notification in pdf-  Click Here