Skip to main content

இந்த நிலை மாறும்..."

ஒரு நாட்டின் ராஜாவுக்கு ஒருநாள் சிந்தனை ஒன்று தோன்றியது , அதாவது, "தனது வாழ்வில் துன்பத்தினால் இறுதியை அடைந்த ஒருவனுக்கு , அவனை காப்பாற்றக் கூடிய ஒரு மந்திரம் எதுவாக இருக்கும்?" என்பதே அந்த சிந்தனை.

மன்னனும் எவ்வளவோ முயன்றும் அப்படி ஒரு மந்திரம் என்னவென்று தெரியவில்லை , உடனே நாட்டு மக்களுக்கு பறையறிவிக்க சொன்னான்.
“வாழ்வின் துன்பத்தில் சிக்கி இறுதி நாளில் இருக்கும் ஒருவனை காப்பற்றக் கூடிய மந்திரத்தினை" சொல்பவருக்கு தனது நாட்டில் ஒருபகுதியை தருவதாக அறிவித்தான்.

இந்நிலையில் ஒருநாள் மன்னனைக் காண ஒருவன் வந்தான். அவன் மன்னனிடம் ஒரு மோதிரம் தந்து, “மன்னா! நீங்கள் எந்த குறையுமின்றி நீடுழி வாழ வேண்டும், ஒருக்கால் நீங்கள் சொன்னதுபோல ஒரு நிலை உங்களுக்கே வருமானால் அன்றைய தினம் இந்த மோதிரத்தை திறந்து பாருங்கள்... அதுவரை இதனை பார்க்கவேண்டாம்” என்று சொல்லி மோதிரத்தை மிகவும் பவ்யமாக மன்னனிடம் தந்து விட்டு சென்றான்.

மன்னனுக்கு அந்த மனிதனின் சொல்லும் செயலும் ஒருவிதமான நம்பிக்கையும், எதிர்பார்ப்பையும் , மன அமைதியையும் தந்தது. இந்த சம்பவத்திற்கு பின் மன்னன் இதனை மறந்தே போனான்.
சில வருடங்களுக்குப்பின்...

திடீர் என இந்த மன்னனுக்கும் வேறு நாட்டு மன்னனுக்கும் போர் மூண்டது.
தயார் நிலையில் இல்லாததால் இந்த மன்னன் தோற்றுப் போனான்.
நாடு , மனைவி , மக்களை இழந்த மன்னன் மிகவும் மனம் தளர்ந்து வாழ்வினை முடித்துக்கொள்ள எண்ணினான். 
தட்டுத்தடுமாறி மலையின் உச்சியை அடைந்த மன்னன், இறைவா, என்னை ஏற்றுக்கொள் என்று வானத்தை நோக்கி இரு கைகளையும் உயர்த்தி விண்ணைப் பார்த்து உரக்க கூவினான்.

அப்போது அவன் கையில் இருந்த மோதிரம் சூரிய ஒளியில் மின்னியதை கண்டான்.
உடனே, அவன் மனதில் அந்த மனிதன் சொல்லிய வார்த்தைகள் ஒலித்தன.
மோதிரத்தில் என்னதான் உள்ளது பார்ப்போம்... என்று தற்காலிகமாக கீழே விழுந்து மரணிக்கும் எண்ணத்தை கைவிட்டு விட்டு அமர்ந்து அந்த மோதிரத்தை திருப்பி உள்ளே என்ன இருக்கின்றது என பார்த்தான்.
மோதிரத்தின் உள்ளே சிறிய காகிதம் ஒன்று சுருட்டி வைக்கப்பட்டிருந்தது, அதனை மிகவும் ஜாக்கிரத்கையாக எடுத்து பார்த்தான்...
ஒரே ஒரு வாசகம் ஒரே ஒரு வரியில் எழுதப்பட்டிருந்தது .
அந்த வாசகம் இதுதான்...

*"இந்த நிலை மாறும்..."*

அவ்வளவுதான், வேறொன்றும் இல்லை. முன்னும் பின்னும் திருப்பிப் பார்த்த மன்னன் ஏதும் காணாததால் அந்த வாசகத்தினை பற்றி யோசித்தான்.

அரண்மனையில் இருந்த அவனது பழைய படைவீரர்களின் ரகசிய ஒத்துழைப்போடு, எதிர்பாராமல் திடீரென்று அரண்மனையின் ரகசிய வாசல் வழியாக உள்நுழைந்து எதிரி நாட்டு மன்னனை அதிரடியாக கைது செய்து சிறையிலடைத்து மீண்டும் மன்னனான்.
மீண்டும் மன்னன் ஆட்சியிலமர்ந்ததும் மக்கள் மிகவும் ஆனந்தமானார்கள்.

அரியணையில் மன்னன்... அருகில் மகாராணி, மன்னனின் குழந்தைகள், மந்திரி, பிரதானிகள்... ஆடல் பாடல் என்று எங்கும் சந்தோஷ வெள்ளம் அலை பாய்ந்து கொண்டிருந்தது...

மோதிரம் கொடுத்த மனிதன் வந்தான், மன்னனை தாழ்ந்து பணிந்தான். மன்னன் அரியணையில் இருந்து இறங்கி வந்து வரவேற்றான்.

தான் அறிவித்திருந்தபடி பாதி நாட்டினை நீங்கள் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றான் மன்னன்.

"மன்னா, நாட்டினை ஆளும் தகுதி கொண்டவர் தாங்கள்தான், எனக்கு ஏதும் வேண்டாம்" என்று பணிவோடு சொன்னான் அந்த மனிதன்.

மன்னன் எவ்வளவோ மன்றாடியும் எதனையும் ஏற்க மறுத்தான் அந்த மனிதன்.
இறுதியாக மன்னன் சொன்னான், அன்பரே , நீங்கள் ஏதேனும் என்னிடம் இருந்து பெற விரும்பினால் தயங்காமல் கேளுங்கள்.
அந்த மனிதன், "மன்னா! இப்போது நீங்கள் வாழ்வின் மிக அதிக சந்தோஷத்தின் உச்சாணியில் இருக்கிறீர்கள் என்பது உண்மைதானே “

மன்னன், “ஆமாம் அது உண்மைதான் அன்பரே...”

அப்படியானால் அந்த மோதிரத்தினை இப்போது எடுத்துப் பாருங்கள் என்றான் அந்த மனிதன்.

உடனே, மன்னன் தனது விரலில் இருந்த மோதிரத்தினை எடுத்து உள்ளிருக்கும் அந்த சிறிய காகிதத்தை பிரித்துப் பார்த்தான்.
அதில் அதே மந்திர வாசகம் இருந்தது.
"இந்த நிலை மாறும்..."

அந்த மனிதன், "இதுதான் மன்னா வாழ்க்கை... இந்த நிலையும்  மாறும்.." என்று அவையோரை பணிந்து மன்னனிடமிருந்து விடை பெற்றான் அந்த மனிதன்...

*"இந்த நிலை மாறும்..."*
நமது எண்ணம்,
உணர்வுகள்,
சிந்தனை,
சொல் மற்றும் செயல் அனைத்தும் சரியாக இருப்பின் சரியான நிலைக்கும்...
தவறாக இருப்பின் தவறான நிலைக்கும் மாறும்...

ஆக, மாற்றம் ஒன்றே மாறாதது...
நல்ல மாற்றம் உயர்வையும்,
தவறான மாற்றம் தாழ்வையும் தரும்...
இந்த வாழ்வியல் உண்மையை உணர்ந்து நாம்...
*நல்ல மாற்றத்தை அடைவோம்...*

Comments

  1. Wishing everyone a blessed morning ahead..

    ReplyDelete
  2. அருமையான வரிகள்.., mam

    ReplyDelete
  3. Pg exam date eppo soluvangamam

    ReplyDelete
  4. அல்லிமலர் இங்க பப்பு வேகலைனு கருமம் புடிச்ச கல்விசெய்தில போய் அல்லி விடுற போல 😆😆😆😆😆😆

    ReplyDelete
    Replies
    1. ௮ல்லிமலர் கில்லி மாதிரி ௮வங்க சொல்லரதுதான் ௭ல்லாம் நடக்குதே ௮ப்புரம் ௭ன்ன வந்தது

      Delete
    2. கில்லி இல்ல அல்லி ஒரு பல்லி

      Delete
    3. என்ன நடந்துச்சு அல்லி செகண்ட் லிஸ்ட் வரும்னு சொன்னாங்க ஆனால் வந்தது ரிவைஸ்டு லிஸ்ட் தான? இப்படி முட்டாளுங்க இருக்க வர எல்லா லிஸ்டும் வரும் வாயில மட்டும்

      Delete
    4. Last trb how much marks you scored ? Atleast just pass? We are atleast attended certificate verification and expects something from government, suppose corona and election would have not affected we might have got chance, don't show your jealousy,

      Delete
    5. Why do you need my marks when I had never writhen pg at all. Iam a tet candidate but the way you people abuse the other waiting for pg exam is so bad. You have said we would have got a chance that statement is different but some people like allimalar were saying only after second list exam will come and if not they won't allow to conduct exam. What kind of attitude is that, is that not being jealous. Try to be unbiased.

      Delete
    6. மூடர் களுக்கு புரியாது விடுங்க பாஸ்.... வயிறு ௭ரியுதாக்கும்.....

      Delete
    7. பொறாமையே உருவான நீங்க எல்லாம் அத பத்தி பேசவேணாம். எங்களுக்கு லிஸ்ட் வந்த அப்புறம் தான் அடுத்த தேர்வுன்னு நீங்க போட்ட சீனுக்கு தான் trb வெச்சுது ஆப்பு 😆😆😆

      Delete
    8. ஆமா ஆமா அத ஒரு முழுமுடர் நீங்க சொல்லலாமா

      Delete
  5. Addendum வருதாம் லிஸ்ட் வருதாம் உனக்கு சாவு வரும் பாரு

    ReplyDelete
    Replies
    1. Everyone has death, R u going to live 200 years, cheap mentality ,why do you curse this much,

      Delete
  6. Transfer councling mudintha pin Tet postings poduvangala mam, January month Tet pass pannavangaluku ethavathu oru solution soluvangala mam pls reply

    ReplyDelete
    Replies
    1. Sasi sir after counseling kuda tet posting poda chances kammi dhan, idhan fact. Aana government nenacha minimum vacancy achum fill panalam..

      Delete
  7. ௮ந்தர்பல்டி...௮ப்ப டெட் போஸ்டிங் இல்லையா? அய்யோ பாவம்

    ReplyDelete
    Replies
    1. Hello we are not like u, clearing a competitive exam and waiting for second list is fine means, then tet has all rights to wait for posting. We are fine with the fact, not greedy like u people. Stop criticising tet candidates.

      No second list will come. You can cheat others about revised list, but remember that u r cheating urself. Useless insane people.

      Delete
    2. 81பணியிடங்கள் கூடுதலாக ௨ள்ளதே௮தற்கு பெயர் ௭ன்ன? 🙊🙊🙊🙊😄😄😄

      Delete
    3. ரிவைஸ்ட் லிஸ்ட் ௭ன்றால் தரவரிசை மட்டுமே மாறும் கூடுதல் பணியிடம் சேராது 😃😃😃😃

      Delete
    4. Adhu kooduthal paniyidam illa, last time list la mention pani irundha reserved vacancies, court directions padi again potrukanga avlo dhan.

      Delete
    5. ௮ப்ப பீசி பணியிடத்தை நீக்க வேண்டும் ௮வர்கள் புது பட்டியலில்இடம் இல்லாதபோது ௭ப்படி ஆசிரியராக தொடர முடியும்

      Delete
  8. This comment has been removed by the author.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

❤️❤️❤️❤️

₹ நாளை என்பதே நமக்கு உறுதியில்லை... நாளும் அது புரிவதில்லை. ₹ இரண்டு வயது ஆவதற்குள் நாம் பேச கற்றுக்கொள்கிறோம்... ஆனால் எத்தனை வயது ஆனாலும், “எப்படி பேச வேண்டும்” என்பதை நாம் கற்றுக்கொள்வதில்லை...! ₹ நாம் சந்திக்கும் ஒவ்வொரு நபர்களும் வெவ்வேறு விதமான போராட்டக் களத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் ... ₹ நம்மில் பெரும்பாலானோர், சுய ஆர்வம் கொண்டு நீந்த கற்றுக் கொண்டதை விட இன்னொருவர் தள்ளி விட்டதன் மூலம் நீந்த கற்றுக் கொண்டவர்களே அதிகம் .... ₹ வாழும் நாட்களில் சந்தோஷத்தையும், மனஅமைதியையும் தேடுங்கள் ... மனிதனுடைய வாழ்நாள் தேவைகள், ஒரு போதும் தீர்ந்துவிடப்போவதில்லை ₹ அன்பை வெளிப்படுத்த தயக்கம் இருப்பது போலவே ... இந்த கோபத்தை வெளிப்படுத்தவும் இருந்து விட்டால் எத்தனை நன்றாக இருந்துவிடும்? ₹ சில பிள்ளைகளுக்கு 25 ஆண்டுகள் தகப்பனின் வருமானத்தில் தான் வாழ்ந்தோம் என்பது மறந்து போகிறது ... 15 ஆண்டுகள் நம் வருமானத்தில் வாழ்கிறார்கள் என்பது மட்டும் நன்றாக நினைவிலிருக்கிறது. ₹ கெட்ட உள்நோக்கத்துடன் கூறப்படும் உண்மை, ஆயிரம் பொய்களைவிட மோசமானது! ₹ வேலை இல்லாதவனின் பகலும், நோயாளியின் இரவும் மிக நீளமானவை

PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

  PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசு / நகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும் 01.08 . அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பணியாளர் நிர்ணயம் ( Staff Fixation ) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் பார்வையில் காணும் அரசாணைகளை பின்பற்றி இக்கல்வியாண்டிற்கு ( 2022-23 ) 01.08.2022 அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின்படி பட்டதாரி / முதுகலை ஆசிரியர்கள் பணியிடம் ( BT & PG_Staff Fixation ) நிர்ணயம் செய்தல் சார்பான பணிகள் மேற்கொள்ளப்படவிருக்கிறது. இப்பணியினை மேற்கொள்ள ஏதுவாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக பணியாளர்களுக்கு ஒரு சில அறிவுரைகள் மற்றும் எவ்வாறு கணக்கீடு செய்து நிர்ணயம் செய்தல் போன்ற விவரங்களை உரிய அதுவலர்களால் கீழ்க்கண்ட நிலவரப்படி வழங்கப்படவிருக்கிறது.

COMPETITIVE EXAM FOR TET PASSED CANDIDATES - 2024

UGTRB - Teachers Recruitment Notification -pdf தமிழ்நாடு அரசு பள்ளிகளில் மற்றும் வட்டாரவளமையங்களில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் BRTE பணியிடங்களுக்கான UGTRB தேர்வு அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. 👉தமிழ்வழி இட ஒதுக்கீடு 20%  👉பணியில் இருக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 10% ஒதுக்கீடு  (NOC compulsory)  👉மாற்றுத்திறனாளிகள்  👉மூன்றாம் பாலினத்தவர் 👉69% Reservation  என அனைத்து ஒதுக்கீடு நடைமுறைகளும் முறையாக பின்பற்றப்படும்.  👉 காலிப்பணியிடங்கள் -2222 👉கல்வித்தகுதி -       BED + TNTET PAPER -2 Pass   👉விண்ணப்பம் - Online 01.11.2023 முதல் 30.11.2023 வரை  👉தேர்வு - Offline - OMR BASED  👉weightage Mark - உண்டு TET தேர்ச்சி பெற்ற ஆண்டின் அடிப்படையில் மதிப்பெண்.  ( விவரம் Notification)   As per G.O- 147 👉 கட்டாயத்தமிழ் தகுதித்தேர்வு - உண்டு  👉பாடவாரியாக தேர்வு உண்டு  👉150 கேள்வி - 150 மதிப்பெண்  👉 OC - 60 Mark தேர்ச்சி  👉BC/MBC/ DNC/ SC/ST - 40 MARK தேர்ச்சி  👉சான்றிதழ் சரிபார்ப்பு - உண்டு Notification in pdf-  Click Here