Skip to main content

TODAY'S THOUGHT..

வயது முதிர்ந்த மூதாட்டி ஒருத்தி உணவு விடுதி நடத்திவந்தாள். காலையில் அவள் விடுதியில் கிடைக்கும் அப்பம் மிகமிகச் சுவையானதாக இருக்கும்.

அந்த விடுதிக்கு வரும் அனைவரும் அதனை விரும்பிக் கேட்டுவாங்கி உண்பர். அப்பத்துக்குச் சர்க்கரையும் பாலும் துணைப் பொருள்களாக அளிப்பாள்.

ஒரு சமயம் சர்க்கரை விலை சற்றுக் கூடியது. அப்பத்திற்குப் பெறுகிற விலைக்குச் சர்க்கரை கொடுப்பது அம்மூதாட்டிக்குச் சற்றுச் சிறமமாக இருந்தது.

அதிகவிலை கொடுத்துச் சர்க்கரை வாங்கினாலும், அப்பத்தின் விலையைக் கூட்ட அவள் விரும்பவில்லை. எனவே, ‘அப்பத்திற்குச் சர்க்கரை இல்லை’ எனக் கூற விரும்பினாள்.

கடைக்கு வழக்கமாக வந்து சாப்பிடும் ஒருவரை அழைத்து. ‘அப்பத்துக்குச் சர்க்கரை இல்லை’ என அறிவிப்பு அட்டை ஒன்றை எழுதிவரச் சொன்னாள்.

அவர் அதன் அடிப்படையில் 
“இன்று முதல் அப்பத்துக்குச் சர்க்கரை இல்லை” என ஓர் அறிவிப்பு அட்டை எழுதி வந்தார். அம்மூதாட்டி அதனைக் கடையில் தொங்கவிட்டாள்.

காலையில் சாப்பிடவந்த ஒருவர் ஓர் அப்பம் வாங்கிச் சாப்பிட்டார். சர்க்கரை இல்லாமலே சாப்பிட்டார். இரண்டாவதாக ஒர் அப்பம் கேட்டார்.

அவள் இரண்டாவது அப்பம் கொடுத்தாள். அவர் “அம்மா! அப்பத்துக்கு சர்க்கரைக் கொடு” எனக் கேட்டார்.

அம்மூதாட்டி “அறிவிப்புப் பலகையைப் பார்த்தீர்களா?” என்று கேட்டாள். அப்பம் வாங்கியவர் “பார்த்தேன்! படித்தேன்! அதன் பிறகுதான் சர்க்கரை கேட்டேன்” என்று கூறினார்.

“அதைப் படித்துவிட்டுமா கேட்கிறீர்?” என்றாள் அம்மூதாட்டி. ஆமாம்... அறிவிப்பு அட்டையில் என்ன எழதி இருக்கிறது? ‘இன்று முதல் அப்பத்துக்குச் சர்க்கரை இல்லை’ என்றுதானே எழுதியிருக்கிறது. இரண்டாவது அப்பத்துக்குத்தானே நான் சர்க்கரை கேட்கிறேன்” என்றார்.

“ஐயா! அப்படியா பொருள் கொள்கிறீர்கள்? சரி! உங்களுக்கு இன்று சர்க்கரை கொடுத்து விடுகிறேன். நாளை அறிவிப்பு அட்டையில் எழுதியிருப்பதை மாற்றி விடுகிறேன்” என்று கூறினாள்.

அறிவிப்பு அட்டை எழுதியவரை அழைத்தாள். ஐயா, அறிவிப்பு அட்டையில் “அப்பத்துக்கு இன்றுமுதல் சர்க்கரை இல்லை” என எழுதிவிடுங்கள் என்றாள்.

அந்த நாள் முதல் அப்பத்துக்குச் சர்க்கரை இன்றி விற்கத் தொடங்கினாள். காலைச் சிற்றுண்டிச் சிக்கல் இவ்வாறு தீர்ந்தது.

ஆக, சொல்லின் இடைவெளியே அர்த்தத்தை மாற்றும் போது, நாம் கூற வேண்டியதை காலம் தாழ்த்தி கூறினால் என்னாகும். சிந்தியுங்கள்...


Comments

  1. Gudmrng friends, brothers and sisters.. Have a blessed day ahead..

    ReplyDelete
  2. Dear friends, brothers and sisters..

    Just a reminder about asking question to education minister regarding tet posting.

    I have requested my frnd working in puthiya thalaimurai to ask education minister about tet posting.. Anybody want to send short and crisp questions you can comment here.. I'll send him that in voice note..

    Suggestions will be considered..

    ReplyDelete
    Replies
    1. Thanks mam. Tet passed candidatesku epo posting entha method entru kekasolunka mam

      Delete
    2. Mam please tell them to get details about method of posting.

      Delete
    3. Arun sir and Benny sir..

      I have informed my frnd.. Lets wait and see..

      Delete
  3. And its really pathetic that some fools have commented like "admin enna trb ke admin ah?"..

    To those fools..

    My friend, he is also a tet passed candidate and he works in puthiya thalaimurai channel. Many times he has informed me that today education minister has said this even before it gets displayed on TV. Because he will inform that particular area reporter to question the minister about tet.

    Thats the reason most of tet related questions were asked in PT channel. Sometimes he will say you send what to ask I'll send that to reporter. So only I have asked suggestions.. Hence stop ur funny idiotic insane comments and do something useful..

    Everyone knows trb admin and its administration is not good, so any citizen can question it and I'll be the first to do so.. U people keep blabbering because u were all fit for that only.

    ReplyDelete
    Replies
    1. சூரியனை பாத்து நாய்ங்க குறைச்சுட்டே இருக்கும் அப்புறம் அதுங்களே ஓடிரும் மேடம்.

      Delete
    2. அவங்களும் நல்லது செய்ய மாட்டாங்க செய்றவங்கள குறை சொல்ல வந்துருவாங்க. முட்டாள் ஜென்மங்கள்

      Delete
  4. Respected Admin mam sorry for those unmatured comments by few useless people. Those who have seen this website from initial days would know that many times you will inform us sengottayan news before any tv is publishing. Please continue to help people who has always believed in you. Thank you mam.

    ReplyDelete
    Replies
    1. Benny sir..

      I have nvr thought of ppl talking behind me, they are fit to for cheap tactics only. I'll do what am supposed to do..

      Delete
  5. பெயரை கூட தெரியப்படுத்த தைரியம் இல்லாத கோழைகள் கருத்துகளுக்கு விளக்கமோ, பதிலோ தரவேண்டியது இல்லை .

    அனைவருக்கும் நல்லது நடக்கும் என்று முயற்சி செய்யும் மனிதர்களுக்கு இடையில்
    இது போன்ற கீழ்த்தர எண்ணம் கொண்டவர்கள் அமைதி காப்பது நல்லது.

    மேடம் நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி அளப்பரியது .
    இதைக்கண்டு கோவம் வேண்டாம்

    ReplyDelete
    Replies
    1. ஆமா மேம். நீங்க செய்றது பெரிய ஹெல்ப். முட்டாள்களை பற்றி யோசிக்க வேண்டாம்.

      Delete
    2. Thanks Muniyappan sir and Alamelu mam..

      Delete
  6. If tet posting is based on tet marks
    we write tet exam every year to increase the marks then their is no meaning for life time certificate..

    ReplyDelete
    Replies
    1. Tet posting cannot be based on tet marks. Ncte rules is there.

      Delete
  7. 2013 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

    ReplyDelete
  8. அட்மின் மேம் bed seniority+tet seniority படி வேலைவாய்ப்பை ஏற்படுத்த சொல்லுங்கள் மேம் ஏனென்றால் நிறைய பேர் seniority job illanthavanga irukaanga,2013,2017,2019 entha tet exam layum pass pannuvathu avalo easy ah ana visayam illa namma science ,maths la easyah ana visayam kidaiyathu pass pannuvathu,namma major ku matha major mathiri direct questions varathunu ungaluku theriyum,athanal pass panna yarum pathiya Agatha mathiri trt exam eannral syllabus solla vaikanum,illa seniority fix panna vaikanum rendu la onnu theriya vaikanum mam

    ReplyDelete
    Replies
    1. Unknown frnd..

      Ivlo questions yum on the spot minister kitta live la kekka mudiyathu, ithaellam petition ah eludhi register post venumna pannalam. Ella tet passed candidates yum idha panna kuda oru solution kedaikkum. But edhavathu onnu seiyanum summa irundhu oru velayum nadakkathu.

      Delete
    2. Wait panikitu irukirom..analum oru nalathum nadakala athu than varuthama iruku mam

      Delete
  9. General ah posting epo poduvinga or enna method indha madhiri kekkalam avlo dhan, adhukum avanga udane solution soliduvanganu expect panna mudiyathu but neriya time kekkumbothu automatic ah edhavathu action edupanga. Adhuku dhan try panrom..

    ReplyDelete
  10. Ithaellam oru silarukku kindala gaeliya vera iruku, enna jenmangalo therila..

    ReplyDelete
    Replies
    1. நல்லதுக்கு காலம் இல்ல மேடம்.

      Delete
    2. They are not human

      Delete
  11. Gud afternun mam. Pona atchiyilsa tet passed candidateku 6 years ha posting podala. Unga atchiyila epadi poduvinga. Antha tet passed candidate ku ena solution sir. Udane sollunga sir nu ketka solunga madam.

    ReplyDelete
    Replies
    1. Ungalukku 10000; posting pottachu

      Delete
    2. Yes 2017&2019 only most affected

      Delete
    3. Ellaraum Sethu podunga

      Delete
    4. Tet mark+ employment seniority is best method no one affected by this method and also select a high mark with senior teacher get selected

      Delete
    5. Yes .i agree.. Pudhucherry following Tet Mark ( 90% weightage) + Employment Senoirity10% weightage. Great method ..

      Delete
    6. நம்ம எல்லாம் பேசி என்ன ஆகப்போகுது அரசு பேசணும்

      Delete
    7. Gudevng Unknown frnd..

      Ella questions yum forward panirkaen, but inaiku minister 12th exam thavira vera edhu pathiyum pesalayam. Live la pesinaaram, so next time kekka try panradha sonanga..

      Delete
  12. செங்கோட்டை நீ நல்லா இருக்கமாட்ட

    ReplyDelete
  13. https://www.facebook.com/292134710905399/posts/4086517318133767/?d=null&vh=e

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப முக்கியம்

      Delete
  14. Tet passed candidates consolidated list kelunga...

    ReplyDelete
  15. Hi sis and everyone. Tet candidates job pathi kavalapadatheenga intha situation la kavalapada neraya visayam irukku. First we should take care of ourselves and our loved ones. Kavalapatta immunity than kammi agum. Humble request don't worry for anything. Job kidaikunamnu iruntha kandipa kidaikum. Appuram innonu 2013, 17, 19 yen sandai podanum ellarumae tet candidates than ellarukum life irukku athula Pala kastangal irukku. Y jealous on others be Humble. Govt entha step eduthalum yarukum pathagam illama kandipa posting poduvanga. Illati avungaluku than case athu ithunu prichanai varum. Padika mudinchavanga padinga. Etha pathi yum yosika vendam ano sis pathi vendatha vimarsananum vendam. I and many of her wellwishers know about her. So no bla bla blabbering. Be safe and be healthy. Ellam iraivan kayil.Good night

    ReplyDelete
  16. ரேவதி சிஸ் கரெக்டா சொன்னிங்க. எல்லாரும் அடுத்தவங்களை குறை சொல்லவும் காயப்படுத்தவும் தான் ரெடியா இருகாங்க. இறைவனை நம்புவோம். இரவு வணக்கம்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

❤️❤️❤️❤️

₹ நாளை என்பதே நமக்கு உறுதியில்லை... நாளும் அது புரிவதில்லை. ₹ இரண்டு வயது ஆவதற்குள் நாம் பேச கற்றுக்கொள்கிறோம்... ஆனால் எத்தனை வயது ஆனாலும், “எப்படி பேச வேண்டும்” என்பதை நாம் கற்றுக்கொள்வதில்லை...! ₹ நாம் சந்திக்கும் ஒவ்வொரு நபர்களும் வெவ்வேறு விதமான போராட்டக் களத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் ... ₹ நம்மில் பெரும்பாலானோர், சுய ஆர்வம் கொண்டு நீந்த கற்றுக் கொண்டதை விட இன்னொருவர் தள்ளி விட்டதன் மூலம் நீந்த கற்றுக் கொண்டவர்களே அதிகம் .... ₹ வாழும் நாட்களில் சந்தோஷத்தையும், மனஅமைதியையும் தேடுங்கள் ... மனிதனுடைய வாழ்நாள் தேவைகள், ஒரு போதும் தீர்ந்துவிடப்போவதில்லை ₹ அன்பை வெளிப்படுத்த தயக்கம் இருப்பது போலவே ... இந்த கோபத்தை வெளிப்படுத்தவும் இருந்து விட்டால் எத்தனை நன்றாக இருந்துவிடும்? ₹ சில பிள்ளைகளுக்கு 25 ஆண்டுகள் தகப்பனின் வருமானத்தில் தான் வாழ்ந்தோம் என்பது மறந்து போகிறது ... 15 ஆண்டுகள் நம் வருமானத்தில் வாழ்கிறார்கள் என்பது மட்டும் நன்றாக நினைவிலிருக்கிறது. ₹ கெட்ட உள்நோக்கத்துடன் கூறப்படும் உண்மை, ஆயிரம் பொய்களைவிட மோசமானது! ₹ வேலை இல்லாதவனின் பகலும், நோயாளியின் இரவும் மிக நீளமானவை

COMPETITIVE EXAM FOR TET PASSED CANDIDATES - 2024

UGTRB - Teachers Recruitment Notification -pdf தமிழ்நாடு அரசு பள்ளிகளில் மற்றும் வட்டாரவளமையங்களில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் BRTE பணியிடங்களுக்கான UGTRB தேர்வு அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. 👉தமிழ்வழி இட ஒதுக்கீடு 20%  👉பணியில் இருக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 10% ஒதுக்கீடு  (NOC compulsory)  👉மாற்றுத்திறனாளிகள்  👉மூன்றாம் பாலினத்தவர் 👉69% Reservation  என அனைத்து ஒதுக்கீடு நடைமுறைகளும் முறையாக பின்பற்றப்படும்.  👉 காலிப்பணியிடங்கள் -2222 👉கல்வித்தகுதி -       BED + TNTET PAPER -2 Pass   👉விண்ணப்பம் - Online 01.11.2023 முதல் 30.11.2023 வரை  👉தேர்வு - Offline - OMR BASED  👉weightage Mark - உண்டு TET தேர்ச்சி பெற்ற ஆண்டின் அடிப்படையில் மதிப்பெண்.  ( விவரம் Notification)   As per G.O- 147 👉 கட்டாயத்தமிழ் தகுதித்தேர்வு - உண்டு  👉பாடவாரியாக தேர்வு உண்டு  👉150 கேள்வி - 150 மதிப்பெண்  👉 OC - 60 Mark தேர்ச்சி  👉BC/MBC/ DNC/ SC/ST - 40 MARK தேர்ச்சி  👉சான்றிதழ் சரிபார்ப்பு - உண்டு Notification in pdf-  Click Here 

TNTET PAPER2 TAMIL QUESTIONS

This post is for Tamil questions which will include Cheyyul, Urainadai, Ilakkanam and also book back informations.. Anybody willing to post tamil questions can post here and candidates preparing for upcoming tet can make use of this, All the best..