Skip to main content

இன்றைய சிந்தனை..

*யாரிடம் தவறில்லை யாரிடம் குறையில்லை. வாழ்வது ஒரு முறை வாழ்த்தட்டும் தலைமுறை.*


*நம் சுற்றத்தினர் மீது சில சமயங்களில் கோபமும், ஆற்றாமையும் ஏற்படுவது சகஜம் தான்.*


*இந்த உணர்ச்சிகள் நமக்குள் தோன்றி நாமே கட்டுபடுத்தி கொண்டால் பிரச்னை ஒன்றும் இல்லை.*


*அதை விடுத்து, நம் கோபம் எல்லை கடந்து வெளியில் தெரிந்தால் கண்டிப்பாக நம் உறவுகளுக்குள்ளே  பிரச்னை தான் ஏற்படும்.*


*அடுத்த முறை நம்மை சுற்றி உள்ளவர்களின் செயல் அதிருப்தி தந்து, கோபம் வந்தால் முதலில் ஒன்றை யோசியுங்கள்.*


*இந்த கோபமோ, அதிருப்தியோ தற்காலிகமான உணர்ச்சிகள். நாளையே சரியாகி விடும்.*


*ஆனால் உறவுகள் என்பவை நிரந்தரமானது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.*


*உறவுகளை இந்த சிறு பிரச்னைகளால் இழக்க வேண்டுமா என ஆராய்ந்து அவ்வப்போது அவர்களின் செயல்களால் ஏற்படும் சிறு சிறு உரசல்களை தெளிவாக கையாளுங்கள்.*


*கோபம் உள்ள இடங்களில் உறவுமுறைகள் நிலைக்காது. உணர்ந்து செயல்படுங்கள்.*


*பெருமையும் சிறுமையும் சொல்லில் இல்லை, நம் நடத்தையில் தான் உள்ளது...*


*எவரையும் எதற்கும் எதிர்ப்பார்க்காத வாழ்க்கையை வளர்த்துக் கொள்ளுங்கள்...*


*நம்மை சிறுமைப்படுத்துபவரையும் சிரித்து வெல்லுங்கள்..!!*


*உங்களிடம் அனைத்துமே உள்ளது... நீங்களே சிறந்தவர் என்று அடுத்தவர் புகழ்வதில் என்ன உள்ளது... வெறும் வஞ்சக புகழ்ச்சி தான் அது...*


*உங்களிடம் எதுவுமில்லை... இனி நீங்கள் மேலே வரப்போவதில்லை... வெற்றியை ருசிக்க போவதில்லை... நீங்கள் ஒரு ஏமாளி, நீங்கள் தோற்றுக் கொண்டே இருப்பவர் என்ற அவமான வார்த்தையில் அத்தனையும் உள்ளது...*


*அதை கேட்டு கேட்டு  வலித்து, வலித்து, வருந்தி, கலங்கி, வெகுண்டு திமிராகி எழுந்து வருவதில் இருக்கிறது வாழ்வின் சூட்சுமம்...*


*ஒரு கட்டத்தில் ஒருவர் அவமானப்படுத்தும் போது எதிர்க்க முடியாத சூழல் இருக்கும்... கையை பிசைந்து கொண்டு இருப்போம்...*


*அவமானத்தால் கூனி குறுகி தலைகவிழ்ந்து கன்னம் தாண்டாத கண்ணீரோடு தத்தளித்துக் கொண்டிருப்போம்...*


*இது நம் குடும்பத்திலியே நடக்கும். நடந்திருக்கும்... அதை அப்படியே தேக்கி வையுங்கள்...*


*அக்கண்ணீரை உரமாக்கி  திருப்பிக் காட்ட ஒருநாள் காத்திருங்கள்... நிச்சயம் நடக்கும் காத்திருங்கள்...*


*அவமானம் கற்றுதரும் பாடத்தை இந்த உலகில் எவரும் கற்று தரமுடியாது...*


*#வாழ்த்துக்கள்.*



Comments

  1. Gudmrng friends, brothers and sisters.. Have a blessed day ahead..

    ReplyDelete
  2. V good morning sister, after school opening may expect teachers appointment ?

    ReplyDelete
    Replies
    1. Gudnoon brother..

      Yes, possibilities iruku brother.. Government nenacha ellam possible dhan..

      Delete
  3. . நமது TET சகோதர சகோதரிகளுக்காக நாளை சஷ்டி பூஜையில் பிரார்தனை செய்யப்பட உள்ளது. யாரும் கவலைபட வேண்டாம். சாமி அய்யர் சின் னமனூர்

    ReplyDelete
  4. Mam BT vacancy irukka illaiya
    PG vacancy increase aaguma .maths kku evvalovu vacancy varum.anal silar maths kku PG and vacancy kammi endru solkirarkala you tube la

    ReplyDelete
    Replies
    1. BT vacancies nichayama irukum but kammiya irukkum.. PG vacancies nichayama increase agum..

      Maths ku akready kammiya dhan iruku.. Ipo upgraded schools list la kuda Maths vacancies kammiya dhan iruken..

      Delete
    2. ஒ௫ போஸ்ட் கூட கூடவாய்ப்பு இல்லை

      Delete
  5. ano mam teachers posting poduvanala ilana consolidated achum poduvangala

    ReplyDelete
    Replies
    1. Edhuku consolidated, posting ae podanum, seekirame poduvanga..

      Delete
    2. ila mam consolidated posting pottakooda naraya posting podalam apram fewyears la permanent pannakekalam mam govt fund illala consolidated useful a erukumla mam atha sonnen

      Delete
  6. நண்பர்களே!குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்க உதவியும் , ஆலோசனையும் கொடுக்க வேண்டும்.

    அரசுப்பள்ளி நன்மை குறித்து விளக்க வேண்டும்.

    நம் குழந்தையை முதலில் அரசுப்பள்ளியில் சேர்க்க வேண்டும்.

    தன் குழந்தையை தனியார் பள்ளியில் சேர்த்த ஒருவர் அரசு ஆசிரியர் பணியை எதிர்பார்ப்பது மிகவும் தவறு.

    கொரோனா
    தனியார் பள்ளி மோகத்தை தானாகவே தகர்த்து விட்டது.

    ReplyDelete

  7. தன் குழந்தையை தனியார் பள்ளியில் சேர்த்த ஒருவர் அரசு ஆசிரியர் பணியை எதிர்பார்ப்பது மிகவும் தவறு.
    🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

TNTET PAPER2 ENGLISH QUESTIONS..

English Previously discussed question... Identify the pattern of the following sentence. The boy pushed the door open. A)SVOC B)SVOA C)SVO D)SVC Ans:SVOC      The boy-subject,pushed-verb,the door-object,open-complement ('open' is an action by the verb 'pushed') Today's Questions 7th 1st term book. 1.Match the following collective nouns. 1)A cloud of.   -  a)bells 2)A bench of.  -  b)bats 3)A carillion of. -   c)crocodiles 4)A float of.    -d)bishops. A)1-a,2-b,3-c,4-d B)1-d,2-c,3-b,4-a C)1-b,2-d,3-a,4-c D)1-b,2-a,3-d,4-c 2.Form abstract noun for the following words. Clever,Heavy A)cleverly,heavily B)cleverish,heaviness C)cleverer,heavyish D)cleverness,heaviness 3.Fill in the blanks with suitable verb. Saina and Mary _______(go) to bed at 9.00p.m. A)go B)goes C)went D)will go 4.A phrasal verb is a combination of_______ A)A verb & a preposition B)A verb & A ad...

WARM WELCOME..

Welcome to Puthagasalai.. This is to thank respected admin sir, for his wonderful support inspite of so many hindrances.. Hope we will do our best to make this new website a successful one.. I have taken this big responsibility thinking all my lovable friends will support me as how they were so far..

TODAY'S THOUGHT..

"தெருவிலே சுற்றிக் கொண்டிருந்த நாய் ஒன்று"......, தவறிப் போய் அரண்மனைக்குள் நுழைந்தது"....!! "அந்த அறைக்குள் நுழைந்த நாய்க்கு அதிர்ச்சி ".......!!   "அங்கே சுற்றியும் நூற்றுக் கணக்கான நாய்கள் இருந்தன"....!! "சற்று எரிச்சலடைந்து "உர்ர்.. உர்ர்.." என்றது"....!! "அந்த நூறு நாய்களும் பதிலுக்கு".... "உர்ர்.. உர்ர்.." என்றது. "அந்த நாய் கொஞ்சம் பயந்து விட்டது"...!! இருந்தும் கோபம் தாளாமல்.....,   "லொள் லொள்" என குரைக்க ஆரம்பித்தது. "எல்லா நாய்களும் சேர்ந்து குரைத்தது"......!! "அந்த நாய் குரைப்பதை நிறுத்தியவுடன்"...., "மற்ற எல்லா நாய்களும் குரைப்பதை நிறுத்திகொண்டது".....!! அந்த தெரு நாய்க்கு கோபமும் பயமும் அதிகமானது. உடனே...,   " வெறி பிடித்ததை போல் தொடர்ந்து குரைக்க ஆரம்பித்தது".....,   " பதிலுக்கு அந்த நாய்களும் குரைத்தன"....!! மற்ற நாய்களும் குமயங்கியது " இந்த நாய் பயத்தின் உச்சத்தில்...., " வெறி பிடி...