Skip to main content

உங்களை நம்புங்கள்..

*உங்களுக்கு அற்புதமான திறமைகள் இருக்கலாம்.

“என்னால் முடியும்” என்று சொல்லி உங்கள் மேல் நீங்கள் நம்பிக்கை கொள்ளுங்கள்.*


*அப்பொழுது தான் நீங்கள் எதையும் சாதித்துக் காட்ட முடியும்.*


*உங்களையே நீங்கள் நம்பவில்லை என்றால் “வாழலாம்” என்ற ஆர்வம் உங்களுக்கு எப்படி வரும்?*


*நீங்கள் உங்கள் மேல் நம்பிக்கை வைக்கும் போது உங்களையறியாமல் உங்களுக்குச் சில பொறுப்புகள் வந்து சேரும்.*


*அப்படிப் பொறுப்புகள் வரும் போது, வாழக் கூடாது என்ற வெறுப்புணர்வு உங்கள் உள்ளத்தில் மறைந்து இருந்தால்,அது தானாகவே அழிந்து விடும்.*


*குடும்பப் பொறுப்புகள், பணியாற்றும் இடத்தில் ஏற்படுகின்ற பொறுப்புகள், சமுதாயத்தில் எப்படி நடத்து கொள்ள வேண்டும் என்ற பொறுப்புகள் யாவும் சேர்ந்து உங்களைச் சுமக்க ஆரம்பிக்கும்.*


*பொறுப்பு என்ற சிம்மாசனத்தில் அமர்ந்து கொண்டு மன்னனாகத் திகழ்வீர்கள்.* *தன்னம்பிக்கை மிகுந்த வேந்தனாகச் சுடர் விட்டுப் பிரகாசிப்பீர்கள்.*


*பொறுப்பு உங்களுக்கு நிறையச் சேருகிற போது நீங்கள் கடமைகள் ஆற்றிடத் துணிந்து விடுவீர்கள்.*


*நீங்கள் தன்னம்பிக்கையுடன் செயல்படத்*

*தொடங்கினால் நீங்கள் எவருக்கும் பயப்படத் தேவையில்லை.*


*மற்றவர்கள் பொறாமை உணர்வுடன் பேசுகின்ற ஏச்சுக்களையும், கிண்டல்களையும், நக்கல்களையும் கேட்டு நீங்கள் கவலைப்படத் தேவையில்லை*.


*நீங்கள் உங்கள் மேல் முழு நம்பிக்கை வைத்து, முழு மூச்சுடன் ஒரு செயலைச் செய்யத் தொடங்குங்கள்.*


*வெற்றி, தோல்விகளைப் பற்றிக் கவலைப்படாமல், முழு முயற்சியுடன் உழைப்பை சிந்துங்கள்.*

*ஆர்வமும், முழு முயற்சியும், உழைப்பும், தன்னம்பிக்கையின் மூலம் வருவது தான்.*


*ஆம்.,நண்பர்களே..,*


*“ என்னால் முடியும்” என்று நீங்கள் மன உறுதியோடு செயல்பட வேண்டும். “முடியாது” என்கிற வார்த்தை முட்டாள்களின் அகராதியில் தான் காணப்படுகிறது என்று சொன்னான், மாவீரன்d, மேலான வாழ்க்கை வாழ்வதற்கும் உங்களுக்குத் தன்னம்பிக்கை இருக்க வேண்டும் அல்லவா..?*


*தன்னம்பிக்கையை வளர்த்து, வாழ்க்கைச் சவால்களை எதிர்கொள்ளுங்கள், சாதனை படையுங்கள்.* 


*உங்கள் மீது நம்பிக்கை வைத்து வீறு கொண்டு எழுந்து வாருங்கள், உலகம் உங்கள் வசப்படும்.*


*"DONT TRY TO IMPRESS PEOPLE; ALWAYS BE YOURSELF..''*



Comments

  1. Gudmrng friends, brothers and sisters.. Have a blessed day ahead..

    ReplyDelete
  2. நமது TET நண்பர்களுக்காக நேற்று பிரதோஷ பூஜையில் பணிநியமனம் கிடைக்க சங்கல்பம் செய்யப்பட்டது.சாமி அய்யர். சின்னமனூர்

    ReplyDelete
  3. 😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

    ReplyDelete
  4. என்ன இன்றைக்கு comments குறைவா இருக்கு, சண்டை போடும் ஆசிரிய பெருமக்கள் வரவில்லையோ

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

*இதுவும் கடந்து போகும்..!!!*

நம்முடைய இதுநாள் வரை வாழ்க்கையையும் திரும்பிப் பார்த்தால் இந்த வாக்கியத்தின் மகத்தான உண்மையை உணர முடியும். எத்தனை வெற்றிகள், எத்தனை தோல்விகள், எத்தனை மகிழ்ச்சிகள், எத்தனை துக்கங்கள்..... எல்லாம் வந்து சிறிது காலம் தங்கி கடந்து போயிருக்கின்றன. வந்ததெல்லாம் நம்மை விட்டுப் போவதால் நம்முடையதல்ல என்பது உறுதியாகிறது.வந்து போவதெல்லாம் நம்முடையதல்ல என்பதால் நாம் வெறும் பார்வையாளர்களே அல்லவா? எத்தனை நண்பர்கள், எத்தனை பகைவர்கள், எத்தனை உறவுகள் நம் வாழ்வில் முக்கிய அங்கம் வகித்து வெறும் நினைவுகளை மட்டும் நம்மிடம் விட்டு விட்டுப் போயிருக்கிறார்கள்? வாழ்வில் வந்ததெல்லாம் நம்மைக் கடந்து சென்று கொண்டு தானே இருக்கின்றன. ஒரு விதத்தில் என்றும் நாம் தனியர்களே அல்லவா? இயற்கையின் விதியே இது என்று உளமார உணர்ந்து தெளியும் போது கிடைக்கும் *அமைதி சாதாரணமானதல்ல* அந்த அமைதியை மனதில் நிரந்தரமாக்கிக் கொள்ளுங்கள். *வெற்றிகள் கிடைக்கும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பதை நினைவில் கொள்ளுங்கள். *கர்வம் தலை தூக்காது.* *தோல்விகள் தழுவும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பத...

நீங்கள் வாழ்க்கையில் வெற்றி பெற்று விட்டீர்களா என்பதை கண்டுபிடிக்க ஒரு சுலபமான வழிமுறை..

ஒரு பேனாவையும் பேப்பரையும் எடுத்துக்கொள்ளுங்கள். கேட்கிற ஐந்து கேள்விக்கு உடனே பதில் கிடைத்தால் அதுல பதிலை எழுதுங்க. ரொம்ப நேரம் எடுத்துக்கக்கூடாது. ரொம்ப மண்டையை போட்டு பிச்சுக்கக்கூடாது. உங்களால முடியலேன்னா அடுத்த கேள்விக்கு உடனே போயிடுங்க. அதுவும் முடியலியா…. படிச்சிகிட்டே போங்க…. ரெடியா..... 1. உலகத்திலேயே மிகப் பெரிய பணக்காரர்கள் ஒரு ஐந்து பேரை சொல்லுங்க பார்க்கலாம்.. 2. 2004 மற்றும் 2009 பாராளுமன்ற தேர்தல்ல பிரபல தலைவர்களை தோற்கடித்தவர்களில் ஒரு நாலு பேர் பெயரை சொல்லுங்க பார்க்கலாம்… 3. சர்வதேச அளவில் நடக்குற அழகிப் போட்டிகளில் ஜெயிச்ச இந்திய பெண்கள் ஒரு நாலு பேர் பெயரை சொல்லுங்க…. 4. நோபல் பரிசு வாங்கிய உங்களுக்கு தெரிந்த ஒரு பத்து பேர் பெயரை சொல்லுங்க….. 5. கடைசியா ஆஸ்கார் அவார்ட் வாங்கிய ஐந்து நடிகர் மற்றும் நடிகைகள் பெயரை சொல்லுங்க பார்க்கலாம்… உங்கள் பதில் உங்களுக்கே திருப்தியா இருந்ததா? இல்லே தானே? நாம் யாருக்குமே கடந்த காலத்தின் தலைப்பு செய்திகளோ அல்லது தலைப்பு செய்திகளில் இடம்பிடித்தவர்களோ நினைவில் இருப்பதில்லை. இத்தனைக்கும் இவங்கள...

TODAY'S THOUGHT..

"தெருவிலே சுற்றிக் கொண்டிருந்த நாய் ஒன்று"......, தவறிப் போய் அரண்மனைக்குள் நுழைந்தது"....!! "அந்த அறைக்குள் நுழைந்த நாய்க்கு அதிர்ச்சி ".......!!   "அங்கே சுற்றியும் நூற்றுக் கணக்கான நாய்கள் இருந்தன"....!! "சற்று எரிச்சலடைந்து "உர்ர்.. உர்ர்.." என்றது"....!! "அந்த நூறு நாய்களும் பதிலுக்கு".... "உர்ர்.. உர்ர்.." என்றது. "அந்த நாய் கொஞ்சம் பயந்து விட்டது"...!! இருந்தும் கோபம் தாளாமல்.....,   "லொள் லொள்" என குரைக்க ஆரம்பித்தது. "எல்லா நாய்களும் சேர்ந்து குரைத்தது"......!! "அந்த நாய் குரைப்பதை நிறுத்தியவுடன்"...., "மற்ற எல்லா நாய்களும் குரைப்பதை நிறுத்திகொண்டது".....!! அந்த தெரு நாய்க்கு கோபமும் பயமும் அதிகமானது. உடனே...,   " வெறி பிடித்ததை போல் தொடர்ந்து குரைக்க ஆரம்பித்தது".....,   " பதிலுக்கு அந்த நாய்களும் குரைத்தன"....!! மற்ற நாய்களும் குமயங்கியது " இந்த நாய் பயத்தின் உச்சத்தில்...., " வெறி பிடி...