Skip to main content

கேள்வி கேளுங்கள்...!

மனித வாழ்கையை புரட்டிப் போட்ட ஒரு சில சொற்கள் உண்டு...! யாரெல்லாம் இவைகளை உச்சரித்து உணர்ந்து இருந்தார்களோ!, அவர்கள் தாங்கள் வேண்டியதைப் பெற்றுக் கொள்கிறார்கள். இது வரலாறு மட்டுமல்ல நிகழ்கால உண்மையும் கூட...!


மனிதன் தனக்கு முன் வரும் எல்லா நிகழ்வுகளையும் இந்த சொற்களைக் கொண்டு ஆராய்ந்து பார்க்கவே இந்த அற்புதச் சொற்கள் நம் முன்னோர்களால் உருவாக்கப்பட்டன...


இவைகளைப் பயன்படுத்தியவர்கள் வாழ்க்கையைப் பொருள்படுத்தி மற்றவர்களின் வாழ்க்கையையும் மாற்றி அமைத்தார்கள்...


🔹உலகில் தோன்றிய தத்துவ ஞானிகள்...


🔹உலகை மாற்றி அமைத்த அறிவியல் மேதைகள்...


🔹செல்வத்தை வான் மழையெனக் கொட்டச் செய்த தொழில் மேதைகள்...


🔹உடல் நோயை ஒழித்த மருத்துவ மேதைகள்...


எனப் பலரும் ஒவ்வொரு தருணத்திலும் இந்த சொற்களைப் பயன்படுத்தி வாழ்க்கையில் வெற்றி கண்டார்கள்...


ஆனால்!, நம்முடைய வாழ்க்கையிலும், நமக்கு வேதனைகளும், சோதனைகளும் வரும் போது, நம்மில் பெரும்பாலோர் இந்த வார்த்தையைப் பயன்படுத்துவது இல்லை...


மாறாக, பரிகாரம் தேடி ஜோதிடர்களையும், கோவில்களையும் நோக்கி ஓடிக்கொண்டு இருக்கிறார்கள்...


உண்மையில் நாம் கலங்கும் போது இந்த சொற்களைப் பயன்படுத்தி இருக்கின்றோமா...?


நாம் தோற்று நிற்கும் போது ஏன் இந்த நிலை எனக் கேட்கிறோமா...?


நம்மை மற்றவர்கள் ஏமாற்றி விட்டாதாக, நம்பிக்கை துரோகம் செய்து விட்டாதாக நாம் புலம்பும் போது இந்த நிலை ஏன் என்று கேட்பதில்லை...


நாளைய நமது பாதைகளின் இலக்குகளை நாம் தீர்மானிக்கத் தவறுகிறோம், பின் பூட்டிய வீட்டின் கதவின் நிற்பது போல் நாம் செய்வதறியாது மலைத்து நிற்கிறோம்...


உண்மையில் வரலாற்றின் பக்கங்களிலும், 

நிகழ்கால வெற்றிகளையும் கொண்டு வந்த ஒரே ஆதாரம் நிறைந்த சொற்கள் தான் இவைகள்...


ஏன்...? எதற்கு...? எப்படி...? என்று கேள்வி கேட்க வேண்டும் என்று ஏதன்சு நாட்டு இளஞர்களைத் தட்டி எழுப்பினார் சாக்ரடீஸ்...!


எதையும் பகுத்தறிவு கொண்டு சிந்திக்கச் சொன்னார் தந்தை பெரியார்...!


இதே சிந்தனையை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தூண்டுகிறார் வள்ளுவர்...!


எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் 

மெய்ப்பொருள் காண்பதறிவு . (- 423)


யார் எதைச் சொன்னாலும் அதன் உண்மைப் பொருள் அறிவதே அறிவாகும்...


*ஆம் நண்பர்களே...!*


*⚫ ஏன்...? எதற்கு...? எப்படி...? என்ற கேள்விகளை விஞ்ஞானிகள்,* *சிந்தனையாளர்கள் ,*

*தலைவர்கள் கேட்டதால் தான், மனித குலம் ஆயிரம் ஆயிரம் கண்டுபிடிப்புகளைப் பெற்றன...!*


*புரட்சிகள் வெடித்து உரிமைகள் கிடைத்தன...!*


*கண்மூடிப் பழக்கங்கள் மண் மூடிப்போனதும் மெய்ப்பொருள் காணும் பகுத்தறிவால் மட்டும் தான்...!*


*🔴 மீண்டும்!, உங்கள் முன் எந்தக் கேள்விக்கும், சோதனையான தருணத்திற்கும் மலைத்து போய் நின்று விடாதீர்கள், மாறாக உரக்க உங்களையே கேட்டுக் கொள்ளுங்கள்...!!*


*⚫ ''ஏன்...? எப்படி...? எவ்வாறு...? எதனால்...? ''என்ற இந்த சொற்களைப் பயன்படுத்தி உங்களை நீங்களே கேள்விகளைக் கேட்டுக் கொள்ளுங்கள்...!!!*


*கேள்வி கேட்பது மூலமாகத் தான் நம்மை நாமே வளர்த்துக் கொள்ள முடியும். கேள்வி கேட்பது நம்முடைய பிறப்புரிமையாக இருக்க வேண்டும்...!*



Comments

  1. TRT EXAM MARK

    +
    D.T.ED OR B.ED EMPLOYMENT SENIORITY MARK (Paper1 or Paper2)
    +
    2013,2017,2019 TET PASS YEAR SENIORITY MARK

    இந்த மூன்றையும் கணக்கில் கொண்டு அதிக மதிப்பெண் அடிப்படையில் பணிநியமனம் செய்தால் யாருக்கும் பிரச்சினை இருக்காது
    இதை அனைவரும் ஏற்றுக்கொள்வார்களா?
    என் கருத்து சரியா?
    இது சரி என்றால் TRB பார்வைக்கு கொண்டு செல்லலாமா?

    நாம் அனைவரும் ஒருமித்த கருத்துக்கு வர வேண்டும். ஒற்றுமையுடன் எதிர்கொண்டு திறமையுள்ளவர்கள் பணியை பெற முயற்சி செய்ய வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. Good method no one not affect by this method please proceed

      Delete
    2. 35 வயதுக்கு குறைந்த தற்போது படித்ததால் உங்கள் நலன் கருதி சொல்லி உள்ளீர்கள் .பி.எட் படித்து 35வயது கடந்த tet pass ஆனவர்கள் நிலை
      எம்பிளாயிமென்ட் சீனியாரிட்டி +டெட் பாஸ் சிறந்த முறை

      Delete
    3. Tet mark is very important sir atha condippa consider pannanum neenga soldra mari panna mudiyatha

      Delete
    4. Muniyappan sir unga major and mark enna sir kindly reply me sir

      Delete
    5. Paper 1
      2013-92
      2017-104
      2019-88

      Delete
    6. TET பாஸ் மற்றும் EMPLOYMENT SENIORITY

      என்றால் அதை அனைவரும் அரசுக்கு வலியுறுத்த வேண்டும் .
      காலம் செல்கிறது உடன் நம்பிக்கையும் !
      ஒரு முடிவை விரைந்து எடுக்க வேண்டும் .
      அதற்கு அனைவரும் உடன்பட வேண்டும் .

      Delete
    7. Tet pass mattum pothum
      na mark ethukku tet mark +b.ed seniority+passed year is very best method

      Delete
    8. Muniyappan sir your method is very nice. Best to everyone.

      Delete
  2. ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றிப்பெற்று பணி நியமனம் செய்யப்படாமல் பல ஆண்டுகளாகக் காத்திருப்பவர்களுக்கு உடனடியாகப் பணியாணை வழங்க வேண்டுமெனவும், ஆசிரியர் பணி நியமனத்துக்கான வயது வரம்பை 40 லிருந்து 57 ஆக மீண்டும் உயர்த்த வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழக அரசை வலியுறுத்துகிறேன்" இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    ReplyDelete
  3. கொரோனா ஊரடங்கு காரணமாக வருமானமின்றித் தவிக்கும் தனியார் பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் துயர்துடைப்பு நிதி வழங்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தி உள்ளார். கொரோனா பரவல் காரணமாக அனைத்துப்பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளதால் அவற்றில் பணிபுரிந்த இலட்சக்கணக்கான ஆசிரியர்கள் வருமானமின்றித் தவித்து வருவதும், தனியார் பள்ளிகள் முழுவதுமாகக் கைவிட்ட நிலையில் தமிழக அரசும் அவர்களைக் கண்டுகொள்ளாதிருப்பதும் மிகுந்த வேதனையைத் தருகிறது. ஊரடங்கு போடப்பட்ட கடந்தாண்டிலிருந்து அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு முழுச்சம்பளமும் வழங்கப்பட்டு வரும் நிலையில், பல தனியார் பள்ளிகளோ ஐம்பது விழுக்காடு ஆசிரியர்களை மட்டுமே பணிக்கு அமர்த்தி, அவர்களுக்கும் மிகக்குறைவான ஊதியத்தையே வழங்கி வருகின்றன. நீட்: அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு மசோதாவை நீர்த்துப்போக செய்யலாமா- மு.க ஸ்டாலின் அடிப்படை தேவை இதனால், தனியார் பள்ளி ஆசிரியர்கள் செய்வதறியாத நிலையில் வேறு வேலையின்றி, வருமானத்திற்கு வேறு வாய்ப்பின்றி மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மேலும், தங்கள் குடும்பத்தின் அடிப்படைத் தேவைகளைகூட நிறைவேற்ற முடியாத இயலாமை நிலை காரணமாக மனவுளைச்சலுக்குள்ளாகி, வாழ்விற்கும் சாவிற்கும் இடையே போராடிவருகிறார்கள். அரசுக்கு வேண்டுகோள் ஆகவே, வாழ்வாதாரத்தை இழந்து வறுமையில் உழலும் இலட்சக்கணக்கான தனியார் பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்களுக்கு தற்காலிகத் துயர்துடைப்பு நிதியாக ரூபாய் பத்தாயிரம் ரூபாயை உடனடியாக வழங்க வேண்டுமென தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன். தனியார் பள்ளிக்கு உத்தரவு மாணவர்களுக்கு எவ்விதச் சலுகையும் காட்டாமல் முழுக்கட்டணத்தையும் வசூலிக்கும் தனியார் பள்ளிகள், அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்கப்படுவதுபோல முழுமையான சம்பளத்தையும் வழங்க முடியாவிடினும் குறைந்தப்பட்சமாக அவர்களது வாழ்வாதாரத்தைப் பேணுகிற வகையில் 50 விழுக்காடு ஊதியத்தையாவது தங்கள் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டியது பேரவசியமென்பதை உணர்ந்து அதனைச் செயலாற்ற தனியார் பள்ளிகளுக்கு உத்தரவிட வேண்டுமென அரசைக் கேட்டுக்கொள்கிறேன்
    ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றிப்பெற்று பணி நியமனம் செய்யப்படாமல் பல ஆண்டுகளாகக் காத்திருப்பவர்களுக்கு உடனடியாகப் பணியாணை வழங்க வேண்டுமெனவும், ஆசிரியர் பணி நியமனத்துக்கான வயது வரம்பை 40 லிருந்து 57 ஆக மீண்டும் உயர்த்த வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழக அரசை வலியுறுத்துகிறேன்" இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    ReplyDelete
  4. Posting podave illa but lot of suggestion and discussion pls bro and sister amaithiya irunga govt known how to fill the vacancy ok pls pls ethum solli confuse pannatheenga innum 6month ku entha posting kum illa ithu sathiyam ok va

    ReplyDelete
    Replies
    1. Sir after six monthna 2013 tet will be expired

      Delete
    2. Tet 2013 ku expired agathu bcos ncrte life time nu solli iruku

      Delete
    3. Sir neenga updatelaye illa.
      Coming tet onwards lifetime validity

      Delete
  5. Coming September tet certificate will expiry

    ReplyDelete
  6. 2013 ku lifetime validity as of now applicable illa.. Adhu legal opinion ku apuram dhan theriyum, adhuku endha steps yum edukapadala..

    ReplyDelete
    Replies
    1. S Mam. Ithuku minnadi porattam panni posting poda vidama pannathu 2013 thaa. Ippa vanthu validity mudiya poguthuna yaarum onnu pana mudiyathu.

      Delete
    2. Hello sadha summa 2013 nu Kathai alakatheenga govt podanum nu think pannave illa 2013 la nadantha kootha lam maranthutu pesatheenga ok VA night oda night ah posting poda therintha govt ku case lam oru matter eh illa ok summa 2013 than karanam nu Kathai alanthutu irukatheenga .inga yarukum Vera exam pass panni velai vanga thuppu illa ennayum serthu than solren.nammala Mari muttal engeyum Iruka mattanga Vera exam pass panni velai poi iruntha niraiya moneny and experience kidaithu irukum pls loose the word

      Delete
    3. Pls don't loose the word ok VA sadha

      Delete
    4. Enaku age romba kammi thaa. Enala vaera exam pass panni jobku poga mudium. Unna mathiri thuppu illama illa. Nee ellam oru teacher? Un students ku poi ippdi paesanunu solli kudu. Velangidum

      Delete
  7. Amam yethavathu kolithi podunga

    ReplyDelete
  8. This is not the place for u to tease ladies, mind it..

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

❤️❤️❤️❤️

₹ நாளை என்பதே நமக்கு உறுதியில்லை... நாளும் அது புரிவதில்லை. ₹ இரண்டு வயது ஆவதற்குள் நாம் பேச கற்றுக்கொள்கிறோம்... ஆனால் எத்தனை வயது ஆனாலும், “எப்படி பேச வேண்டும்” என்பதை நாம் கற்றுக்கொள்வதில்லை...! ₹ நாம் சந்திக்கும் ஒவ்வொரு நபர்களும் வெவ்வேறு விதமான போராட்டக் களத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் ... ₹ நம்மில் பெரும்பாலானோர், சுய ஆர்வம் கொண்டு நீந்த கற்றுக் கொண்டதை விட இன்னொருவர் தள்ளி விட்டதன் மூலம் நீந்த கற்றுக் கொண்டவர்களே அதிகம் .... ₹ வாழும் நாட்களில் சந்தோஷத்தையும், மனஅமைதியையும் தேடுங்கள் ... மனிதனுடைய வாழ்நாள் தேவைகள், ஒரு போதும் தீர்ந்துவிடப்போவதில்லை ₹ அன்பை வெளிப்படுத்த தயக்கம் இருப்பது போலவே ... இந்த கோபத்தை வெளிப்படுத்தவும் இருந்து விட்டால் எத்தனை நன்றாக இருந்துவிடும்? ₹ சில பிள்ளைகளுக்கு 25 ஆண்டுகள் தகப்பனின் வருமானத்தில் தான் வாழ்ந்தோம் என்பது மறந்து போகிறது ... 15 ஆண்டுகள் நம் வருமானத்தில் வாழ்கிறார்கள் என்பது மட்டும் நன்றாக நினைவிலிருக்கிறது. ₹ கெட்ட உள்நோக்கத்துடன் கூறப்படும் உண்மை, ஆயிரம் பொய்களைவிட மோசமானது! ₹ வேலை இல்லாதவனின் பகலும், நோயாளியின் இரவும் மிக நீளமானவை

PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

  PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசு / நகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும் 01.08 . அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பணியாளர் நிர்ணயம் ( Staff Fixation ) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் பார்வையில் காணும் அரசாணைகளை பின்பற்றி இக்கல்வியாண்டிற்கு ( 2022-23 ) 01.08.2022 அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின்படி பட்டதாரி / முதுகலை ஆசிரியர்கள் பணியிடம் ( BT & PG_Staff Fixation ) நிர்ணயம் செய்தல் சார்பான பணிகள் மேற்கொள்ளப்படவிருக்கிறது. இப்பணியினை மேற்கொள்ள ஏதுவாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக பணியாளர்களுக்கு ஒரு சில அறிவுரைகள் மற்றும் எவ்வாறு கணக்கீடு செய்து நிர்ணயம் செய்தல் போன்ற விவரங்களை உரிய அதுவலர்களால் கீழ்க்கண்ட நிலவரப்படி வழங்கப்படவிருக்கிறது.

COMPETITIVE EXAM FOR TET PASSED CANDIDATES - 2024

UGTRB - Teachers Recruitment Notification -pdf தமிழ்நாடு அரசு பள்ளிகளில் மற்றும் வட்டாரவளமையங்களில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் BRTE பணியிடங்களுக்கான UGTRB தேர்வு அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. 👉தமிழ்வழி இட ஒதுக்கீடு 20%  👉பணியில் இருக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 10% ஒதுக்கீடு  (NOC compulsory)  👉மாற்றுத்திறனாளிகள்  👉மூன்றாம் பாலினத்தவர் 👉69% Reservation  என அனைத்து ஒதுக்கீடு நடைமுறைகளும் முறையாக பின்பற்றப்படும்.  👉 காலிப்பணியிடங்கள் -2222 👉கல்வித்தகுதி -       BED + TNTET PAPER -2 Pass   👉விண்ணப்பம் - Online 01.11.2023 முதல் 30.11.2023 வரை  👉தேர்வு - Offline - OMR BASED  👉weightage Mark - உண்டு TET தேர்ச்சி பெற்ற ஆண்டின் அடிப்படையில் மதிப்பெண்.  ( விவரம் Notification)   As per G.O- 147 👉 கட்டாயத்தமிழ் தகுதித்தேர்வு - உண்டு  👉பாடவாரியாக தேர்வு உண்டு  👉150 கேள்வி - 150 மதிப்பெண்  👉 OC - 60 Mark தேர்ச்சி  👉BC/MBC/ DNC/ SC/ST - 40 MARK தேர்ச்சி  👉சான்றிதழ் சரிபார்ப்பு - உண்டு Notification in pdf-  Click Here