Skip to main content

இன்றைய சிந்தனை..

நம் வீடுகளில் சேரும் குப்பைகளைப் போலவே நமது மனங்களிலும் குப்பைகள்  சேருகின்றன. நம் வீட்டுக் குப்பைகளை இரண்டு விதமாகப் பிரிக்கலாம். அதாவது ஈரப்பதம் உள்ள அழுகும் தன்மையுள்ள குப்பைகள்; இரண்டாவது உலர்ந்து சருகாகும் குப்பைகள்.


இதைப்போல நம் மனங்களில் சேரும் குப்பைகளையும் இரண்டுவிதமாகப் பிரிக்கலாம். வெறுப்பு, பொறாமை, தவறான எண்ணங்கள், உடலுக்குக் கேடு விளைவிக்கும் உணர்வுகள் போன்றவை அழுகும் தன்மையுள்ள குப்பைகள்; வருத்தம், வலி, காயப்பட்ட உணர்வு, எப்போதே செய்த தவறுகள் இவை உலர்ந்த குப்பைகள்.


கடந்த காலம் என்பது தூசி போல. எத்தனை நாட்கள் அவற்றை சேகரிப்பீர்கள்? தூசியை சேகரிப்பதால் என்ன நன்மை? மனதில் ஏற்படும் வலிகள், காலப்போக்கில் மறந்து அப்புறம் மரத்துப் போய்த் தழும்புகள் ஆகி விடுகின்றன. எத்தனை காலம் அந்தத் தழும்புகளை அலங்கரித்துப் பார்ப்பீர்கள்?


இவற்றிலிருந்து விடுபட்டு அல்லது உங்களை துண்டித்துக்கொண்டு நிகழ் காலத்திற்கு வர வேண்டும் – இரண்டு காரணங்களுக்காக.


முதல் காரணம் உங்கள் உடல் நலமாக இருக்க. இரண்டாவது காரணம் நம் மனநலம் நல்ல முறையில் இயங்க! மன நலம் சரியாக இருந்தாலே உடல் நலம் நன்றாக இருக்கும். 99 சதவிகித உடல் நலக்குறைவு மனதில் ஏற்படுவதுதான். உள்ளம் சுத்தமாக இருந்தால் உடலும் நோய்நொடி இல்லாமல் இருக்கும்.


நம் மனதில் ஏற்படும் பழி வாங்கும் எண்ணம், ஆறின பழைய புண்களை கீறிப் பார்ப்பது, மறந்து போன வலிகளை நினைவு படுத்திக்கொள்வது போன்ற செயல்கள் நமக்குக் கோபத்தையும், விரக்தியையும் உண்டாக்குகின்றன. இவையே  நம் உடல் நலமின்மைக்குக் காரணங்கள். உடல் நலக்குறைவு உள்ளத்தில் இருந்து ஏற்படுவதால், உள்ளத்தை சுத்தம் செய்தால் உடலும் சுத்தமாகும். சுத்தமான உடம்பில் நோய் எங்கே இடம்?


வீட்டு வைத்தியத்தைப் பலரும் விரும்புவார்கள். ஏனெனில் பக்க விளைவுகள் இல்லாதது. உடல் சுத்தம் ஆக சோப் பயன்படுத்துகிறோம். உள்ளத்தின் சுத்தத்திற்கு சோப் உண்டா?


அதுதான் மன அழுக்குகளை அல்லது குப்பைகளை அகற்றுவது. இதை மிக சுலபமாக செய்ய ஒரு வீட்டு வைத்தியம்  உண்டு. அது மன்னிப்பது.


சில சமூகங்களில் ஒவ்வொரு வருடமும் மன்னிப்புக் கடிதம் எழுதும் பழக்கம் உண்டு. உங்களுக்கு தீங்கு செய்தவர்களை, காயப்படுத்தியவர்களை, வலி உண்டாக்கியவர்களை மன்னித்துக் கடிதம் எழுதுவது. கடந்த காலத்திலிருந்து உங்களை முழுமையாக விடுவித்துக்கொண்டு நிகழ் காலத்தில் அமைதியும், மன ஒற்றுமையும் உருவாக எதிர்காலம் நல்ல விதமாக அமைய எழுதுவது இந்த மன்னிப்புக் கடிதம். இது நம் மனதை தூய்மை ஆக்கும்.


இன்னொரு முறை தீப ஒளியின் முன் மௌனமாக உட்கார்ந்து கொண்டு உங்களை அவமானப்படுத்தியவர்களை, தாழ்த்திப் பேசியவர்களை, உங்களைப் பற்றி அவதூறு சொன்னவர்களை, காயப்படுத்தியவர்களை மன்னித்துவிடுங்கள். இதையும் நீங்கள் மூன்று விதமாகச் செய்யலாம்:


முதலில் அவர்களுக்காக வாய் வார்த்தை மூலம் மன்னிப்பது:


இரண்டாவதாக அவர்களைப் பற்றி நல்லவிதமாக சிந்திப்பது;


மூன்றாவதாக அவர்களுக்கு ஏதாவது நல்லது செய்யுங்கள். அவர்களுக்கு ஒரு பரிசு அனுப்புங்கள்; அல்லது அவர்களை வெளியே அழைத்துப் போய் காபி வாங்கிக் கொடுங்கள். அவர்களை அப்படியே ஏற்றுக்கொள்ளுங்கள்.


கடைசியாக உங்களை நீங்கள் மன்னியுங்கள். நம் மேலேயே நமக்கு பல சமயங்களில் கோபம் வருகிறது, இல்லையா? அது மட்டுமல்ல, நாம் எத்தனை பேரை அவமானப்படுத்தி இருக்கிறோம்; துன்புறுத்தி இருக்கிறோம். நாவினால் சுட்டிருக்கிறோம்; நாவினால் சுட்ட வடு ஆறுமா?


அதேபோல மரம், செடிகொடிகள், பறவைகள், மிருகங்கள் என்று எல்லாவற்றிடமும் மன்னிப்புக் கேளுங்கள்.


மன்னிப்பு நம் மனதில் இருக்கும் சுமையை களைகிறது.  மனதில் சேர்ந்து இருக்கும் குப்பைகள் அகன்றால் தான் அங்கு புதிய எண்ணங்களுக்கு இடம் ஏற்படும். மன்னிப்பு என்பது தேவையில்லாத எப்போதோ நடந்த துயரங்களை துடைத்தெறியும் அழிப்பான். மன்னிப்பின் மூலம் பழைய கெட்ட நினைவுகள் அகன்று, புதிய பிரகாசமான எதிர்காலம் உருவாகும்.


பிறரை மன்னிப்பது அத்தனை சுலபமா? நல்ல கேள்வி! உடல்நலம் சரியில்லை என்றால் மருத்துவர் கொடுக்கும் மருந்துகளை –விலை  உயர்ந்ததாக இருந்தாலும் தயங்காமல் வாங்கி, கசப்பாக இருந்தாலும் சகித்துக் கொண்டு விழுங்குகிறோம் அல்லவா?


மன்னிப்பு என்னும் மருந்து முதலில் கசப்பாக இருந்தாலும், நம் மன நிலையில் மிகச்சிறந்த மாற்றத்தை கொடுக்கும் என்பதால் விலை மதிப்பில்லாத இதனை முயற்சி செய்யலாம், கொஞ்சம் கொஞ்சமாக!



🥀🌷🥀🌷


Comments

  1. Gudmrng friends, brothers and sisters.. Have a blessed day ahead..

    ReplyDelete
  2. வணக்கம் அட்மின் மேடம்

    ReplyDelete
  3. Trb பண்ண எதையும் மன்னிக்க முடியாது 😔😔😔😔😔😔

    ReplyDelete
  4. Madam one doubt BC and BCM ku backlog vaccancy kidayatha.. In 2017 so many vaccancies in tamil and chemistry not filled....But in 2019 Backlog only given by MBC, SC, ST But BC KU Backlog illa anybody please clarify the doubt.,Reply

    ReplyDelete
    Replies
    1. Ella category kkum backlog vacancies undu, maximum mark criteria reach agara alavukku candidates illana andha vacancies backlog la poi adutha exam ku dhan add agum..

      Delete
    2. This comment has been removed by a blog administrator.

      Delete
    3. This comment has been removed by a blog administrator.

      Delete
    4. பூச்சாண்டி கட்ர வேலை நம்மகிட்ட செல்லாது

      Delete
    5. நீ தான் பூச்சாண்டி காட்டி அசிங்கப்பட்டு நிக்கற அவங்க இல்ல

      Delete
    6. SK poochandi whatsapp groupla vachuko

      Delete
    7. Sk -ஓ அவனா நீ

      Delete
    8. Sk you first clean your backyard properly.

      Delete
  5. Respected madam... Pgtrb apply panna next month vaippu iruka... Exam late aguma...?

    ReplyDelete
    Replies
    1. Respected Sir/Mam..

      Next month ellam clear pannitu application process nichayama start paniduvanga, new government kaga dhan waiting ipo.. Court la file aana case ellam dispose agidum.. Onnu Renotification with age relaxation varum or adhey notification la application start agum..

      Number of vacancies increase aga chances irukku..

      Delete
    2. 1000℅நிச்சயம் தேர்வு நடக்காது

      Delete
    3. நன்றி அட்மின் மேம்

      Delete
  6. 100000000000000000000000%
    Second list varathu😁

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

❤️❤️❤️❤️

₹ நாளை என்பதே நமக்கு உறுதியில்லை... நாளும் அது புரிவதில்லை. ₹ இரண்டு வயது ஆவதற்குள் நாம் பேச கற்றுக்கொள்கிறோம்... ஆனால் எத்தனை வயது ஆனாலும், “எப்படி பேச வேண்டும்” என்பதை நாம் கற்றுக்கொள்வதில்லை...! ₹ நாம் சந்திக்கும் ஒவ்வொரு நபர்களும் வெவ்வேறு விதமான போராட்டக் களத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் ... ₹ நம்மில் பெரும்பாலானோர், சுய ஆர்வம் கொண்டு நீந்த கற்றுக் கொண்டதை விட இன்னொருவர் தள்ளி விட்டதன் மூலம் நீந்த கற்றுக் கொண்டவர்களே அதிகம் .... ₹ வாழும் நாட்களில் சந்தோஷத்தையும், மனஅமைதியையும் தேடுங்கள் ... மனிதனுடைய வாழ்நாள் தேவைகள், ஒரு போதும் தீர்ந்துவிடப்போவதில்லை ₹ அன்பை வெளிப்படுத்த தயக்கம் இருப்பது போலவே ... இந்த கோபத்தை வெளிப்படுத்தவும் இருந்து விட்டால் எத்தனை நன்றாக இருந்துவிடும்? ₹ சில பிள்ளைகளுக்கு 25 ஆண்டுகள் தகப்பனின் வருமானத்தில் தான் வாழ்ந்தோம் என்பது மறந்து போகிறது ... 15 ஆண்டுகள் நம் வருமானத்தில் வாழ்கிறார்கள் என்பது மட்டும் நன்றாக நினைவிலிருக்கிறது. ₹ கெட்ட உள்நோக்கத்துடன் கூறப்படும் உண்மை, ஆயிரம் பொய்களைவிட மோசமானது! ₹ வேலை இல்லாதவனின் பகலும், நோயாளியின் இரவும் மிக நீளமானவை

COMPETITIVE EXAM FOR TET PASSED CANDIDATES - 2024

UGTRB - Teachers Recruitment Notification -pdf தமிழ்நாடு அரசு பள்ளிகளில் மற்றும் வட்டாரவளமையங்களில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் BRTE பணியிடங்களுக்கான UGTRB தேர்வு அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. 👉தமிழ்வழி இட ஒதுக்கீடு 20%  👉பணியில் இருக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 10% ஒதுக்கீடு  (NOC compulsory)  👉மாற்றுத்திறனாளிகள்  👉மூன்றாம் பாலினத்தவர் 👉69% Reservation  என அனைத்து ஒதுக்கீடு நடைமுறைகளும் முறையாக பின்பற்றப்படும்.  👉 காலிப்பணியிடங்கள் -2222 👉கல்வித்தகுதி -       BED + TNTET PAPER -2 Pass   👉விண்ணப்பம் - Online 01.11.2023 முதல் 30.11.2023 வரை  👉தேர்வு - Offline - OMR BASED  👉weightage Mark - உண்டு TET தேர்ச்சி பெற்ற ஆண்டின் அடிப்படையில் மதிப்பெண்.  ( விவரம் Notification)   As per G.O- 147 👉 கட்டாயத்தமிழ் தகுதித்தேர்வு - உண்டு  👉பாடவாரியாக தேர்வு உண்டு  👉150 கேள்வி - 150 மதிப்பெண்  👉 OC - 60 Mark தேர்ச்சி  👉BC/MBC/ DNC/ SC/ST - 40 MARK தேர்ச்சி  👉சான்றிதழ் சரிபார்ப்பு - உண்டு Notification in pdf-  Click Here 

TNTET PAPER2 TAMIL QUESTIONS

This post is for Tamil questions which will include Cheyyul, Urainadai, Ilakkanam and also book back informations.. Anybody willing to post tamil questions can post here and candidates preparing for upcoming tet can make use of this, All the best..