தேர்வுகளில் தொடர்ந்து குளறுபடி : டிஆர்பி தலைவர்களாக இருந்த 9 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு கட்டாய பணி ஒய்வு தர பரிந்துரை!!
தமிழகத்தில் 9 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு கட்டாய பணி ஒய்வு தர தலைமை செயலாளருக்கு மாநில தகவல் ஆணையர் பரிந்துரைத்துள்ளார். ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர்களாக இருந்த 9 ஐஏஎஸ் அதிகாரிகளை கட்டாய ஓய்வில் அனுப்ப பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. 2011-2020 வரை நடைபெற்ற உதவிப் பேராசிரியர், முதுகலை ஆசிரியர் தேர்வுகளில் குளறுபடி நடந்துள்ளதாக கூறப்படுகிறது.
உதவிப் பேராசிரியர் தேர்வில் சரியான விடை அளித்தவர்களுக்கு மதிப்பெண் வழங்காமல் அலைக்கழித்தல், கேள்வித்தாள் வடிவமைப்பில் குளறுபடி, தேர்வர்களின் புகார் மீது நடவடிக்கை எடுக்காதிருத்தல் உள்ளிட்ட குற்றம்சாட்டுகள் ஐஏஎஸ் அதிகாரிகள் மீது முன்வைக்கப்படுகிறது.
இதைத் தொடர்ந்து, தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தேர்வுகளில் வெளிப்படைத் தன்மை இல்லை என்றும் ஒரே தவறு திரும்பப் திரும்பப் நடந்து இருப்பதால் 2011-2020 வரை ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர்களாக இருந்த 9 ஐஏஎஸ் அதிகாரிகளை கட்டாய பணி ஓய்வில் அனுப்ப பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
சுர்ஜித் கே. சவுத்ரி, விபு நாயர், காக்கர்கலா உஷா, ஜெகன் நாதன், ஸ்ரீனிவாசன், நந்தகுமார், ஜெயந்தி, வெங்கடேஷ், லதா ஆகிய 9 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க தகவல் ஆணையர் தலைமை செயலாளருக்கு பரிந்துரை அனுப்பியுள்ளார்.மாநில தகவல் ஆணையர் பரிந்துரை பேரில் தலைமைச் செயலாளர் ஓரிரு நாளில் நடவடிக்கை எடுக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.புகாருக்கு ஆளான 9 ஐஏஎஸ் அதிகாரிகளில் சுர்ஜித், விபு நாயர் தவிர 7 பேர் தற்போது பணியில் உள்ளனர்.
- Get link
- X
- Other Apps
- Get link
- X
- Other Apps
Jan ketta piraku sooriya namashkaram ethana peroda vazhkaiya azhithutu ippo than puthi vanthatha
ReplyDeleteRightly said
DeleteSorry Kan ketta piragu
ReplyDeleteBetter close the board completely
ReplyDeleteபொ௫ந்தி௫கங்கள் திண்டுக்கல்லில் இ௫ந்து பூட்டு வந்துகொன்டி௫கக்கிிறது விரைவில் பூட்டபபப்படும்
Deleteவணக்கம் டிஆர்பி நடத்தும் முதுகலை ஆசிரியர்கள் தேர்வு முறை பற்றி பெரிதாக குறை சொல்வதற்கு ஒன்றுமில்லை சில நேரங்களில் கேள்விகள் கடினமாக இருக்க வேண்டும் என்பதற்காக பாடத்தை விட்டு விலகிவினாக்கள் கேட்கப்பட்டு இருக்கும் அவ்வளவுதான் ஆனால் டெட் தேர்வு வினாத்தாள் அமைப்பில் குறை உள்ளது என்பதை சிந்திக்க வேண்டும் தமிழ் ஆசிரியரை தேர்வு செய்யும் டெட் தேர்வு வினாத்தாளில் ஆங்கிலத்தில் இருந்து 30 கேள்விகள் சமூக அறிவியலில் இருந்து 30 கேள்விகள் ஆனால் தமிழ் பாடத்திலிருந்து 30 கேள்விகள் மட்டும் தான் இதேபோல்தான் ஆங்கில ஆசிரியரை தேர்வு செய்யும் டெட் தேர்வு வினாத்தாளில் ஆங்கில பாடத்திற்கு 30 மதிப்பெண்கள் தான் கல்வியல் பாடத்திற்கு 30 மதிப்பெண்கள் அது பற்றிப் பிரச்சினை இல்லை ஆனால் தமிழ் பாடத்தில் 30 வினாக்களும் சமூக அறிவியலில் 30 வினாக்கள் கேட்பது எவ்வகையில் சரியாகும் அறிவியல் ஆசிரியர்களின் நிலைமை இன்னும் மோசம் 150 வினாக்கள் கொண்ட ஒரு டெட் தேர்வு வினாத்தாளில் பிஎஸ்சி இயற்பியல் படித்த ஒரு ஆசிரியர் 15 வினாக்கள் மட்டுமே இயற்பியல் பாடத்தில் இருந்து பதில் அளிக்கிறார் அறிவியல் பாடத்தில் 30 வினாக்கள் போக மீதி அனைத்துமே தமிழ் ஆங்கிலம் கணிதம் போன்ற பாடங்களில் இருந்து கேட்கப்படுகின்றன அறிவியல் ஆசிரியரை
ReplyDeleteதேர்வு செய்யக்கூடியவினாத்தாளில் அறிவியலில் இருந்து 15 அல்லது 20 வினாக்கள் மட்டுமே ஆனால் மற்ற பாடங்களில் அதிகமான கேள்விகள் அறிவியல் ஆசிரியராக தேர்வு பெற்ற பின்னர் பள்ளியில் அறிவியல் பாடத்தில் மட்டுமே கற்பிக்கிறார் அவருக்கு ஏன் தமிழ் ஆங்கிலம் கணிதம் பாடங்களில் இருந்து அதிகப்படியான வினாக்களை கேட்க வேண்டும்? இதே போல் தான் மற்ற அனைத்து மேஜர் பாடங்களுக்கும் வினாத்தாள் அமைப்பில் குளறுபடிகள் உள்ளன இவை சரிசெய்யப்பட வேண்டும் என்பது என்னுடைய கருத்து இதற்காக நீதிமன்றம் வரை சென்றுவழக்கு தொடுத்து உள்ளேன் என்பதை இந்த நேரத்தில் பதிவு செய்கின்றேன் மேலும் டிஆர்பி வழக்கறிஞர்களால் இந்த வழக்கு முடிக்கப்பட்டது என்பதே உண்மை
PG TRB 2021
ReplyDeleteMaths Coaching Classes
Weekdays Evening Batch
Weekend Classes
Test Series batch
PG TRB Maths
Complex Analysis live online class Recorded Original Clear video link:
Press the link please
https://youtu.be/oLBkxcLoqQc
Magic Plus Coaching Center, Erode-1.
For admission Contact:
9976986679,
6380727953
இந்த ஒன்பது அதிமேதாவி திருட்டு நாய்கள் செய்தது.
ReplyDelete1)2017 ஆம் ஆண்டு Pg Trb தேர்வை கடுமையாக்கி பல பேரை தேர்ச்சி அடையாமல் வைத்தது.
2) 2017 வரை பின்பற்றி வந்த employment seniority mark and Teaching experience mark ஐ நீக்கி 2019 ஆம் ஆண்டு தேர்வு எழுதி நுனி முனையில் இருந்தவர்களுக்கு வேலை இல்லாமல் செய்தது.
3) 2017 ல் பின்னடைவு பணியிடங்களாக BC க்கு உண்டான பணியிடங்களை 2019 ல் ஏற்படுத்தப்பட்ட பணியிடங்களோடு சேர்க்காமல் முழுங்கியது.
4) 2019 ல் தேர்ச்சி பெற்ற அனைத்து பாடங்களுக்கும் குழப்பமான தேர்வர் பட்டியலை வெளியிட்டது.
5) தகுதியில்லாத நபர்களிடம் வினாத்தாளை அமைக்க அவர்களை நிர்ணயித்தது.
6) இதுவரை 58 வயது வரை தேர்விற்கு appply செய்து வந்த நேரத்தில், 2021 ல் 40, 45 வயதிற்கு மேல் யாரும் தேர்வு எழுத முடியாது என்று என்றாவது ஒரு நாள் வெல்வோம் என்ற தேர்வர்களின் வாழ்க்கையில் மண்ணை அள்ளிப் போட்டது.
7) அறிவித்தபடி 2021 மார்ச் 1 ல் சொத்தை காரணங்களை காட்டி, online portal திறவாதபடி நீதிமன்ற வழக்குகளால் விழி பிதிங்கிய நிலை.
-- இவை அனைத்தும் இவர்கள் செய்த சாதனைகளே( வேதனைகளே).