Skip to main content

இரக்கம் கொள்ளுங்கள்..


இரக்கமில்லாதவர்களை நாம் மனிதர்கள் என்று சொல்ல முடியுமா...? இரக்கமே!, ஒரு மனிதனை நாகரிகமானவன் ஆக்குகிறது...


மனிதர்கள் கொண்ட கருணையே அவர்களைப் பண்பாடுடையவர்களாய் மாற்றுகிறது. அனைவரும் அடுத்தவர்மேல் இரக்கத்தோடு இருப்பார்கள் என்றால் பிறகு உலகில் சண்டைகள் ஏது...? சச்சரவுகள் ஏது...? 


மனம் மென்மைப்படும் போது இரக்க உணர்வு தானாய் மனத்தில் எழுகிறது. ஆதிமனிதன் நாகரிகம் அடைந்ததன் வெளிப்பாடுதான் அவனது இரக்க உணர்வு...


அது கடுமையான கோடைக்காலம். கொளுத்தும் வெயிலில் ஒரு வழிப்போக்கர் நடந்து கொண்டிருந்தார், வெயிலின் கடுமையை அவரால் தாள முடிய வில்லை...


இறுதியில் தண்ணீர் உள்ள ஒரு கிணறையும் கண்டு பிடித்துவிட்டார். ஆனால்!, தண்ணீர்' கிணற்றின் ஆழத்தில் இருந்தது. அத்துடன் நீரை இறைக்க வாளியோ, கயிறோ எதுவும் இல்லை...


கடைசியில், வேறு வழியில்லாமல் மிகவும் சிரமப்பட்டு கிணற்றில் இறங்கினார். உள்ளே வெயிலின் கடுமை இல்லை. தண்ணீரும் குளிர்ச்சியாக இருந்தது...


இரு கரங்களால் தண்ணீரை அள்ளி தாகம் தீரக் குடித்தார். அதன் பிறகுதான் அவருக்கு உடலில் வலிமை பிறந்தது. கிணற்றிலிருந்து வெளியே வந்தார்...


கிணற்றின் பக்கத்தில் ஒரு நாய் நின்றிருந்தது. வெயிலின் கொடுமையை தாங்க முடியாமல் நாவினைத் தொங்கப் போட்டு மூச்சிரைக்கத் தவித்துக் கொண்டிருந்தது...


கிணற்றைச் சுற்றியிருந்த மணலைக் கால்களால் பிராண்டியது. மணலின் அடிப்பகுதியில் இருந்த ஈரத்தை நக்கியது. தாகம் அடங்காமல் பலவீனமான குரலில் முனகியது...


இந்தக் காட்சியைக் கண்டதும் வழிப்போக்கரின் உள்ளம் இளகிவிட்டது. “அய்யோ பாவம்! வாயில்லாத ஜீவன்! தண்ணீர் தாகத்தால் தவித்துக் கொண்டு இருக்கிறது. இன்னும் கொஞ்சம் நேரத்தில் தண்ணீர் கிடைக்கா விட்டால் நாய் உறுதியாக இறந்துவிடும்!” என்று கருதினார்...


நாயை இரக்கத்துடன் பார்த்தார். கிணற்றில் மீண்டும் சிரமத்துடன் இறங்கினார். தண்ணீரை மேலே கொண்டுவருவது எப்படியென்று கொஞ்சம் நேரம் ஆலோசித்தார்...


பின்பு ஒரு திட்டத்துடன் காலில் மாட்டியிருந்த தோலால் ஆன காலுறைகளைக் கழற்றினார். இரண்டு காலுறைகள் நிரம்பத் தண்ணீரை நிரப்பினார்...


அவற்றை வாயில் கவ்விக் கொண்டு கிணற்றிலிருந்து மெதுவாக வெளியே வர ஆரம்பித்தார். அது அவ்வளவு எளிதாக இல்லை...


தண்ணீர் நிரம்பிய காலுறை கனத்தது. வாயும், பல்லும் வலித்தது. பேசாமல் முயற்சியைக் கைவிட்டு விடலாமா...? என ஒரு கணம் தோன்றியது...


ஆனால்!, மனக் கண்ணில் தாகத்தால் தவிக்கும் நாய் தெரிந்தது. பெருமுயற்சி எடுத்து ஒருவாறு ஏறி கிணற்றிலிருந்து வெளியே வந்து விட்டார்...


கிணற்றருகே அமர்ந்து, முதல் காலுறை நீரை நாய்க்குப் புகட்டினார். நாய் மகிழ்ச்சியுடன் தண்ணீரை நக்கி நக்கி குடிக்க ஆரம்பித்தது...


உயிரைக் காத்ததற்கு அடையாளமாக நன்றி உணர்ச்சியுடன் வாலை ஆட்டியது. ஒரு சொட்டுத் தண்ணீரையும் மீதம் வைக்காமல் இரண்டு காலுறை நீரையும் அது குடித்து முடித்தது...


அவ்வளவு தாகம் அதற்கு! வழிப்போக்கரின் முகத்தில் புன்னகை மலர்ந்தது. நாயின் தாகத்தைத் தீர்த்த மகிழ்ச்சியுடன் அவர் நடக்க ஆரம்பித்தார்...


*ஆம் நண்பர்களே...!*


🟡 *உங்களிடம் கடுமையாக நடந்து கொள்பவர்களிடமும் கருணையாக இருங்கள். ஒருவர் உங்களிடம் கடுமையான ஏதேனும் பேசினால், `என்னவாயிற்று, உங்கள் நாள் சரியாக அமையவில்லையா...?` என்று கேளுங்கள் நிலைமை அப்படியே மாறி விடும்...!*


🔴 *பிறரால் பெரிதும் கவனிக்கப்படாதவர்களை நீங்கள் கவனியுங்கள். அவர்கள் மீதும் அக்கறை காட்டுங்கள். நீங்கள் ஏதேனும் கோபப்படும்படியான செயல் நடந்தால், ஒரு பெரும் மூச்சை இழுத்துவிட்டு சில விநாடிகள் பொறுமையாக ஆலோசியுங்கள்...!!*


⚫ *அறியாமையில் உழல்பவர்கள், வறுமையில் வாடுபவர்கள், நாளும் ஒரு வாய் சோற்றிற்கு அல்லல் படுபவர்கள், இவர்களிடத்தில் இரக்கம் கொள்ளுங்கள், உங்களால் இயன்றவரை அவர்களுக்கு உதவி செய்யுங்கள். அவர்கள் மீது சுடு சொல் வேண்டாம். உங்கள் உதடுகளை மூடி, இதயங்களைத் திறந்து வையுங்கள்...!!!*


Comments

  1. Gudmrng friends, brothers and sisters.. Have a blessed day ahead..

    ReplyDelete
  2. Good morning sister ☺

    ReplyDelete
  3. Budgetla edhuvum sollalaiya mam?(tet patri)

    ReplyDelete
    Replies
    1. Avanga sollama irukadhey naladhu mam..

      Delete
    2. Budget yen sollanum. ithu (posting poduratha sampanthama)varaikum ethum budget la sonnathey illa puthusa kekureenga

      Delete
    3. Postings irundha adhoda financial allotment pathi solluvanga adhan dhan avanga kekranga..

      Delete
    4. Correcta soneenga mam
      Thank you

      Delete
  4. 110 ல அறிவிப்பு வருமா mam

    ReplyDelete
  5. Budget la solla mattanga education department ku evlo budget athai vaithu than

    ReplyDelete
  6. Tet pass pannatha thavira namma enna pavam panninom ithuku theirvu illaya

    ReplyDelete
  7. Feb 24, dec5, election ippadi daily ethirparthu 8 years venna ponathu enna panrathunu theriyala

    ReplyDelete
  8. Definitely Coming Feb 26 Friday la Trt exam callfor varum...

    Eallarum exam preparation pann ready erunga...

    ReplyDelete
    Replies
    1. Yar sir neenga trt vara vaipu illai bcos govt ke enna panrathu nu theriyala so ethum nadaka thu .election varum then dmk atchiyai kai patra vaipu then oru three month avangalum tet problem eppadi solve pannalam nu yosippanga athukkulla Dec mudinthidum

      Delete
    2. இப்படி தான் pgக்கும் ஒரு குரூப் சொல்லிட்டு இருந்துச்சு

      Delete
  9. Tet enpathu neet yai polave central govt kondu vantha kedu ketta policy .pass panni high mark eduthavan ellam rompa kasta pattutu irukan kammi mark eduthavan 50k salary rompa kodumai.

    ReplyDelete
    Replies
    1. எல்லாம் நம்ம நேரம்

      Delete
  10. Mr.stalin sollrare co operative (dmk atchiyai amaithal)loans are cancelled nu .y tet posting kandippa poduvom nu solla matraru avlo komol nadanthu iruku .rules ah tn govt right ah follow pannala tet ku mattum.ovvoru tet kum ovvoru method use panni posting pottu irukanga so friend yaru next vanthalum posting sudden ah fill panrathu ellam impossible so enna panrathu nu ketta pg trb padinga

    ReplyDelete
  11. Dmk ,Admk both are thiruttu parties y na ivanga makkaluku atchai nadathave illai .katchi and kootalikagave nadatha padukirathu.so evan vanthalum tet pass pannavanga la pathi konjam kooda feel panna mattanga ok va .suppose dmk vanthal atchai kappatra admk enna pannangalo athaiye than seivarkal that mean central govt ku adimaiyaga iruppanga tet pass pannavanga life ah mathi vera velai thedungal .tet posting enbathu puthaikka patta onru

    ReplyDelete
    Replies
    1. Dmk வந்தா ஆட்சியை காப்பாத்த என்ன அவசியம் இருக்க போகுது? ஆனாலும் இவனுங்க யாராயும் நம்ப முடியாது உண்மை தான்

      Delete
    2. எவனையும் நம்ப கூடாது

      Delete

  12. Unknown
    2/23/2021 4:24 pm
    Definitely Coming Feb 26 Friday la Trt exam callfor varum...

    Eallarum exam preparation pann
    ready erunga...


    Unknown நீங்க இது போல 4வாரம் சொல்லி இருக்கீங்க.
    But
    அறிவிப்பு வரல
    உங்க யூகத சொல்ல வேண்டாம்.
    விசாரித்து உண்மைய சொல்லவும்

    (காரணம் நீங்க puthagasalai இல் 2018, ஜூன் இருந்து viewer)
    So you -publish conform news only-not rumors
    Not

    ReplyDelete
    Replies
    1. சூப்பர் வினோ சார்

      Delete
    2. இப்படி ஆளாளுக்கு ஒன்னு சொல்றதே வேலையா போச்சு

      Delete
  13. 110 விதியின் கீழ் பணி நியமனம் தொடர்பான அறிவிப்புகள் வெளிவர அதிகம் வாய்ப்புகள் உள்ளது.

    ReplyDelete
    Replies
    1. இது உண்மையா or assume aha

      Delete
  14. Madam computer science 6 to 10 th vara kondu varatha solranga? Teachers ena qualification la athuku appoint panuvanga any news???

    ReplyDelete
    Replies
    1. Already appointed teachers will get the job.
      ( No new posting )

      Delete
    2. UG level la edhavathu syllabus kondu varuvanga computer pg assistants madhiri..

      Delete
    3. Already appointed concept ellam aided ku dhan porundhum, direct government ku direct posting dhan..

      Delete
    4. Vaaippugal miga kuraivu.

      Delete
  15. Try exam election munnadi vara vaippu kammithan

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

COMPETITIVE EXAM FOR TET PASSED CANDIDATES - 2024

UGTRB - Teachers Recruitment Notification -pdf தமிழ்நாடு அரசு பள்ளிகளில் மற்றும் வட்டாரவளமையங்களில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் BRTE பணியிடங்களுக்கான UGTRB தேர்வு அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. 👉தமிழ்வழி இட ஒதுக்கீடு 20%  👉பணியில் இருக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 10% ஒதுக்கீடு  (NOC compulsory)  👉மாற்றுத்திறனாளிகள்  👉மூன்றாம் பாலினத்தவர் 👉69% Reservation  என அனைத்து ஒதுக்கீடு நடைமுறைகளும் முறையாக பின்பற்றப்படும்.  👉 காலிப்பணியிடங்கள் -2222 👉கல்வித்தகுதி -       BED + TNTET PAPER -2 Pass   👉விண்ணப்பம் - Online 01.11.2023 முதல் 30.11.2023 வரை  👉தேர்வு - Offline - OMR BASED  👉weightage Mark - உண்டு TET தேர்ச்சி பெற்ற ஆண்டின் அடிப்படையில் மதிப்பெண்.  ( விவரம் Notification)   As per G.O- 147 👉 கட்டாயத்தமிழ் தகுதித்தேர்வு - உண்டு  👉பாடவாரியாக தேர்வு உண்டு  👉150 கேள்வி - 150 மதிப்பெண்  👉 OC - 60 Mark தேர்ச்சி  👉BC/MBC/ DNC/ SC/ST - 40 MARK தேர்ச்சி  👉சான்றிதழ் சரிபார்ப்பு - உண்டு Notification in pdf-  Click Here 

TNTET PAPER2 TAMIL QUESTIONS

This post is for Tamil questions which will include Cheyyul, Urainadai, Ilakkanam and also book back informations.. Anybody willing to post tamil questions can post here and candidates preparing for upcoming tet can make use of this, All the best..

TODAY'S THOUGHT..

 மழை! ஓயாத மழை! ஏரி நிறைந்து வழியும் அளவுக்கு மழை.அந்த ஏரி நீர் குளிர்ச்சி அடைந்து விட்டது. அந்தக் குளிரைத் தாங்க முடியாத ஒரு தவளை, மழை ஓய்ந்ததும் சற்று தூரத்திலுள்ள ஒரு கிணற்றுக்கு வந்தது. கிணற்று நீர் வெது வெதுப்பாக இருக்குமே என்பதால் கிணற்றிற்குள் குதித்தது. அந்தக் கிணற்றில் பல காலமாக வாழ்ந்து வந்த தவளைகளில் ஒரு தவளை இந்தப் புதிய தவளையை வரவேற்றது. ‘நான் வெகு நாட்களாகப் பேச்சுத் துணைக்குக்கூட ஆளில்லாமல் தவித்துக் கொண்டிருந்தேன். உன்னைக் கண்டதும் எனக்கு மகிழ்ச்சி’ எனக் கூறிப் பொந்தில் வைத்திருந்த உணவு வகைகளைப் புதிய தவளைக்குத் தந்தது. இரண்டு தவளைகளும் பேசிக் கொண்டிருந்தன. கிணற்றிலிருந்த மற்ற தவளைகளுக்குப் புதிய தவளை வந்தது பிடிக்கவில்லை. ‘இங்கே கிடைக்கும் உணவு நமக்கே போதவில்லை. இதில் புதிய விருந்தாளி வேறு’ எனக் கவலைப்பட்டன. புதிய விருந்தாளியை எப்படியும் துரத்தி விட முடிவு செய்தன. நல்ல சமயம் பார்த்து கொண்டு இருந்தன.இரண்டு தவளைகளும் பேசிக்கொண்டிருப்பதை அருகே சென்று வேடிக்கை பார்த்தன. அப்போது அக்கிணற்றுத் தவளை ஏரித்தவளையிடம், நண்பனே!நீ இத்தனை நாளும் எங்கே தங்கியிருந்தாய்?’ எனக்கேட்டது. ‘