Skip to main content

மாணவர் சேர்க்கை, ஆசிரியர் காலியிடம் பட்டியல் தாக்கல் செய்ய உத்தரவு.


எல்.கே.ஜி., முதல், எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர் சேர்க்கை நிலவரம் உட்பட, 20 வகை பணிகளுக்கான புள்ளி விபர பட்டியலை, நாளைக்குள் தாக்கல் செய்யும் படி, மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு, பள்ளிக் கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.

பள்ளிகள், கல்லுாரிகள் திறக்கப்படவில்லை என்றாலும், மாணவர் சேர்க்கை, கல்வி கட்டணம் வசூலிப்பது, ஆன்லைனில் பாடங்கள் நடத்துவது போன்ற நடவடிக்கைகள் நடைபெறுகின்றன. 

நடவடிக்கை

அதேபோல, அரசு பள்ளிகளின் உள் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது, ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு இடமாறுதல் வழங்குவது போன்றவையும் நடக்கின்றன. 

இந்த வரிசையில், நடப்பு கல்வி ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்தும், பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்தும், 28ம் தேதி, மாநில அளவில் ஆலோசனை கூட்டம் நடக்க உள்ளது. இந்நிலையில், பள்ளிக் கல்வியில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்து, மாவட்ட கல்வி அதிகாரி களிடம் தகவல்களை திரட்டும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எனவே, ஒவ்வொரு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட, வட்டார கல்வி அலுவலர்கள், தங்களின் எல்லைக்கு உட்பட்ட பள்ளிகளில், எல்.கே.ஜி., முதல் எட்டாம் வகுப்பு வரை சேர்த்த, புதிய மாணவர்களின் எண்ணிக்கை குறித்த, புள்ளி விபரம் தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

சுற்றறிக்கை

அதேபோல, ஆசிரியர் காலியிடங்கள், இடிக்க வேண்டிய கட்டடங்களின் நிலை, புதிதாக மழலையர் பள்ளிகள் உருவாக்குதல், அரசு பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புக்கு அனுமதி அளித்தல் போன்றவை உட்பட, 20 வகை விபரங்களை நாளைக்குள் தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.பள்ளிக் கல்வி இயக்குனர் கண்ணப்பன் மற்றும் தொடக்க கல்வி இயக்குனர் பழனிச்சாமி ஆகியோர், இதற்கான சுற்றறிக்கை களை மாவட்ட அதிகாரிகளுக்கு அனுப்பிஉள்ளனர்.

Comments

  1. Every year you are asking but nothing will happen.. Just collecting the details and every year goes off..

    ReplyDelete
    Replies
    1. Admission irunthalum deployment athu ithunu summa iluthadikiranka mam

      Delete
    2. இப்போதைக்கு போஸ்டிங் எல்லாம் வாய்ப்பில்லை ராஜா

      Delete
    3. ஆமா ராஜா வாய்ப்பில்லை

      Delete
    4. Friends, sure there will be TRT and PGTRB.. Don't get demotivated, keep studying..

      Delete
  2. இதையெல்லாம் கேட்டு கேட்டு என்ன பண்றீங்க ஒன்னும் இல்ல

    ReplyDelete
    Replies
    1. வேஸ்ட் வேலை

      Delete
    2. எல்லாம் கண்தொடைப்பு தான்

      Delete
    3. தொடைக்கற வேலை trb நல்லா பண்ணுவாங்க

      Delete
  3. Trb ethavathu oru mudivuku vanka

    ReplyDelete
    Replies
    1. இன்னுமா trbய இந்த உலகம் நம்புது

      Delete
  4. Ena than pana poranka intha trb. Coronavuku kuda oru end varumpola ivinkaluku varathu pola

    ReplyDelete
  5. பணம் கட்டி தேர்வு மட்டும் எழுதலாம் அது அரசுக்கு லாபம் தரும். ஆனால் வேலை கொடுத்தால் நஷ்டம் வருமே. அதனால வேலை கேக்காதீங்க அடுத்த தேர்வுக்கு பணம் கட்ட ஆளு ரெடியா இருக்கு நாங்க அந்த வேலைய பாக்கத்தான் நேரம் சரியாயிருக்க. அதனால வேலைகேக்காதீங்க. என்பதுதான் இந்த அரசு மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மைண்ட் வாய்ஸ். எனக்கு நல்லா கேக்குது. உங்களுக்கு????

    ReplyDelete
    Replies
    1. தேர்வு என்பது கண்துடைப்பு பணம் இருந்தால் மட்டுமே பணி வழங்கும் இந்த அரசு...அதற்கான வேடம் தேர்வு

      Delete
    2. நம்ம மைண்ட் வாய்ஸ் எல்லாம் trb க்கு கேக்கவே கேக்காதா

      Delete
  6. தேர்வு என்பது கண்துடைப்பு பணம் இருந்தால் மட்டுமே பணி வழங்கும் இந்த அரசு...அதற்கான வேடம் தேர்வு

    ReplyDelete
  7. தேர்வு என்பது கண்துடைப்பு பணம் இருந்தால் மட்டுமே பணி வழங்கும் இந்த அரசு...அதற்கான வேடம் தேர்வு

    ReplyDelete
  8. தேர்வு என்பது கண்துடைப்பு பணம் இருந்தால் மட்டுமே பணி வழங்கும் இந்த அரசு...அதற்கான வேடம் தேர்வு

    ReplyDelete
  9. தேர்வு என்பது கண்துடைப்பு பணம் இருந்தால் மட்டுமே பணி வழங்கும் இந்த அரசு...அதற்கான வேடம் தேர்வு

    ReplyDelete
  10. தேர்வு என்பது கண்துடைப்பு பணம் இருந்தால் மட்டுமே பணி வழங்கும் இந்த அரசு...அதற்கான வேடம் தேர்வு

    ReplyDelete
  11. உலகம் ஒரு நாடக மேடை நாம் அனைவரும் நடிகர்கள். Trb ஒரு ட்ராமா கம்பெனி

    ReplyDelete
  12. இன்னுமா trt வரும்னு எல்லாம் நம்புறீங்க அய்யோ அய்யோ

    ReplyDelete
  13. நீங்க கணக்கு எடுக்கிறதோட சரி அப்புறம் பணிநிரவல் அப்டினு சொல்லிட்டு போயிடுவீங்க

    ReplyDelete
  14. வீணாப்போன trb

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

COMPETITIVE EXAM FOR TET PASSED CANDIDATES - 2024

UGTRB - Teachers Recruitment Notification -pdf தமிழ்நாடு அரசு பள்ளிகளில் மற்றும் வட்டாரவளமையங்களில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் BRTE பணியிடங்களுக்கான UGTRB தேர்வு அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. 👉தமிழ்வழி இட ஒதுக்கீடு 20%  👉பணியில் இருக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 10% ஒதுக்கீடு  (NOC compulsory)  👉மாற்றுத்திறனாளிகள்  👉மூன்றாம் பாலினத்தவர் 👉69% Reservation  என அனைத்து ஒதுக்கீடு நடைமுறைகளும் முறையாக பின்பற்றப்படும்.  👉 காலிப்பணியிடங்கள் -2222 👉கல்வித்தகுதி -       BED + TNTET PAPER -2 Pass   👉விண்ணப்பம் - Online 01.11.2023 முதல் 30.11.2023 வரை  👉தேர்வு - Offline - OMR BASED  👉weightage Mark - உண்டு TET தேர்ச்சி பெற்ற ஆண்டின் அடிப்படையில் மதிப்பெண்.  ( விவரம் Notification)   As per G.O- 147 👉 கட்டாயத்தமிழ் தகுதித்தேர்வு - உண்டு  👉பாடவாரியாக தேர்வு உண்டு  👉150 கேள்வி - 150 மதிப்பெண்  👉 OC - 60 Mark தேர்ச்சி  👉BC/MBC/ DNC/ SC/ST - 40 MARK தேர்ச்சி  👉சா...

சும்மா கிடைக்கவில்லை சுதந்திரம்!!!

எத்தனை ஆண்டுகள் வாழ்கிறோம் என்பதைவிட எப்படி வாழ்கிறோம் என்பதே முக்கியம். 81 ஆண்டுகள் வாழ்ந்த எவ்வளவோ பேரைக் காலம் மறந்துவிட்டது. ஆனால் 18 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த ஒரு சுதந்திரப் போராட்ட வீரரை நினைவில் வைத்துள்ளது. குதிராம் போஸ் வங்காளப் புரட்சியாளர். இந்திய விடுதலை இயக்கத்தில் மிக இளம் வயதிலேயே புரட்சியில் ஈடுபட்டவர். ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக மாஜிஸ்திரேட் கிங்க்ஸ்போர்ட் என்பவர் மீது வெடிகுண்டு வீசி, தனது 18 ஆம் வயதில் தூக்குமேடை ஏறியவர். குதிராம் போஸ்க்கு முன் மூன்று பெண் குழந்தைகள் வீட்டில் ; ஆனால் வீட்டில் அதற்கு முன் பிறந்த இரண்டு ஆண்பிள்ளைகள் இறந்து போக இவரை தானியத்திற்கு தத்து கொடுத்தால் காப்பாற்றலாம் என்கிற நம்பிக்கையில் அம்மா தானம் கொடுத்து விட்டார் .தானியம் (குதி -வங்க மொழி ) மூலம் பெறப்பட்ட பிள்ளை என்பதால் குதிராம் ஆனார். இளவயதிலேயே அரவிந்தர்,நிவேதிதை ஆகியோரின் ஆவேசம் மிகுந்த பேச்சுகளை ரொம்ப இளம் வயதில் கேட்டு விடுதலைக்கனல் மூண்டது. யுகாந்தார் எனும் புரட்சி அமைப்பில் சேர்ந்து கிங்க்ஸ்போர்ட் எனும் ஆங்கிலேய அதிகாரிக்கு குறி வைத்தார் ;உடன் பிரபுல்லா சக்கி எனும் இன்னொருவர...

TNTET PAPER2 TAMIL QUESTIONS

This post is for Tamil questions which will include Cheyyul, Urainadai, Ilakkanam and also book back informations.. Anybody willing to post tamil questions can post here and candidates preparing for upcoming tet can make use of this, All the best..