அக்டோபர் 1 முதல் பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் மாணவர்கள் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும் - ஸ்டாலின்
மாணவ, மாணவியரின் எதிர்காலத்துடன், கொரோனா பேரிடர் ஒருபுறம் விளையாடுகிறது என்றால், மற்றொரு புறம், அவசர கதியில் மாணவர்களை, பள்ளிக்கு வரச் சொல்லி, விபரீத விளையாட்டை, அரசு நடத்துவது அதிர்ச்சி அளிக்கிறது.
பத்தாம் வகுப்பு முதல், 12 ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்காக, பள்ளிகளை, அக்., 1 முதல் திறக்க முடிவு செய்துள்ள, அரசு, மாணவ, மாணவியர், ஆசிரியர்கள் ஆகியோரின் பாதுகாப்பை, மிகக் கவனமாக முன்னெச்சரிக்கைப் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன், உறுதி செய்ய வேண்டும்.
கொரோனா எண்ணிக்கை, சென்னையில் மீண்டும் அதிகமாகும் நேரத்தில், பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பி விட்டு, பெற்றோர் பதற்றத்தில் இருக்க முடியாது. எழுத்துப்பூர்வமாக, பெற்றோரிடம் அனுமதி பெற்றுத் தானே வந்தீர்கள் என, மாணவர்களின் உயிர்ப் பாதுகாப்பில், அலட்சியமாக இருந்து விடக்கூடாது.
அரசு, தன் பொறுப்பைத் தட்டிக் கழிக்காமல், மாணவர்கள் ஒவ்வொருவரும், பள்ளிக்கு சென்று விட்டு, பத்திரமாக வீடு திரும்புவதை உறுதி செய்திடும் வகையில், முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- Get link
- X
- Other Apps
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment