Skip to main content

TODAY'S THOUGHT..

*ஓஷோவும்_அகப்பேய்_சித்தரும்*

தூராதி தூரமடி அகப்பேய் தூரமும் இல்லையடி
*அகப்பேய்_சித்தர்*

ஒரு  எளிய விவசாயி, அவன் வாழ்நாளில்  முதல் முறையாக ஒரு  மலைக்குச் சென்று கொண்டிருந்தான்.

         அவனுடைய  வயலிலிருந்து அந்த  மலையின் பசுமை  நிறைந்த  உச்சிகள் தெரிவதால், அவனுள் அடிக்கடி  அவற்றை அருகில்  சென்று  பார்க்க வேண்டும்  என்று  எண்ணம் ஏற்பட்டது.

 ஆனால்  ஏதோ காரணங்களினால்  அவனது பயணம் ஒத்திப் போடப்பட்டு வந்ததால் அவன் அங்கு  செல்ல முடியவில்லை. 

         சென்ற முறை அவனிடம்  ஒரு விளக்கு இல்லை என்பதற்காக அவன் மலைக்குச் செல்வது தடைப்பட்டு விட்டது.

  ஏனெனில்  இரவே மலையைச் சென்றடைவது மிகவும்  அவசியம்.

 சூரிய உதயத்திற்குப் பிறகு  அந்த கடினமான மலை மீது  ஏறுவது சிரமம்.

          இப்போது அவன் தன்னுடன் ஒரு விளக்கையும் எடுத்து வந்திருந்தான்.

 மேலும்  மலையில் ஏறவேண்டும் என்ற அவாவினால் அவன் இரவில்  தூங்கவும் இல்லை.

         அவன் இரவு இரண்டு  மணிக்கு  எழுந்து  மலைக்குப் புறப்பட்டான்.

 ஆனால்  கிராமத்தை விட்டு  வெளியில் வந்ததும் அவன் தயங்கி நின்று விட்டான்.

        அன்று அமாவாசையாதலால் சுற்றிலும் பயங்கர இருளாக இருக்குமே என்ற கவலையும், சந்தேகமும் அவனது மனத்தில் எழுந்தன.

          அவன் கையில்  விளக்கு ஒன்று  வைத்திருந்தான் என்பதில் சந்தேகம்  இல்லை. 

         ஆனால்  அந்த விளக்கின் ஒளி பத்து அடிகள் எடுத்து  வைக்கும் தூரம்தான்  தெரியும். 

ஆனால்  அவன் ஏற வேண்டியதோ பத்து மைல் தூரம். 

அவன் எப்படிச் செல்ல முடியும்?

         அந்த அடர்ந்த காரிருளில் சிறிய  மெழுகுவர்த்தியின் ஒளியில்   புறப்பட்டுச் செல்வது புத்திசாலித்தனம் ஆகுமா?

இது கடலில்  ஒரு சிறிய படகில் செல்வதைப் போன்றதாகும்.

         இவ்வாறு  எண்ணிக் கொண்டு  அவன் கிராமத்தின் வெளியே சூரிய உதயத்திற்காகக் காத்துக் கொண்டிருந்தான்.

        ஆனால்  அதே நேரத்தில்  மற்றொரு வயதான மனிதன்  தன்னைக் கடந்து மலையை நோக்கிச் செல்வதைப் பார்த்தான்.

        அந்த  மனிதன்  இவனிடமிருந்த விளக்கைவிட மிகச் சிறிய விளக்கையே வைத்திருந்தான்.

        அந்த  வயதான  மனிதனை நிறுத்தி அவனிடம் தனது சந்தேகத்தைக் கூறியதும் அந்த வயதான  மனிதன் சிரித்தான். 

       "பைத்தியக்காரா!
ஆரம்பத்தில்  நீ பத்தடிகள் எடுத்துவை.

நீ பார்க்க முடிந்த தூரம் வரை செல்.

பின் அதே அளவு தூரம்  உன் முன் விளக்கொளி இருப்பதை உணர்வாய்.

 உன் முன்னால்  ஒரு அடி தூரத்தைக் காண முடிந்தால் நீ அதன் உதவியால் இந்த  உலகம் முழுவதையும்  சுற்றி வரலாம்!"

 என்று  அந்த  வயதான  மனிதன் கூறினான்.

          அந்த  இளைஞன்  இதைப் புரிந்து  கொண்டு  எழுந்து நடந்தான்.

சூரியன்  உதயமாவதற்குள் மலையைச் சென்றடைந்தான்.

"நானும் அதைத்தான் உனக்குச் சொல்ல விரும்புகிறேன். 

 நீங்கள்  ஏன்  முடங்கிக் கொண்டு  உட்கார்ந்திருக்கிறீர்கள்?

எழுந்திருங்கள்;  நடந்து செல்லுங்கள்.

 நினைப்பவனல்ல, நடப்பவன்தான் சென்றடைய முடியும்.

 உன்னிடம் பத்து அடிகள்  எடுத்து  வைக்கும்  தூரத்திற்கு வேண்டிய  ஒளி இருந்தால் போதும்  என்பதை ஞாபகத்தில்  வைத்துக் கொள்.

 அதுவே  போதுமானது, கடவுளை அடைய அதுவே  போதுமானது."

*ஓஷோ*

Comments

  1. Gudmrng friends, brothers and sisters.. Have a blessed day ahead..

    ReplyDelete
  2. வணக்கம் தல

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

சிந்தனைச் சிதறல்..

மனம் ஒருமுகப்பட.. *காற்று ஒருமுகப்பட புயலாகிறது! மேகம் ஒருமுகப்பட மழையாகிறது.!  நீர் ஒருமுகப்பட நதியாகிறது!  நதி ஒருமுகப்பட கடலாகிறது!  மனம் ஒருமுகப்பட வெற்றி உருவாகிறது!  உங்களைக் கையாள மூளையைப் பயன்படுத்துங்கள்! மற்றவரைக் கையாள இதயத்தைப் பயன்படுத்துங்கள்!  இதயத்தைக் கவர்ந்துவிட்டு, எதைச் செய்தாலும், அது இணக்கமாகவே இருக்கும்.  வாயில் உதிரும் வார்த்தைகளை விட இதயத்திலிருந்து உதிரும் வார்த்தைகளால் அன்பு மலரும்! அன்பே ஆனந்தம் தரும்.*_ கோபம் ஒரு சுயதண்டனை, அடுத்தவர் செய்த தவறுக்கோ அல்லது அடுத்தவர் தவறு செய்திருக்கலாம் என்ற நிலையிலோ நமக்கு நாமே கொடுத்துக் கொள்கிற தண்டனைதான் கோபம்!  கோபத்தில் நடிப்பிருக்கலாம்! துடிப்பிருக்கக்கூடாது!*_  *உறவுகள் கூட நிலவைப் போன்று தான்..!* *"தூரத்தில்" இருக்கும் வரை* *ரசித்துக் கொண்டாடப்படும்..!!* *எதிர்பார்ப்பை* *குறைத்துக் கொள்ளுங்கள்..!* *ஏமாற்றத்தால் சோர்வடையத்* *தேவையில்லை..!!* *அன்று "வயதைப்"* *பார்த்து வந்தது..* *இன்று "வசதியைப்"* *பார்த்து தான் வருகிறது..!!* *"மரியாதை"* *செல்லும் பாதை*  *சரியானதாக இல்லாத போது..*

அமைதி..

நாட்டில் அவ்வப்போது ஏதாவது போட்டிகள் நடத்தி வெற்றி பெறுபவர்களுக்கு சன்மானம் அளிப்பது அந்த மன்னனின் வழக்கம். ஒரு முறை அமைதி என்றால் என்ன என்பது குறித்து தத்ரூபமான ஓவியம் வரைபவர்களுக்கு மிகச் சிறந்த பரிசு வழங்கப்படும் என்று அறிவித்தான். இதையடுத்து நாட்டின் முன்னணி ஓவியர்கள் அமைதியை பிரதிபலிக்கும் வண்ணம் தத்ரூபமான பல ஓவியங்களை வரைந்து அரண்மனைக்கு எடுத்து வந்தார்கள். மன்னன் ஒவ்வொரு ஓவியமாக பார்வையிட்டுக் கொண்டே வந்தான். அமைதியை ஒவ்வொரு ஓவியரும் ஒரு மாதிரி பிரதிபலித்து இருந்தார்கள். ஒருவர் அழகான ஏரியை வரைந்திருந்தார். ஒரு அழகிய மலையின் அடிவாரத்தில் அந்த ஏரி காணப்பட்டது. மலையின் பிம்பம் ஏரியில் பிரதிபலித்து பார்க்கவே ரம்மியமாக இருந்தது. மற்றொருவர் மலர்களை வரைந்திருந்தார். பார்த்தவுடனே பறிக்கத் தூண்டும் வகையில் அம்மலர்கள் தத்ரூபமாக இருந்தது. இப்படி ஒவ்வொருவரும் அமைதியை தங்களுக்கு தோன்றியவாறு ஓவியத்தில் பிரதிபலித்திருந்தனர். ஒரு ஓவியத்தில் ஒரு மலையின் மீதிருந்து ஆக்ரோஷமாக கொட்டும் நீர்வீழ்ச்சியின் படம் வரையப்பட்டிருந்தது. அதுமட்டுமா இடியுடன் மழை வேறு பொழிந்து கொண்டிருந்தது. இது அமைதியே அல்ல.

படித்ததில் பிடித்தது..

 கடவுளிடம் ஒரு விவசாயி கடுமையாகச் சண்டைக்குப் போனான். ”உனக்குப் பயிர்களைப் பற்றி என்ன தெரியும்? நீ  நினைத்தபோது மழையை அனுப்புகிறாய். தப்பான சமயத்தில் காற்றை வீசுகிறாய். உன்னால் பெரிய தொந்தரவாக இருக்கிறது. பேசாமல், இந்த வேலைகளை விவசாயி ஒருத்தனிடம் ஒப்படைத்துவிடேன்!” என்றான். கடவுள் உடனே,  “ அப்படியா? சரி.  இனிமேல் வெளிச்சம், மழை, காற்று எல்லாம் உன் கட்டுப்பாட்டிலேயே இருக்கட்டும்” என்று வரம் அருளிவிட்டுப் போய்விட்டார். விவசாயிக்கு சந்தோஷம் பிடிபடவில்லை. அடுத்த விதைப்பிற்கான பருவம் வந்தது. ”மழையே பெய்” என்றான். பெய்தது. நிறுத்தச் சொன்னபோது,  மழை நின்றது. ஈரமான நிலத்தை உழுதான். தேவையான வேகத்தில் காற்றை வீசச் செய்து,  விதையை தூவினான். மழை, வெயில், காற்று எல்லாமே அவன் சொன்ன பேச்சைக் கேட்டன. பயிர் பச்சைப்பசேல் என வளர்ந்தது. வயல்வெளியைப் பார்க்கவே மிகவும் ரம்மியமாக இருந்தது. அறுவடைக் காலமும் வந்தது. விவசாயி ஒரு கதிரை அறுத்தான். அதனை உதிர்த்து, திறந்து பார்த்தான். அதிர்ந்தான்.. உள்ளே தானியத்தைக் காணவில்லை, மிகச் சிறிய பதர்தான் இருந்தது. அடுத்தது, அதற்கடுத்தது என்று ஒவ்வொரு தானியக்கதிராக வெட்டி