Skip to main content

சுர்ஜித்..

அழுவாமல் இரு....!
     அம்மா இருக்கிறேன் என் கண்ணோ....!
   நீ அழுவாமல் இரு.....!
என்று கண்ணீர் ஆறாய் பெருக்கெடுத்த தாயின்
அழுகுரல்.....!

செத்த நேரம் அழுவாமல் இரு என்று உனக்கு தைரியம் சொல்லிக் கொண்டே..... மகப்பேறுவின் மறு வலியை அனுபவித்து கொண்டிருக்கிறாள் ஒரு தாய்.....!

என் அம்மா இருக்கிறாள் 
 என்ற நம்பிக்கையோடு
தன் உயிர் ஊசலாடிக் கொண்டிருக்கையிலும் ஒரு நம்பிக்கையில் அவள் குழந்தை...!

7000 அடி குழிக்குள் இருக்கும் மீத்தேன், ஹைட்ரோகார்பன் எடுக்க கருவியிருக்கும் என் அரசிடம்....
70 அடி குழிக்குள் விழுந்த என் மகனை மீக்க கருவியில்லை, ஆனாலும் அம்மா இருக்குறேன் அழுவாமல் இரு.....!

14 பேரை குற்வைத்து இலக்கு மாறாமல் துப்பாக்கி முனையில் வேட்டையாடிய என் அரசிடம்....
24- மாத என் மகனை மீக்க வழியில்லை, ஆனாலும் அம்மா இருக்குறேன் அழுவாமல் இரு......!

8 வழி சாலைக்கு எதிராக போராடியவர்களை எல்லாம் சுற்றி வளைக்க தெரிந்த எம் அரசுக்கு.... உன்னை எப்படி மீட்பது என்று தெரியவில்லை, ஆனாலும் அம்மா இருக்குறேன் அழுவாமல் இரு ......!

கூவத்தூரில் குரூப் டான்ஸ்   போட மட்டும் தெரிந்த எம் அமைச்சர்களுக்கும் ஆட்சியாளர்களுக்கும் உயிரோடு உன்னை என்னிடம் கொடுப்பதா இல்லை குழிக்குளே புதைப்பதா-என்று மீண்டும் கூவத்தூரில் கூடி முடிவெடுப்பார்கள் போல....ஆனாலும் அம்மா இருக்கிறேன் அழுவாமல் இரு......!

ஆழ்கடல் ஆராய்ச்சியில் அதிநவீன தொழிற்நுட்பத்தை பயன்படுத்திய எம் நாட்டு விஞ்ஞானத்தல் அரை அடி சாக்கடைக்குள்ளும், ஆழ்துளை கிணறுக்குள்ளும் விழுந்த வந்தவர்களை எப்படி மீக்க போகிறோம் என்று உலக பன்னாட்டு முதலாளிகளுடம் எம் நாட்டு விஞ்ஞானம் கலந்தலோசித்து முடிவெடுக்கும் வரை அம்மா உன்னோடு இருக்கிறேன் அழுவாமல் இரு.....!

உன்னை மீட்க்க "சுருக்கு" பையோடு வருகிறது இந்த அரசு....
என்னை மன்னித்து விடு மகனே...!

என் ஒற்றை விரலில் பூசிய அந்த கருப்பு "மை" நம் வாழ்க்கையே இருட்டாக்கும் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை....!


        வாழ்க சனநாயகம்

             

Comments

  1. Gudmrng friends, brothers and sisters.. Have a blessed day ahead..

    ReplyDelete
  2. Madam trt pathi matum trb ethumey solama irukankaley

    ReplyDelete
    Replies
    1. Sir competitive exam vekkama BT posting poda mudiyadhu, so be confident..

      Delete
  3. Pg cv vanthachu trt eppa than varum madam

    ReplyDelete
  4. Pg cv vanthachu trt eppa than varum madam

    ReplyDelete
  5. Trtexam arivipu November month ethirpakkalama, after electionku pin ethirpakkalama mam pg exam cvku Nan select agala mam ennaku valkai verruthu pochu mam trt exam arivipu varuma mam pls reply

    ReplyDelete
    Replies
    1. Indha year end kulla notification varumnu dhan information kedachuthu..

      CV ku select agalanu feel panadhinga friend, unga muyarchiya matum vitradhinga, remember 99% of failure is what called as success..

      Delete
  6. Sister 12 the passed year March 2003 ku pathila June 2003 nu online application la by mistake potten.. CV la edhum prbm varumaa sis

    ReplyDelete
    Replies
    1. Online la panadha change pana mudiyadhu, but unga kitta proof iruku so CV apo adha rectify panidunga.. Idhula problem vara edhum ila, online la typo errors irukka dhan seiyyum

      Delete
  7. madam two doubts: pg trb cv la community certificate old card la iruku 10 years mela accept panipamgala.....
    and nan last ah mphil mudichen ...conduct certificate mphil or msc vanagnuma....

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

COMPETITIVE EXAM FOR TET PASSED CANDIDATES - 2024

UGTRB - Teachers Recruitment Notification -pdf தமிழ்நாடு அரசு பள்ளிகளில் மற்றும் வட்டாரவளமையங்களில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் BRTE பணியிடங்களுக்கான UGTRB தேர்வு அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. 👉தமிழ்வழி இட ஒதுக்கீடு 20%  👉பணியில் இருக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 10% ஒதுக்கீடு  (NOC compulsory)  👉மாற்றுத்திறனாளிகள்  👉மூன்றாம் பாலினத்தவர் 👉69% Reservation  என அனைத்து ஒதுக்கீடு நடைமுறைகளும் முறையாக பின்பற்றப்படும்.  👉 காலிப்பணியிடங்கள் -2222 👉கல்வித்தகுதி -       BED + TNTET PAPER -2 Pass   👉விண்ணப்பம் - Online 01.11.2023 முதல் 30.11.2023 வரை  👉தேர்வு - Offline - OMR BASED  👉weightage Mark - உண்டு TET தேர்ச்சி பெற்ற ஆண்டின் அடிப்படையில் மதிப்பெண்.  ( விவரம் Notification)   As per G.O- 147 👉 கட்டாயத்தமிழ் தகுதித்தேர்வு - உண்டு  👉பாடவாரியாக தேர்வு உண்டு  👉150 கேள்வி - 150 மதிப்பெண்  👉 OC - 60 Mark தேர்ச்சி  👉BC/MBC/ DNC/ SC/ST - 40 MARK தேர்ச்சி  👉சான்றிதழ் சரிபார்ப்பு - உண்டு Notification in pdf-  Click Here 

TNTET PAPER2 TAMIL QUESTIONS

This post is for Tamil questions which will include Cheyyul, Urainadai, Ilakkanam and also book back informations.. Anybody willing to post tamil questions can post here and candidates preparing for upcoming tet can make use of this, All the best..

TODAY'S THOUGHT..

 மழை! ஓயாத மழை! ஏரி நிறைந்து வழியும் அளவுக்கு மழை.அந்த ஏரி நீர் குளிர்ச்சி அடைந்து விட்டது. அந்தக் குளிரைத் தாங்க முடியாத ஒரு தவளை, மழை ஓய்ந்ததும் சற்று தூரத்திலுள்ள ஒரு கிணற்றுக்கு வந்தது. கிணற்று நீர் வெது வெதுப்பாக இருக்குமே என்பதால் கிணற்றிற்குள் குதித்தது. அந்தக் கிணற்றில் பல காலமாக வாழ்ந்து வந்த தவளைகளில் ஒரு தவளை இந்தப் புதிய தவளையை வரவேற்றது. ‘நான் வெகு நாட்களாகப் பேச்சுத் துணைக்குக்கூட ஆளில்லாமல் தவித்துக் கொண்டிருந்தேன். உன்னைக் கண்டதும் எனக்கு மகிழ்ச்சி’ எனக் கூறிப் பொந்தில் வைத்திருந்த உணவு வகைகளைப் புதிய தவளைக்குத் தந்தது. இரண்டு தவளைகளும் பேசிக் கொண்டிருந்தன. கிணற்றிலிருந்த மற்ற தவளைகளுக்குப் புதிய தவளை வந்தது பிடிக்கவில்லை. ‘இங்கே கிடைக்கும் உணவு நமக்கே போதவில்லை. இதில் புதிய விருந்தாளி வேறு’ எனக் கவலைப்பட்டன. புதிய விருந்தாளியை எப்படியும் துரத்தி விட முடிவு செய்தன. நல்ல சமயம் பார்த்து கொண்டு இருந்தன.இரண்டு தவளைகளும் பேசிக்கொண்டிருப்பதை அருகே சென்று வேடிக்கை பார்த்தன. அப்போது அக்கிணற்றுத் தவளை ஏரித்தவளையிடம், நண்பனே!நீ இத்தனை நாளும் எங்கே தங்கியிருந்தாய்?’ எனக்கேட்டது. ‘